என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • இந்திய விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த ஏற்கனவே தடைவிதித்திருந்தது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதனால் பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியுள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி (பாகிஸ்தான் ராணுவ தலைமையகம்) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

    இதற்கிடையே இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அது பதிலடியாக இருக்காது. பதற்றத்தை அதிகரிக்கும் என ராணுவம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய பதிலடி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

    • பாகிஸ்தான் மீது இரவு நேரத்தில் இருளைப் பயன்படுத்தி கோழைத்தனமான தாக்குதலை இந்தியா நடத்தியது.
    • வழக்கமான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி, நாம் யார் என்பதை இப்போது அவர்கள் அறிவார்கள்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

    தனது உரையில், பாகிஸ்தான் மீது இரவு நேரத்தில் இருளைப் பயன்படுத்தி கோழைத்தனமான தாக்குதலை இந்தியா நடத்தியது. ஆனால் ராணுவம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது என்று தெரிவித்தார்.

    மொத்தம் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த அவர் அவற்றில் மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் ராணுவம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்.

    மேலும் இரண்டு ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார். தொடர்து பேசிய அவர், வழக்கமான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி, நாம் யார் என்பதை இப்போது அவர்கள் அறிவார்கள்" என்று தெரிவித்தார்.

    • ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
    • பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு அந்நாட்டு அரசு செயலாற்ற முழு அதிகாரம் வழங்கியது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

    அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.

    இதுதொடர்பான அறிக்கையில், "இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளின் தீவிரத்தை உணர்ந்து, சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை வெளிப்படையாக மீறியதற்காக அதை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்" என்று சர்வதேச சமூகங்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.

    மேலும், "பாகிஸ்தான் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளது, மேலும் அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒருபோதும் மீற அனுமதிக்காது. அதன் பெருமைமிக்க மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய அனுமதிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

    இந்தியாவின் கொடிய தாக்குதல்களை பாகிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. அவற்றை போர் நடவடிக்கைகள் என்று அறிவிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "இந்திய ராணுவத்தால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பது ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான குற்றமாகும், இது மனித நடத்தையின் அனைத்து விதிமுறைகளையும் சர்வதேச சட்டத்தின் விதிகளையும் மீறுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு அந்நாட்டு அரசு செயலாற்ற முழு அதிகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பஹல்காம் தாக்கதலுக்கு பதிலடியாக இந்தியா 9 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • பாகிஸ்தானில் உள்ள 3 இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. 70 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு சீனா வருத்தம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், சீனா தூதரை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இந்த சந்திப்பிற்குப் பிறகு "பிராந்திய பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அனைத்து தொடர்புடைய பகுதிகளிலும் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பைப் பராமரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது" என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானுக்கு தற்போது சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த விசயத்தில் சீனா விலகியிருக்வே விரும்பும்.

    • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
    • இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம்

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.

    இந்தியா பின்வாங்குவதை தேர்வுசெய்தால், இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்." என்று தெரிவித்தார்.

    • பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
    • பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

    தங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே என்றும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    • பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இந்நிலையில், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
    • இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரீப் சவுதிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கோழைத்தனமானது. எதிரி இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் ஆகிய 3 நகரங்களில்

    வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளது.

    • பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாதுகாப்பு, அச்சுறுத்தல் கறித்து கேட்டறிந்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நிதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இருநாட்டு தலைவர்களும் ராணுவ தளபதியுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படலாம் என பற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலைமையகத்திற்கு சென்றார். அவருடன் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் பல உயர் அதிகாரிகள் சென்றனர்.

    நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல், ராணுவத்தின் நிலை, போர் வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஎஸ்ஐ தலைவைர் முகமது ஆசிம் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து அதற்காகப் போராடுவீர்கள்? என்று அப்துல் அஜீஸ் கேட்டார்.
    • இங்கே ஒரு கொடூரமான, பயனற்ற அமைப்பு உள்ளது. அது இந்தியாவை விட மோசமானது

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.

    பாகிஸ்தானின் அமைச்சர்களும் இந்தியா நிச்சயமாகத் தாக்கும் என்று அஞ்சுகிறார்கள். இதற்கிடையில், இஸ்லாமாபாத்தின் லால் மசூதியின் மதகுரு அப்துல் அஜீஸ் காசி தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.\

    ஒரு மேடையில் இருந்து, அங்கு கூடியிருந்த மக்களிடம், "உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது. சொல்லுங்கள், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் போராடினால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து அதற்காகப் போராடுவீர்கள்?" என்று அப்துல் அஜீஸ் கேட்டார்.

    இந்தக் கேள்விக்குப் பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் மௌனம் நிலவியது. கூட்டத்தில் யாரும் கையை உயர்த்தவில்லை.

    இதன்பின் பேசிய மதகுரு அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்தார். "இன்று பாகிஸ்தானில் அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கே ஒரு கொடூரமான, பயனற்ற அமைப்பு உள்ளது. அது இந்தியாவை விட மோசமானது" என்று கூறினார்.

    பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவாவில் நிலவும் அமைதியின்மை குறித்து பேசிய அவர் பாகிஸ்தான் அரசு அதன் சொந்த மக்களை குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

    "பலுசிஸ்தானிலும் கைபர் பக்துன்கவாவிலும் அவர்கள் செய்தது அட்டூழியங்கள். அவர்களின் சொந்த குடிமக்களைக் குண்டுவீசித் தாக்குகின்றனர்" என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் குறிப்பாக இந்தியாவில் படு வேகமாக வைரலாகி வருகிறது.  

    • இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
    • 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களின்படி, பாகிஸ்தான் தரையிலிருந்து தரைக்கு பாய்ந்து தாக்கும் ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் என்று கூறப்படுகிறது.

    ஃபதே ஏவுகணை, ஒரு குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது திட எரிபொருள் அடிப்படையிலான ஏவுகணை என்பதால், இதை விரைவாக ஏவ முடியும். இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது

    இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது ஏவுகணையை சோதிப்பது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் அது தரையிலிருந்து தரைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.

    ×