என் மலர்tooltip icon

    சீனா

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

    இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41 நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.

    துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்திய அணி இதுவரை மொத்தம் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் பதக்கம் வென்றார்.
    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

    ஹாங்சோவ்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதேபோல், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி  அணிவெள்ளி வென்றது.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்து உள்ளது.
    • ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 672 பதக்கங்களை வென்று இருக்கிறது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

     

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில், 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக துவங்கியது. துவக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. இதைத் தொடர்ந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் தேசிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஆசிய விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.

    • எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
    • நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.

    சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும்.

    அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது. நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.

    அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் இந்தியா- நேபாளம் இடையே நடைபெற்றது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேபாள வீரர்கள் விளையாடினர்.

    19வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று சீனாவின் ஹாங்சோவ் நகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. இன்று தொடங்கி அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

    இருப்பினும், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.

    இன்று மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறும் நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் இந்தியா- நேபாளம் இடையே நடைபெற்றது.

    ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேபாள வீரர்கள் விளையாடினர்.

    இதில், முதல் சுற்றில் நேபாளத்திற்கு எதிராக 11-1, 11-6, 11-8 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

    இதேபோல் 2வது சுற்றில் விளையாடிய இந்திய வீராங்கனை முகர்ஜி அய்ஹிகா 11-3, 2வது செட்டை11-7, 3வது செட்டை 11-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    நேபாளம் அணிக்கு எதிராக 2- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை இருந்த நிலையில், 3வது சுற்றிலும் 11-1, 11-5, 11-2 என்ற கணக்கில் போட்டியை இந்தியா கைப்பற்றியது.

    இதன்மூலம், ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாள அணியை இந்தியா வீழ்த்தியது.

    இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

    • கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி,  வெண்கலம் வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • முன்னதாக சீனாவுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • வங்காள தேசத்துடனான ஆட்டத்தில் முதற்பகுதி கோல் ஏதும் இல்லாமல் தொடர்ந்தது

    ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) நாளை மறுநாள் தொடங்கி அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது.

    கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போதைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஆட்டத்தின் முதற்பகுதியில் இந்தியா கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது.

    ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார்.

    இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.

    • ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
    • இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது.

    நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.

    இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.

    ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

    இதில் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

    'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. இருந்தது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது லீக்கில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களம் காணுகிறது.

    கால்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டுள்ள 16 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீன தைபேயை மாலை 5 மணிக்கு சந்திக்கிறது.

    • ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
    • சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    பீஜிங்:

    சீன ராணுவ மந்திரியாக இருப்பவர் லீஷாங்பூ. இவர் கடந்த இரண்டு வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங்யீ நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே சீன ராணுவ மந்திரி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணுவ மந்திரி லீஷாங்பு எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை லீஷாங்பு தலைமையிலான சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் ராணுவ மந்திரியாக நியமிக்கப் பட்ட லீஷாங்பு மற்றும் 8 அதிகாரிகள் மீதான விசாரணை ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஒழுங்குமுறை ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. சீன ராணுவ மந்திரி லீஷாங்பு, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    லீ ஷாங்பு, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். கடந்த மாத தொடக்கத்தில் ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 டெல்லி பிரகடனம் ஒருமித்த கருத்தோடு வெளியிடப்பட்டது
    • ரஷியா பெயரை குறிப்பிடாமல் இந்தியா சாதுர்யமாக வடிவமைத்து ஒப்புதல் பெற்றது

    டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜி20 டெல்லி பிரகடனத்தை ஒருமித்த கருத்தோடு இந்தியா சாதுர்யமாக வெளியிட்டது. ஒருமித்த கருத்தோடு பிரகடனம் வெளியிடப்பட்டது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே ஜி20 மாநாட்டின் பிரகடனம் குறித்து சீனா பதில் அளிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜி20 டெல்லி பிரகடனம் நேர்மறையாக சிக்னலை தந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    சிறப்புமிக்க குழு உலகளாவிய் சவால்கள், உலக பொருளாதாரத்த மீட்டெடுப்பதை ஊக்குவித்தல் விவகாரத்தில் நேர்மறையாக சிக்னலை தந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    • அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?
    • பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது என விமர்சனம்

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

    அதில் குழந்தைகள் பள்ளி மேஜையில் (டெஸ்க்) தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும். அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும். மிகவும் வசதியாக பெட்டில் (மெத்தை) தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளியில் தூங்க விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என அறிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தூங்கும்போது, ஆசிரியர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் பணம் வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளது.

