என் மலர்
அமெரிக்கா
- கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார்.
- ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டில்,கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. அங்கு லட்சக்கணக்கானோரின் உயிரைகொரோனா பறித்ததோடு பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய கொரோனா அவசர நிலையை பிறப்பித்தார். இதனையடுத்து அந்த உத்தரவு அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அந்த அவசர நிலை உத்தரவு காலாவதியானது. இதற்கிடையே அதனை முடிவுக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
- உலக வர்த்தக அமைப்பு இன்னும் முற்போக்கு தனமாக இருக்க வேண்டும். எல்லா நாடுகளின் பேச்சை கேட்டு நியாயமாக இருக்க வேண்டும்.
- இந்தியாவில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் நிறைவை அடைந்து இருக்கிறோம்.
வாஷிங்டன்:
இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், ஜி.20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கவும் அங்கு சென்று இருக்கிறார்.
இதற்கிடையே வாஷிங்டனில் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எகனாமிக்சில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுக்கு முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலீடுகளை பெறுவதில் ஆர்வமுள்ள ஒருவர் என்ற முறையில், களத்தில் கால் கூட வைக்காத நபர்களால் உருவாக்கப்படும் கருத்துக்களை கேட்பதை விட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வாருங்கள் என்று கூறுவேன்.
இந்தியாவில் 2-வது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது. சிறுபான்மையினரை பாதுகாப்பதாக உறுதியளித்து இஸ்லாமிய நாடாக தன்னை பிரகடனப்படுத்திய போதிலும் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மை குழுவும் எண்ணிக்கையில் குறைந்துவிட்டன.
சில முஸ்லிம் பிரிவுகள் கூட அழிக்கப்பட்டுள்ளன. முகாஜிர்கள், ஷியாக்கள் உள்ளிட்ட குழுவிற்கு எதிராக வன்முறை நிலவுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லிம்களும் தங்கள் வியாபாரத்தை செய்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள்.
பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
உலக வர்த்தக அமைப்பு இன்னும் முற்போக்கு தனமாக இருக்க வேண்டும். எல்லா நாடுகளின் பேச்சை கேட்டு நியாயமாக இருக்க வேண்டும்.
இந்தியா, திறன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்த போகிறது. இதனால் எளிதாக வாழ்வது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் ஆகியவை ஏற்படும்.
ஏழை மக்களை குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் அணுகுமுறை ஆகும். இந்தியாவில் அடிப்படை வசதிகளை வழங்குவதில் நாங்கள் நிறைவை அடைந்து இருக்கிறோம்.
அவர்கள் குடியிருக்க நல்ல வீடுகள், கழிப்பறைகள், குடிநீர் குழாய்கள், மின்சாரம், நல்ல சாலை, போக்குவரத்து வசதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி சேர்க்கை மூலம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் 2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
- இதில் ஜோ பைடன் 2-வது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, 46-வது அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஜோ பைடன் தலைமையிலான அரசு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனிடையே அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் , கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுவர்களா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதே சமயம் இதுகுறித்த உறுதியான முடிவு விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வரலாற்றில் மிகவும் வயதான அமெரிக்க அதிபர் ஆவார்.
இதனிடையே குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். எனவே டொனால்டு டிரம்ப்பை வீழ்த்த ஜோ பைடனை மீண்டும் அதிபர் வேட்பாளராக நிறுத்தவற்கான முயற்சியில் ஜனநாயக கட்சி ஆலோசித்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
- தாக்குதல் நடத்திய நபர் வங்கியின் முன்னாள் ஊழியராக இருக்கலாம் என தெரிகிறது.
- பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி கவர்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இருப்பிலும் அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களை பீதியில் ஆழ்த்துகின்றன. அவ்வகையில், கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லி நகரத்தில் உள்ள பழைய தேசிய வங்கியைக் குறிவைத்து இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளான். இதையடுத்து போலீசார் அந்த வங்கியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர்.
துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரும் இறந்துவிட்டான். அந்த நபர் வங்கியின் முன்னாள் ஊழியராக இருக்கலாம் என தெரிகிறது. அந்த நபர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டானா? அல்லது அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டானா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் வங்கிக் கட்டிடத்திற்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி கவர்னர் ஆண்டி பெஷீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
- வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தி உள்ளது.
