என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி.
    • 'நாசா' போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன.

    வாஷிங்டன் :

    கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா 'அதிரடி' விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு.

    ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடுவது அல்லது உடைந்து சிதறிவிடும். மிக அரிதாக சில சிறுகோள்கள் அல்லது எரிநட்சத்திரங்கள் மட்டும் பூமிப் பரப்பை அசுர 'முத்தம்' இட்டதும் நடந்திருக்கிறது. அதன் தாக்கமும் கடுமையாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவான பெரும்பள்ளங்கள் இன்றும் பூமியின் முகத்தில் 'தழும்புகளாய்' காட்சி அளிக்கின்றன.

    எனவே, பாறை, உலோகம் அல்லது பனியால் ஆன இந்த சிறு, குறுங்கோள்கள் பூமியை நெருங்கிவரும்போது, அமெரிக்காவின் 'நாசா' போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விழிப்போடு கண்காணிக்கின்றன.

    அதன் விளைவாக, மணிக்கு 67 ஆயிரத்து 656 கி.மீ. என்ற அதிபயங்கர வேகத்தில், 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி சீறிவருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    ஒரு விமானத்தின் அளவிலான, பாறையாலான '2023 எப்இசட்3' என்ற அந்த சிறியகோள், நாளை (6-ந்தேதி) பூமியை 'நெருங்கி' வருகிறது. அச்சப்பட வேண்டாம். இந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வந்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லப்போகிறது.

    பல லட்சம் கி.மீ. தூரம் என்றாலும், விண்வெளி பார்வையில் 'அருகில்' தான் (ரியல் எஸ்டேட்காரர்கள் 'சென்னை மிக அருகில்' என்று சொல்வது போல).

    அப்படி இந்த சிறுகோள் 'கொஞ்சம்' பக்கத்தில் வந்தாலும், ஆபத்தில்லை என்பதில் நாம் அமைதியடையலாம்!

    • மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வாழத்துகளை தெரிவித்தனர்.
    • மகாவீர் சுவாமிகளின் விழுமியங்களை நாம் அங்கீகரித்து, அமைதி, உண்மை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ முயற்சிப்போம்.

    நாடு முழுவதும் நேற்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வாழத்துகளை தெரிவித்தனர்.

    அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

    ஜில் மற்றும் நான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான மகாவீர் ஜெயந்தி அமைய வாழ்த்துகிறோம்.

    இன்று, மகாவீர் சுவாமிகளின் விழுமியங்களை நாம் அங்கீகரித்து, அமைதி, உண்மை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • டிரம்ப் புளோரிடாவில் இருந்து விமானத்தில் நியூயார்க்குக்கு புறப்பட்டார்.
    • டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

    கடந்த 2016ம் ஆண்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் போட்டியின்போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.

    தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.

    இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.

    அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இன்று கோர்ட்டில் டிரம்ப் சரண் அடைவதாக கூறப்பட்டது. இதற்காக அவர் புளோரிடாவில் இருந்து விமானத்தில் நியூயார்க்குக்கு புறப்பட்டார். சுமார் 2.30 மணி நேர பயணத்துக்கு பிறகு நியூயார்க்கை வந்தடைந்த டிரம்ப் அங்குள்ள டிரம்ப் டவர் கட்டிடத்துக்கு சென்றார்.

    அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து கைய சைத்தபடி சென்றார். அங்கு இரவு தங்கிய டிரம்ப் இன்று வழக்கு விசாரணைக்காக மன்ஹாட்டன் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அங்கு, சுமார் 10-15 நிமிடங்கள் நடைபெறும் விசாரணையில் குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு வாசிக்கப்பட்டது.

    இந்நிலையில், டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையொட்டி நியூயார்க்கில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் போட்டியின்போது அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது.

    இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இன்று கோர்ட்டில் டிரம்ப் சரண் அடைகிறார். இதற்காக அவர் புளோரிடாவில் இருந்து விமானத்தில் நியூயார்க்குக்கு புறப்பட்டார். சுமார் 2.30 மணி நேர பயணத்துக்கு பிறகு நியூயார்க்கை வந்தடைந்த டிரம்ப் அங்குள்ள டிரம்ப் டவர் கட்டிடத்துக்கு சென்றார். அப்போது திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து கைய சைத்தபடி சென்றார்.

    அங்கு இரவு தங்கிய டிரம்ப் இன்று வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர் ஆகிறார். அப்போது அவரது விரல் ரேகை உள்ளிட்ட பயோ மெட்ரிக் பதிவுகள் சேகரிக்கப்படும். விசாரணைக்கு டிரம்ப் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளதால் கைது வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டிரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்படலாம்.

    டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையொட்டி நியூயார்க்கில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அந்நகரில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் ஆஜராகும் கோர்ட்டு வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதற்கிடையே நியூயார்க் மேயர் எரிக் ஆடும்ஸ் கூறும்போது, டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் போது வன்முறையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். நியூ யார்க்குக்கு வருவதை பற்றி சில குழப்பவாதிகள் யோசித்துக் கொண்டு இருக்கலாம். எங்கள் செய்தி தெளிவாக உள்ளது. எளிதாக உங்களை நீங்களே கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மேலும் குறிப்பிட்ட நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றார்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தனது கட்சியினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவருக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது.

    கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.

    வருகிற 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது.

    இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதன்பின் அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.

    இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இதில் நிலவுக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் நிலவுக்கு அனுப்ப நான்கு விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், பெண் வீராங்கனையான கிறிஸ்டினா கோச், கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர். ஜெர்மி ஹேன்சன் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். இவர்கள் 4 பேரும், நீல நிற விண்வெளி உடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

    கிறிஸ்டினா கோச், நிலவு பயணத்துக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார். அவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது விண்வெளி நடைபயணத்தில் பங்கேற்ற முதல் முழு பெண் என்ற பெருமையை பெற்றார்.

    ஆர்ட்டெமிஸ்-2 விண்கலம் நிலவை வட்டமிடும். ஆனால் அதன் மீது தரையிறங்காது.

    • டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
    • டுவிட்டரின் லோகோவை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார்.

    வாஷிங்டன்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதன்பின் டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதோடு டுவிட்டர் புளூ திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்களை அறிவித்தார். அந்த வரிசையில், டுவிட்டரில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை எலான் மஸ்க் எடுத்துள்ளார்.

     

    இந்த நிலையில் டுவிட்டரின் லோகோவை எலான் மஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார். ஏற்கனவே அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்த நீலநிற குருவிக்கு பதில் டாகி சின்னம் தற்போது லோகோவாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் டுவிட்டர் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. டாகி காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பிட்காயின் போன்ற பிற கிரிப்டோகரன்சிகளை கேலி செய்யும் வகையில் 2013-ம் ஆண்டு டாகி காயினுக்கு ஷிபா இனுவின் நாய் படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 15-ந் தேதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் கணக்கில் ஷிபா இனுவின் நாய் படத்தை வெளியிட்டு டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமாக இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகப்பட்டவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் அல்லவா! டிரம்ப் என்றாலே வம்புக்கு பஞ்சமில்லாத மனிதர் என்றே சொல்ல வேண்டும்.
    • தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் அழகி ஸ்டோர் மியுடன் வைத்திருந்த தொடர்பு வைரலாகி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    அப்போது எனக்கு 27...,

    அப்படியிருந்தும் அவரோடு உல்லாசமாக இருப்பதில் எனக்கு சந்தோசமே. ஏனெனில் அவர் அமெரிக்காவின் அதிபர்.

    இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல் சர்வ சாதாரணமாக சொல்லி சென்று விட்டார்.

    அகப்பட்டவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் அல்லவா! டிரம்ப் என்றாலே வம்புக்கு பஞ்சமில்லாத மனிதர் என்றே சொல்ல வேண்டும்.

    அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலை என்று அதிரடியாக பேசி தேர்தலில் வெற்றிபெற்று 2016-ல் அதிபர் ஆனார். உலக அளவில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் டிரம்புக்கு மீண்டும் அதிபர் ஆக ஆசை ஏற்பட்டுள்ளது.

    இதற்காக அவர் தயாராகி வரும் நிலையில் தான் அவர் பெண் மீது வைத்த ஆசையும், அதற்காக வாரி இறைத்த பணமும் இப்போது அவருக்கு எதிரியாகி உள்ளது.

    தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் அழகி ஸ்டோர் மியுடன் வைத்திருந்த தொடர்பு வைரலாகி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது ஸ்டோர்மியை பேசவிடாமல் தடுப்பதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 5 லட்சத்து 82 ஆயிரத்து 906 ரூபாய் வழங்கி இருந்தாராம்.

    இந்த குற்றச்சாட்டு எழுந்தாலும் அதிபரானதால் அமுங்கிப்போனது. இப்போது அதிபராக ஆசைப்படும் நேரத்தில் அந்த விவகாரம் குறுக்கே வந்துள்ளது.

    வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரசார நிதி சட்டங்களை மீறியதாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த கிரிமினல் வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் டிரம்பே தெரிவித்து இருப்பதுதான் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்றும் அவரது வக்கீல் ஜோ டகோபினா தெரிவித்தார்.

    சரணடைந்து விவகாரத்தை முடித்துவிட்டு வெளியே வந்துவிடலாம் என்று நினைத்த நேரத்தில் ஆபாச நாயகியுடனான அந்தரங்க லீலைகளை அந்த நாயகி வெளிப்படையாகவே தெரிவித்து இருப்பது புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

    2006 ஜூலை மாதம் நடந்த கோல்ப் போட்டியின் போது நான் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரபலமாக இருந்தார்.

    அப்போது எனக்கு வயது 27. ஆனால் டிரம்பின் வயது 60. அந்த நேரத்தில் தான் டிரம்பின் 3-வது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்து 4 மாதங்கள் ஆகி இருந்தது. அவரது மெய்க்காப் பாளர்கள் என்னை பென்ட் அவுஸ் விடுதிக்கு இரவு விருந்துக்கு அழைத்து சென்றார்கள். அன்றுமுதல் டிரம்புடன் எனது உறவு தொடங்கியது.

    நான் நடந்தவைகளை பற்றித்தான் முழுமையமாக வெளிப்படுத்தி புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். எனக்கு டொனால்டு டிரம்பை பார்த்து பயமில்லை. அவரை நிர்வாணமாகவே பார்த்தவள் நான். எனவே இப்போது அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது.

    டொனால்டு டிரம்ப் ஏற்கனவே ஒரு கலவரத்தை தூண்டிவிட்டு மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியவர். அவர் தற்போது கைது செய்யப்பட்டாலும் அல்லது விளைவு எதுவாக இருந்தாலும் அது வன்முறையை ஏற்படுத்தப் போகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒன்றா? இரண்டா? டிரம்புக்கு பெண்களுடனான சகவாசம் பற்றி எடுத்துச் சொல்ல...?

    இப்போது டிரம்புக்கு 76 வயதாகிறது. தைரியமாக அவர் மீது புகார் சொன்ன நடிகைகளின் பெயர் பட்டியலே 19 என்கிறார்கள்.

    ஜெசிகா டிரேக். இவரும் ஒரு ஆபாச நடிகைதான். இவர் டிரம்புடனான நெருக்கம் பற்றி கூறியதாவது:-

    கலிபோர்னியாவில் உள்ள லேக் தகூவில் நடந்த கோல்ப் போட்டியின் போது நான் டொனால்டு டிரம்பை முதல்முதலாக சத்தித்தேன். அவர் என்னுடன் கடலை போட்டார். ஜொள்ளு விடுகிறார் என்பதை புரிந்து கொண்டேன். கோல்ப் மைதானத்தில் தன்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு சொன்னார்.

