என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா
    X

    மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    கொழும்பு:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    இதன் 19-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக 46 ஓவராகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் 25 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை நீண்ட நேரம் நீடித்ததால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    இந்நிலையில், நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்ற 2 இடங்களுக்கு இங்கிலாந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×