அமெரிக்காவிற்கான மாணவர் விசாக்கள் இப்போது கூடுதலாக 25 டாலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா செயலாக்கக் கட்டணங்களின் அதிகரிப்பின் படி, வணிகம் அல்லது சுற்றுலா (பி1/பி2எஸ் மற்றும் பிசிசிகள்) வருகைக்கான விசாக்களின் செலவு, அத்துடன் மாணவர் போன்ற பிற மனு-அடிப்படையிலான என்IVகள் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசாக்கள், 160 டாலரில் இருந்து 185 டாலராக ஆக அதிகரிக்கவுள்ளது.
தற்காலிக பணியாளர்களுக்கான (எச், எல், ஒ, பி, கியூ மற்றும் ஆர்பிரிவுகள்) குறிப்பிட்ட மனு அடிப்படையிலான குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணம் 190 டாலரில் இருந்து 205 டாலராக ஆக உயரும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
ஒப்பந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒரு சிறப்புத் தொழிலுக்கான (இ வகை) பயணிகள் 205 டாலரிருந்து 315 டாலராக அதிகரித்த செலவைச் செலுத்த வேண்டும். மேலும், இந்த ஆண்டு 1 மில்லியன் விசாக்களை வழங்க வெளியுறவுத்துறை விரும்புவதாக விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளரான ஜூலி ஸ்டப்ட்டின் கூறியுள்ளார். இது வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
- விசேஷம் என்னவென்றால் ஆன்ட்ருவின் பரம்பரையில் கடந்த 1885-ம் ஆண்டில் இருந்து இதுவரை பெண் குழந்தைகள் பிறக்கவில்லை.
- தம்பதியினர் நம்பிக்கை இழக்காமல் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தனர்.
அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த கரோலின்-ஆன்ட்ரு கிளார்க் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் கேமரூன் என்ற ஒரு மகன் உள்ளான். தற்போது 2-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆட்ரி என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் விசேஷம் என்னவென்றால் ஆன்ட்ருவின் பரம்பரையில் கடந்த 1885-ம் ஆண்டில் இருந்து இதுவரை பெண் குழந்தைகள் பிறக்கவில்லை.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கரோலின் இதை அறிந்த போது மிகவும் அவருக்கு ஆச்சரியமாக இருந்துள்ளது. இதனால் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என கரோலின் ஆசைப்பட்டார். ஆனால் 2 முறை அவர் கருச்சிதைவை சந்தித்தார். ஆனாலும் தம்பதியினர் நம்பிக்கை இழக்காமல் ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் தான் மகள் பிறந்த சந்தோசத்தை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தனது பரம்பரையில் 138 ஆண்டுகளாக பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை போக்கியதாக மகிழ்ச்சியுடன் கூறும் கரோலின் தனது மகளின் வருகை தாங்கள் எதிர்கொண்ட அனைத்து போராட்டங்களுக்கும் அவர் தகுதியானவர் என்று நிரூபித்துள்ளது என கூறினார்.
- சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
- இளம்பெண் சமூக வலைதளமான ஸ்னாப்சேட்டில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் சில அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மிசி ஸிப்பி மாகாணத்தை சேர்ந்த 19 வயதான டெனிசி பிரேசியர் என்ற இளம்பெண் சமூக வலைதளமான ஸ்னாப்சேட்டில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
அதில் அந்த பெண் தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தன. வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இயற்கைக்கு மாறான பாலியல் உறவு செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பு.
- ரஷியாவின் இந்த தோல்வி உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது என்பதற்கான தெளிவான அடையாளம்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து அதை கடுமையாக எதிர்த்து வரும் ஐ.நா. பொதுசபை போரை நிறுத்த ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொதுசபை இதுவரை, போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 6 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பல்வேறு அமைப்புகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் முக்கியமான 3 அமைப்புகளில் ரஷியா தோல்வியடைந்தது.
பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் இடம் பெறுவதற்கான தேர்தலில் ருமேனியாவிடம் ரஷியா தோல்வியடைந்தது.
அதேபோல் ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் தேர்தலில் ரஷியா எஸ்டோனியாவிடம் தோற்றது. குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தில் உறுப்பினராவதற்கான ரகசிய வாக்கெடுப்பில் ஆர்மீனியா மற்றும் செக் குடியரசு ஆகியவற்றால் ரஷியா தோற்கடிக்கப்பட்டது.
ரஷியாவின் இந்த தோல்வி உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது என்பதற்கான தெளிவான அடையாளம் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்ட் கூறினார்.
- முதியவர்களுக்கு பண உதவி செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து ரூ.24லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஆசிஸ் பஜாஜ் மோசடி செய்தார்.
