என் மலர்
பிரிட்டன்
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பிரிஸ்டோல்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப் சால்ட் 27 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த பென் டக்கெட், ஹாரி புரூக் ஜோடி அதிரடியில் மிரட்டியது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையைல ஹாரி புரூக் 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் போராடிய அடில் ரஷித் 36 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
- ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது.
- நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நேற்று டிஎல்எஸ் முறையில் தோல்வி அடைந்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து டி.எல்.எஸ். முறைப்படி வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 77 ரன்னும், ஸ்டீவ் சுமித் 60 ரன்னும், ஆரோன் ஹார்டி 44 ரன்னும், கேமரூன் கிரீன் 42 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் ஜோடி பொறுப்புடன் ஆடி 156 ரன்களை சேர்த்தது. வில் ஜாக்ஸ் அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹாரி புருக் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 37.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூல ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-2 என பின்தங்கி உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
- கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
- இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை சீனாவின் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்புவதற்கான பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே இந்த கல்வி நிறுவனங்கள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அங்குள்ள கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்.
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளில் தலையிடுவது நிரூபணமானது. எனவே அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்துவதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே சமயம் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அலெக்ஸ் கேரி 74 ரன்னும், மிட்செல் மார்ஷ் 60 ரன்னும் எடுத்தனர். மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் தலா 29 ரன்கள் அடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், ஜேக்கம் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. ஜேமி ஸ்மித் ஓரளவு தாக்குப் பிடித்து 49 ரன் எடுத்தார். பென் டக்கெட் 32 ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹார்டி, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 315 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் வெற்றி பெற்றது.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி 315 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 95 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி சுமித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய சார்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி என்ற பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
- 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.
உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது
இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.
33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய சாமர்செட் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய குளோசெஸ்டர் அணி 15 ஓவரில் வெற்றி பெற்றது.
லண்டன்:
இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.
இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் குளோசெஸ்டர்ஷைல் அணிகள் மோதின. டாஸ் வென்ற குளோசெஸ்டர்ஷைல் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சாமர்செட் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லூயிஸ் கிரெகோரி அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குளோசெஸ்டர்ஷைல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், 15 ஓவரில் குளோசெஸ்டர் ஷைல் அணி 129 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
- முதல் இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றது.
- மழையால் 3-வது டி20 போட்டி ரத்தானது.
மான்செஸ்டர்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகன் விருது வென்றார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் 19-ம் தேதி நடைபெறுகிறது.
- பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார்.
- டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார்.
பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை-0 விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.

சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக மொத்தம் சிப்பு நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் நடித்திருந்த கீதா கதாபாத்திரத்தை ரியல் லைபில் வாழ்ந்திருக்கிறார் சோபி.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்தது.
- அடுத்து விளையாடிய இங்கிலாந்து 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
கார்டிப்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னும், டிராவிஸ் ஹெட் 31 ரன்னும், மேத்யூ ஷாட் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிலிப் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய லிவிங்ஸ்டோன் அரை சதமடித்தார். அவர் 47 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷாட் 5 விக்கெட்டும், சீன் அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
கார்டிப்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாட் 28 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.
அடுத்து இறங்கிய ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.