    "இது நகைச்சுவையா? பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது" என ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இன்னொருவர், "மாணவர்கள் தங்கள் மேஜைகளில் தூங்குவதற்கு ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதை நான் மட்டும் புரிந்து கொள்ளவில்லையா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொருவர், "இது கேலிக்கூத்தானது. அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்திய மதிப்பில் ஒரு யூனிட் ரூ.1லிருந்து ரூ.12 வரை விற்கப்படுகிறது
    • நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்து தெரிவிக்கின்றனர் பயனாளிகள்

    இணையத்தில் பல்வேறு பொருட்களை வாங்க உருவாக்கப்பட்ட சீனாவின் இணையதளம், டவ்பவ். சீனாவை தளமாக கொண்டு இயங்கும் புகழ் பெற்ற பன்னாட்டு இணையவழி வணிக முன்னணி நிறுவனமான அலிபாபாவிற்கு சொந்தமான டவ்பவ், சீனாவின் ஹேங்ஜவ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    1879-ல் ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து, பவுதிகத்தில் உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்று சிறப்பான அறிவு பெறுவதற்கு ஒரு மெய்நிகர் பொருளை "ஐன்ஸ்டீனின் மூளை" எனும் பெயரில் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

    இது போன்ற விளம்பரங்களில் வழக்கமாக மருந்து, மாத்திரைகள் அல்லது சிப் போன்றவைதான் பெரும்பாலும் விற்கப்படும். ஆனால், முதன்முறையாக ஒரு மெய்நிகர் பொருள் வடிவில் அறிவை மேம்படுத்தும் வழி என இது பிரபலப்படுத்தப்படுவதால் உலகெங்கிலும் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இதை தற்போது வரை வாங்கியுள்ளனர்.

    இந்திய மதிப்பில் ஒரு யூனிட் ரூ. 1-ல் இருந்து ரூ. 12 வரை விற்கப்படுகிறது. இது ஐன்ஸ்டீனின் புகைப்படத்துடன் விற்கப்படுவதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

    "எங்கள் தயாரிப்பு மெய்நிகர் வடிவில் இருக்கும். எங்களுக்கு நீங்கள் அதற்கான தொகையை செலுத்திய பிறகு நீங்கள் சில காலம் காத்திருக்க வேண்டும். அனேகமாக ஓரிரவு தூக்கத்திற்கு பிறகு உங்கள் தலையில் ஐன்ஸ்டீன் போன்று அறிவு வளர்ந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்" என இதன் விளம்பரங்களில் ஒன்று தெரிவிக்கிறது.

    பயனாளிகளில் ஒரு சிலர் இப்பொருள் குறித்து நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளனர். "எனக்கு சிந்திக்கும் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என ஒரு பயனாளி தெரிவித்துள்ளார்.

    ஆனால், பல பயனாளிகள் இதற்கு எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். "இதனை வாங்கிய பிறகுதான் நான் செய்தது முட்டாள்தனம் என தெரிய வந்தது. அதை உணர்ந்ததால் முட்டாளாக இருந்த நான் தற்போது அறிவாளியாகி விட்டேன்." என ஒரு பயனர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

    "மனிதர்களின் உணர்வுகளை திறம்பட நிர்வகிக்க இது உதவும். குறைந்த செலவில் இது போன்று உணர்வுபூர்வமான அனுபவம் கிடைப்பது பலரும் ரசிக்கின்றனர். அதனால் இது அதிகம் விற்கப்படுகிறது. பயனாளிகளுக்கு இது ஒரு வேடிக்கையான ரசிக்கும் அனுபவமாக இருக்கும். அவ்வகையில் இது பயனுள்ள பொருள்" என்கிறார் சீனாவின் உளவியல் நிபுணர் ஒருவர்.

    ×