- மோசடி தொடர்பாக எழுந்த புகாரில் ஆசிஸ் பஜாஜை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்தவர் ஆசிஸ் பஜாஜ் (வயது29). அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த இவர் அந்நாட்டை சேர்ந்தவர்களிடம் குறிப்பாக முதியவர்களிடம் தான் பிரபலமான வங்கியில் வேலை பார்த்து வருவதாக கூறி வந்தார்.
மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி அவர்களுக்கு பண உதவி செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து ரூ.24லட்சம் வரை பெற்றுக்கொண்டு மோசடி செய்தார்.
இது தொடர்பாக எழுந்த புகாரில் ஆசிஸ் பஜாஜை போலீசார் கைது செய்தனர். அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 33 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி உள்ளது.
- 92 வயதில் 5-வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
- இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
வாஷிங்டன் :
சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ரூபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120-க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஏற்கனவே 4 முறை திருமணமாகி 4 மனைவிகளையும் விவாகரத்து செய்த ரூபெர்ட் முர்டாச், 92 வயதில் 5-வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
கணவரை இழந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், மாடல் அழகியுமான 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் காதல் வயப்பட்டதாகவும், வருகிற கோடை காலத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் முர்டாச் கூறினார். மேலும் இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரூபெர்ட் முர்டாச்-ஆன் லெஸ்லி ஸ்மித் தங்களின் திருமணத்தை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிறிஸ்தவத்தை பரப்புவதற்கான ஆன் லெஸ்லி ஸ்மித்தின் பிரசங்கத்தால் ரூபெர்ட் முர்டாச் பெரிதும் சங்கடத்துக்கு ஆளானதாகவும், இதனால் ஏற்பட்ட மனகசப்பால் ரூபெர்ட் முர்டாச் தனது காதலை முறித்து கொண்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்த தகவல்கள் ரூபெர்ட் முர்டாச்-ஆன் லெஸ்லி ஸ்மித்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.
- டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹாரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளார்.
டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலியா ஒபாமா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ள ஒரு குறும்படத்தில், முதல் முறையாக இயக்குநராக தனது பணியை தொடங்க உள்ளதாக டொனால்ட் குளோவர் சமீபத்தில் தெரிவித்தார்.
டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹாரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலியா ஒபாமா ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டதாரி. அவர் லீனா டன்ஹாமின் பெண்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து வெய்ன்ஸ்டீன் நிறுவனத்தில் ஹாலே பெர்ரி நடித்த அறிவியல் புனைகதை நாடகத் தொடரான எக்ஸ்டாண்டில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றினார்.
- கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் கைது செய்யப்பட்டார்.
- டிரம்ப் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை.
நியூயார்க்:
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த ரகசிய உறவு பற்றி அவர் தெரிவித்தார். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் நடிகை ஸ்டார்மியின் இந்த தகவலால் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து இவ்விவகாரத்தை பற்றி ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடி டிரம்ப் கொடுத்தார். அந்த பணம் தேர்தலில் பிரசார நிதியில் இருந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது சமீபத்தில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது. கோர்ட்டில் ஆஜராக புளோரிடாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க்குக்கு டிரம்ப் வந்தார்.
பின்னர் கோர்ட்டில் சரணடைந்த டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி முதலில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் உயர் பதவியை வகித்ததை கருத்தில் கொண்டு கை விலங்கு பூட்டப்படவில்லை. அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் விசாரணை தொடங்கியது. டிரம்ப் தனது வக்கீல்களுடன் நீதிபதி முன்பு அமர்ந்திருந்தார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே டிரம்ப் பதில் அளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்த போது அதை திட்டவட்டமாக மறுத்தார்.
தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்தார். சுமார் 57 நிமிடங்கள் கோர்ட்டில் இருந்த டிரம்ப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியேறிய அவர் புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்றார். அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, 'இந்த வழக்கு நாட்டுக்கு பெரும் அவமானம். அமெரிக்காவில் இதுபோன்று நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
நான் நிரபராதி. நம் நாடு நரகத்துக்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம் நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான்.
அமெரிக்க நீதி அமைப்பு தற்போது சட்டமற்றதாக இருக்கிறது. வருகிற 2024-ம் ஆண்டு அதிபராக தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்கவே இந்த போலி வழக்கு போடப்பட்டது. அதை உடனடியாக கைவிட வேண்டும்' என்றார்.
அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானதையொட்டி நியூயார்க்கில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
டிரம்ப்பிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






