என் மலர்tooltip icon

    சீனா

    • அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.
    • கடந்த மாதம் அரசு ஊழியர்கள் ஐ போன் வேலையின்போது பயன்படுத்தப்பட கூடாது என ரஷியா கூறியது.

    பீஜிங்:

    உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.

    சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் புதிய ஐ போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்நிலையில், வேலை நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. அத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

    சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது கவலையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீனா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஐ போன்கள், ஐ பேடுகளை வேலை நோக்கங்களுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என ரஷியா கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
    • இந்த விவகாரத்தில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீஜிங்:

    சீனாவில் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று.

    கடந்த 1987-ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

    இந்நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீன பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்படுகிறது.

    விசாரணையில், இதனை எவரோ சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து யூயு கவுன்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

    அப்பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர். இதில், ஓட்டை போட்டுள்ளனர் என்றும் பராமரிப்பு செய்து அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சுவரின் குறிப்பிட்ட பகுதியின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
    • அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது.

    பிஜிங்:

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா கூறி வருகிறது. இது தொடர்பான புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

    ஆனால் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் 80 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது என சீனா சொல்லி வருகிறது.

    சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த 4 நாடுகளும் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த வரை படம் செல்லாது என வியட்நாம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாடும் நாங்கள் ஒரு போதும் சீனாவின் புதிய வரைபடத்தை ஏற்க முடியாது என தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர்.
    • காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெய்ஜிங்:

    காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

    சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் 'லிப்லாக்' எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர்.

    இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.

    இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.

    இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • மீனவர்கள், சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்
    • சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் அனுமதி அளித்தன

    புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடைவிதித்துள்ளனர்.

    "நாட்டின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு அணுசக்தியால் அசுத்தமான நீர் வெளியேற்றத்தின் அபாயங்களைத் தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும்" என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

    மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

    ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

    இந்நிலையில் வருகிற 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வருகிற 24-ந்தேதி வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது.
    • கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

    பீஜிங்:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லியம்லாய், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தைவானை சுற்றி மீண்டும் சீனா தனது போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது.

    தைவான் தீவை சுற்றி சீன கடற்படை மற்றும் விமானப்படை, கூட்டு வான், கடல் ரோந்து, ராணுவ பயிற்சிகளை இன்று அதிரடியாக தொடங்கியது. இதை சீன ராணுவ செய்தி தொடர்பாளரான ஷியி உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக சீனா கூறும்போது, தைவான் துணை அதிபர் லாய் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

    கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் தைவான் துணை அதிபர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    • அந்த வாலிபனுக்கு சுமார் ரூ.1.15 கோடி மதிப்புள்ள சொத்து கிடைத்தது
    • இவனிடம் வாங்கிய முகவர் அதிக விலைக்கு மற்றொரு முகவருக்கு விற்றார்

    மத்திய சீனாவில் உள்ளது ஹேனன் பிராந்தியம்.

    இங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் 18-வயது ஜியாவோஹுவா (Xiaohua). இவருக்கு அவரது பாட்டனார் வழியாக ஒரு பூர்வீக சொத்து கிடைத்திருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1.15 கோடிக்கும் ($1,39,000) மேலிருக்கும்.

    ஜியாவோஹூவா ஒரு மோட்டார்சைக்கிள் வாங்கி தர சொல்லி நீண்ட காலமாக தனது பெற்றோரை கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் வாங்கி தர மறுத்தனர். எப்படியாவது மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டுமென நினைத்த ஜியாவோஹுவா ஒரு விபரீத திட்டம் தீட்டினார்.

    இதற்காக தாத்தா மூலம் பெற்ற தனது சொத்தை தனது பெற்றோருக்கு தெரியாமல் விற்க முடிவு செய்தார். அதன்படி சொத்துக்களை விற்கவும், வாங்கவும் ஏற்பாடு செய்யும் முகவர்களை ரகசியமாக அணுகினார். தனது பூர்வீக சொத்தை பாதி விலைக்கு விற்க ஒரு முகவரிடம் விலை பேசி ஒப்புக்கொண்டார்.

    பாதி விலைக்கு அந்த சொத்தை வாங்கிய அந்த முகவர் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க மற்றொரு முகவருக்கு அதிக விலைக்கு விற்று விட்டார். பிறகு ஒரு நாள், ஜியாவோஹுவாவின் தாயாருக்கு வீடு பாதி விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் அந்த சொத்து முகவர்களை அணுகி, விற்பனையை ரத்து செய்யுமாறு கோரினார். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதனால் வேறு வழியில்லாத நிலையில் ஜியாவோஹுவாவின் பெற்றோர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.

    இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, இதனை விசாரித்த நீதிபதி, விவரங்களை அறிந்து விற்பனை சம்பந்தமான பத்திரங்களை ஆய்வு செய்தார். முகவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்குமான உரையாடல்களையும் ஆய்வு செய்ததில் ஜியாவோஹுவா, தனது சொத்தின் உண்மையான மதிப்பை அறியாமல் இருந்திருப்பதும், அவரை முகவர்கள் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 'ஜியாவோஹுவாவின் செய்கை சிறு பிள்ளைத்தனமானது' என வர்ணித்த நீதிமன்றம்,

    இந்த விற்பனையை ரத்து செய்து, சொத்தை மீண்டும் ஜியாவோஹுவாவிற்கே திருப்பி அளித்தது.

    இந்த செய்தியையடுத்து, ஒரு மோட்டார்சைக்கிளுக்காக எந்த எல்லைக்கெல்லாம் இளைஞர்கள் செல்கிறார்கள் என பெற்றோர்கள் கவலை தெரிவித்து பேசி வருகின்றனர்.

    • ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.
    • மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பலர் இடிபாடுகளுக்குள் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மோப்பநாய் உதவியுடன் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

    • மாஸ்கோவில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்
    • ரஷியாவை தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்

    சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கெய் ஷோய்கு, பெலாரஸ் பாதுகாப்பு மந்திரி விக்டர் கிரெனின் ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்த பயணம் மேற்கொள்கிறார்.

    முதலில் ரஷியா செல்லும் அவர், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பெலாரஸ் செல்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு பெலாரஸ் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, உதவி வருகிறது. ஆனால், சீனா மறைமுகமாக ஆதரவு கொடுப்பதுடன், ஆயுதங்கள் வழங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பராகுவே நாட்டிற்கு செல்லும் வழியில் அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்
    • இறையாண்மையை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சீனா

    தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தைவான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

    இதுகுறித்து சீனா தரப்பில் கூறும்போது ''தைவான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி. அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    தைவான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது. ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி தைவான் ஒட்டிய கடற்பகுதியில் ராணுவ நடவடிக்கையை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

    இதையும் தாண்டி சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சீனாவின் வடக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

    தொடர் மழையால் சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மழை நீடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சீனாவில் 78 பேர் இறந்து விட்டனர். பலர் மாயமாகி விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்கு சீனாவின் ஜியான்ஸ் நகரில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. அந்த வீடுகளில் இருந்த 2 பேர் மீது மண் விழுந்து அமுக்கியதால் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று நிலச்சரிவில் புதைந்து போன வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 16 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    • ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
    • ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

    CERES-1 ராக்கெட் தொடரைப் பயன்படுத்தி ஏவப்படும் 7வது ராக்கெட் பணி இதுவாகும்.

    ×