என் மலர்
உலகம்

இந்தியா எங்களின் மிக முக்கியமான கூட்டாளி - அமெரிக்க வெளியுறவு துறை
- பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஆகியோர் விருந்தளிக்க உள்ளனர்.
வாஷிங்டன்:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை எதிர்நோக்கி உள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்து வரவிருக்கும் அரசு பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு விருந்தளிக்க நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு முக்கியமான கூட்டாண்மை உள்ளது என தெரிவித்தார்.
Next Story






