என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது.
    • அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    வாஷிங்டன்:

    ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, மோடி பங்கேற்கிறார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் ஜி-7க்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார். அவர் அவர் குவாட் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

    அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். அவர் யார்? என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
    • இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

    வாஷிங்டன்:

    இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே நேரம் நாளும், பொழுதும் செல்போன்களில் மூழ்கி விடுவதால் பேராபத்துகளும் எதிர்கால சந்ததியினருக்கு சூழ்ந்துள்ளன.

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கம் இல்லாத சாப்பியன் எனும் தனியார் ஆய்வகம் ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் பயன்படுத்தும் இளம் வயதினரிடையே ஒரு ஆய்வினை மேற்கொண்டது. உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுடைய 27 ஆயிரத்து 969 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4000 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

    இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக அவர்கள் கூறும் போது, தற்போது குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டை கொடுப்பது நாகரீகமாகவும், கவுரவமாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் தமது குழந்தைகள் டிஜிட்டல் அறிவை பெறுவார்கள் என பெற்றோர்கள் நம்புகின்றனர்.

    ஆனால் அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் சூனியம் ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தைக்கு எவ்வளவு முன்னதாக ஸ்மார்ட்போன் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இளம் வயதிலேயே மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    சிறுவயதிலேயே ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்த இளைஞர்கள் அதிக தற்கொலை எண்ணங்களுடனும், யதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து அவர்கள் ஒதுங்கி இருக்க நினைக்கிறார்கள். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடும் எண்ணங்கள் அவர்களுக்கு குறைந்திருந்தது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    6 வயது முதல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இளம்பெண்களில் 74 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதும், கடுமையான மனநல சவால்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக நரம்பியல் நிபுணர் தியாகராஜன் கூறும்போது, குழந்தைகள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஆன்லைனில் செலவிடுகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    இது வருடத்திற்கு 2,950 மணி நேரம் ஆகும். ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பு இந்த நேரத்தில் நிறைய நேரம் குடும்பத்தினருடன் நண்பர்களுடனும் ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    இவ்வாறு இருக்கும் போது குழந்தைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இயல்பாகவே கற்றுக்கொள்ள முடிகிறது. ஆகவே குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு பெற்றோர்கள் தங்கள் வேலையில் ஈடுபடாமல், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றார்.

    • தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
    • வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பல்வேறு நாடுகள், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இருந்தன. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

    தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும், உலக நாடுகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

    இந்நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன.
    • அடுக்கு மண்டலத்தில் ஒலிகளை பதிவு செய்யப்பட பலூனில் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டன.

    வாஷிங்டன்:

    பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

    பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்ட்ரா டோஸ்பியர் என்பது பூமியின் வளி மண்டலத்தின் 2-வது அடுக்கு ஆகும். அதன் கீழ் மட்டத்தில் ஒசோன் படலம் உள்ளது.

    இந்த அடுக்கு மண்டலத்தில் ஒலிகளை பதிவு செய்யப்பட பலூனில் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பலூன்கள் முதலில் எரிமலைகளை கண்காணிக்க வடிவமைக்கப்பட்டு இருந்தது. பூமியின் அடுக்கு மண்டலத்துக்கு சென்ற ராட்சத பலூன்கள் அங்கு தோன்றும் ஒலிகளை பதிவு செய்தது. அந்த ஒலிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் மர்மமான சத்தங்கள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

    இந்த மர்ம ஒலிகள் குறித்து அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த ஒலியியல் சங்கத்தின் 184-வது கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் டேனியல் போமன் கூறும்போது, பூமியின் வளி மண்டலத்தில் அடையாளம் காண முடியாத சில விசித்திரமான ஒலிகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சில முறை மர்மமான சிக்னல்கள் ஏற்பட்டன. ஆனால் இவற்றின் ஆதாரம் முற்றிலும் தெரியவில்லை என்றார்.

    • மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக் பெட்ரோல், டீசல் ஆகிய எரிவாயுவிற்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது.
    • ராக்கெட்- பவர்டு கழிப்பறை, ஜெட் பவர்டு காபி பாட் ஆகியவை கே மைக்கேல்சன் உருவாகியுள்ளார்.

    அமெரிக்கா, மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கே மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக்கிற்கு எரிபொருளுக்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக வெப்பமூட்டும் சுருளுடன் (coil) 14-கேலன் கெக் கொண்டு இயக்கப்படுகிறது.

    இந்த சுருள் பீரை 300 டிகிரி வரை சூடாக்குகிறது. பின்னர் அது பைக்கை முன்னோக்கி நகரச் செய்யும் முனைகளில் அதிக வெப்பமான நீராவியாக மாறி இயக்குகிறது.

    முன்னதாக ராக்கெட்- பவர்டு கழிப்பறை, ஜெட் பவர்டு காபி பாட் ஆகிய கருவிகளை கே மைக்கேல்சன் உருவாக்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதாவுக்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவானது.
    • மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தல்

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவானது. இதனால் மசோதா நிறைவேறியது.

    இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மசோதாவை அறிமுகம் செய்த செனட்டர் ஆயிஷா வகாப்புக்கு அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டுக்கு இடமில்லை என்ற வலுவான செய்தியை இந்த மசோதா வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

    மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேணடும் என்று இந்திய முஸ்லிம் கவுன்சில் நிர்வாக இயக்குனர் ரஷித் அகமது வலியுறுத்தினார். கலிபோர்னியாவை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும், பாராளுமன்றமும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • கலிபோர்னியா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஆகியோர் விருந்தளிக்க உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை எதிர்நோக்கி உள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்து வரவிருக்கும் அரசு பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு விருந்தளிக்க நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு முக்கியமான கூட்டாண்மை உள்ளது என தெரிவித்தார்.

    • டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
    • அவர் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.

    நியூயார்க்:

    டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

    எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய சிஇஓ நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும் என பதிவிட்டுள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.

    நியூயார்க்:

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார்.

    தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் அப்துல் ரவூப்பை சேர்க்க இந்தியா தனது முன் மொழிவை வைத்தது.

    இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.

    இதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிறுத்தியது. இதற்கு முன்பும் பல பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிராக தீர்மானங்களை சீனா நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக அங்குள்ள இ-காமர்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றுக்கு திடீரென மவுசு வந்துவிடும். அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக அங்குள்ள இ-காமர்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் பாரம்பரிய இந்திய கட்டில் என பெயரிடப்பட்ட கட்டிலின் படங்கள் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 75-க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×