என் மலர்
இலங்கை
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 133 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொழும்புவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 31 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் வெற்றி பெற 113 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி 6.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நாட் ஸ்கைவர் நிலைத்து ஆடி சதமடித்து அசத்தி 117 ரன்கள் எடுத்தார். டாமி பியூமண்ட் 32 ரன்கள் எடுத்தார் .
இலங்கை அணியில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக ஹசினி பெராரா 35 ரன்னும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை 45.4 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் சோபி எகிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நாட் சீவர் பிரண்ட், சார்லொட் டீன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இலங்கையின் கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்லின் தியோல் 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்னும், பிரதிகா ராவல் 31 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 35 ரன்கள் அடித்து அசத்தினார்.
பாகிஸ்தான் சார்பில் டயானா பெய்க் 4 விக்கெட்டும், பாத்திமா சனா, சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் சிட்ரா அமின் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்த அவர் 81 ரன்னில் அவுட்டானார். நடாலியா பர்வேஸ் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ரூபியா ஹெய்டர் அரை சதம் கடந்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 31.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- இலங்கையில் கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் உயிரிழந்தனர்.
- காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு:
இலங்கையில் நிகவெரட்டி அருகே புத்த மடம் ஒன்று அமைந்துள்ளது. இது கொழும்புவில் இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தியானம் செய்ய இங்கு வருகை தருவர்.
இங்கு தரைப்பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் துறவிகள் மலையில் இருக்கும் தியான மண்டபங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஒரு சிறிய கேபிள் கார் பெட்டியில் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேபிள் கார் பெட்டியின் கேபிள் அறுந்துவிட்டது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து ஒரு மரத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 6 பேரில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேபிள் கார் அறுந்து 7 துறவிகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள்.
- அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை போன்றவற்றை இழக்க நேரிடும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தலின்போது, முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிபர்களுக்கு அதிகாரமளித்தல் திரும்பப் பெருதல் சட்ட மசோதாவை ஆளும் அரசு தாக்கல் செய்தது. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 151 வாக்குகள் விழுந்தன. ஒரேயொரு வாக்கு மட்டும் எதிராக விழுந்தது.
முன்னாள் அதிபர்களுக்கான அதிகாரத்தை பறிப்பதற்கு, பாராளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து சட்ட அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில் "முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள். அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை, செயலக ஊழியர்கள் போன்ற வசதி பறிக்கப்படும்" என்றார்.
இலங்கையில் தற்போது ஐந்து முன்னாள் அதிபர்கள் உயிரோடு உள்ளனர். ஒரு அதிபரின் மனைவி விதவையாக உள்ளார். இதில் 3 பேர் மட்டுமே சலுகைகள் பெற்று வருகின்றனர்.
- ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்த 15 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர்.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை இரவு, சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த 30 க்கும் மேற்பட்டோர் பயணித்த பஸ் சாலையில் இருந்து விலகி பல நூறு மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
இதில் உயிரிழந்த 15 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர். மேலும் காயமடைந்த 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
- கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 46,473 இந்தியர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
இலங்கையின் முக்கிய வருவாயாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இலங்கைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட அதிகமாகும். அதில் 46,473 பேர் இந்தியர்கள் ஆவர். பிரிட்டன் (17,764) ஜெர்மனி (12,500) சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- இலங்கையின் ஜனாதிபதியாக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே.
- அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
இலங்கை அதிபராக 2022 முதல் 2024 வரை பணியாற்றியவர் ரணில் விக்ரமசிங்கே. ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர்.
இவர் அதிபராக இருந்த போது அரசுப்பணத்தை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் 2025 ஆகஸ்ட் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மருத்துவ காரணங்களுக்காக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
- ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதி.
இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார்.
அவர் அதிபராக இருந்தபோது தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை வருகிற 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வெலிக்கடை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரணில் விக்ரமசிங்கேவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதை சிறைத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்த கொள்வதற்கான அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.
- சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே-வை, நாட்டின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது, போலீசார் கைது செய்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு 76 வயதாகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
முன்னதாக சிஐடி போலீசாரல் பயணச் செலவு குறித்து அவருடைய ஸ்டாஃப்களிடம் விசாரணை நடத்தியிருந்தது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோதபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியபோது, ரணில் விக்ரமசிங்கே, அதிபராக பதவி ஏற்றார். 2022 முதல் செப்டம்பர் 2024 வரை அதிபராக இருந்தார். 6 முறை இலங்கை பிரதமராக இருந்துள்ளார்.
- இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
- இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடக்கிறது.
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இலங்கை அணி விவரம்:
சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்கே, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, மஹீஸ் தீக்சனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷன்கா.






