search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கடத்தப்பட்ட 15 சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க மியூசியம்
    X

    நியூயார்க் பெருநகர கலை அருங்காட்சியகம்

    கடத்தப்பட்ட 15 சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க மியூசியம்

    • இந்த சிற்பங்கள் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை திருப்பி அனுப்புகிறத-

    இந்த சிற்பங்கள் அனைத்தும் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. டெரகோட்டா, செம்பு மற்றும் கற்சிற்பம் ஆகியவை அடங்கும்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற பெருநகர கலை அருங்காட்சியகம் (மெட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சந்தேகத்திற்குரிய வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை அருங்காட்சியம் தீவிரமாக மதிப்பாய்வு செய்கிறது. மேலும், இந்திய அரசாங்கத்துடனான நீண்டகால உறவுகளை மிகவும் மதிப்பதுடன், இந்த பிரச்சனையை தீர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×