    பிறகு என்னை அவருடைய ஓட்டல் ரூமுக்கு அழைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன். ஓட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற 2 பெண்களையும் பார்த்ததும் மூவரையும் இழுத்து பிடித்து கட்டிப்பிடித்தார். எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்த மிட்டார். காதல் போதை அவரது கண்களில் தெரிந்தது.

    தனது அறைக்கு வருமாறும், எவ்வளவு பணம் வேண்டும் என்றும் கேட்டார். மறுபடியும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள என்னுடைய வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என்று சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசை வெட்கம் அறியாது என்பார்கள். அந்த மன நிலையில் தான் டிரம்ப் இருந்திருக்கிறார். ஆபாச பட நாயகிகளுக்கு ஏது வெட்கம்.

    "அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்.

    அவன் பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே..."

    என்று கண்ணதாசன் பாடியது போல் நிஜத்தில் அந்த வயதிலும் ஆடி கூடி கலந்திருக்கிறார்.

    அந்த அந்தரங்கங்கள் இப்போது அரங்கத்துக்கு வந்திருப்பதால் டிரம்ப் என்ற ஆண் சிங்கம் (அ)சிங்கம் ஆகி நிற்கிறது.

    டிரம்ப் புளோரிடாவில் இருந்து இன்று நியூயார்க் செல்கிறார். அங்கு இரவு டிரம்ப் டவரில் தங்குகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் மன்ஹாட்டன் நகருக்கு சென்று கோர்ட்டில் சரண் அடைய போவதாக கூறப்படுகிறது. டிரம்ப் வருவதால் கோர்ட்டில் மற்ற வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்துக்கும் தயாராகி வருகிறார்கள். நிலைமையை சமாளிக்க போலீஸ் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அலாங்காவில் உள்ள ஆண்ட்ரியானோப் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.

    சிபினி:

    பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது.

    பப்புவா நியூகினியாவின் கடலோர நகரமான வெவாக்கில் இருந்து சுமார் 97 கி.மீ. தொலைவில் 62 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பயத்தில் அலறி அடித்து வெளிேய ஓடி வந்தனர். இந்தோனேசியாவின் எல்லை பகுதியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமோ என அஞ்சப்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    இதேபோல அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாங்காவில் உள்ள ஆண்ட்ரியானோப் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.

    இந்த நிலநடுக்கங்களால் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி ஏற்பட்டது.
    • இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆனது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாகாணங்களில் பல நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் பேர் இருளில் தவித்து வருகின்றனர்.

    டென்னிசி மாகாணம், வின், அர்கனாஸ், சுல்லிவன், இண்டியானா நகரங்கள் மற்றும் இல்லினாய்ஸ், அலபாமா, மிச்சிபி மற்றும் லிட்டில் ராக் பகுதிகளில் பொதுமக்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புயலால் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மேலும் பல உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பல புயல்கள் தாக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் இத்தாலி வீரர் சின்னரை வென்று கோப்பையை கைப்பற்றினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை சந்தித்தார்.

    இதில் மெத்வதேவ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் வென்றார்.

    • நடுவானில் பறந்த போது பலூனில் திடீரென்று தீப்பிடித்தது.
    • ராட்சத பலூனில் பயணிகள் அலறினார்கள்.

    மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டது. அதில் 3 பேர் பயணம் செய்தனர். நடுவானில் பறந்த போது பலூனில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் ராட்சத பலூனில் பயணிகள் அலறினார்கள். அப்போது 39 வயது பெண், 50 வயது ஆண் ஆகிய 2 பேர் பலூனில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் ஒரு சிறுவனுக்கு முகத்தில் தீக்காயமும், வலது தொடையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

    • மியாமி ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் ரிபாகினாவை வென்று பெட்ரா கிவிடோவா கோப்பை வென்றார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று நடந்தது. இதில் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார்.

    இதில் கிவிடோவா 7-6 (16-14), 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை வென்றார்.

    ×