என் மலர்
கனடா
- ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன.
- கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் வழக்கில் கூறினார்.
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.
அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.
ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.
இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் காம்ப்பெல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டார்.
- கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது.
ஒட்டாவா:
கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார். இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரத்து 640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவு ஆகும்.
- மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
- கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார்.
கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைப் போலவே, மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் நான்கு பேர் மார்க் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்கள்.
அனிதா ஆனந்த் கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார். கனடாவின் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் (58 வயது), 2019 இல் அரசியலில் நுழைந்தார்.
- பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங்.
- வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).
கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.
இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.
- தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது.
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.
மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர். இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியானது. இதில் 161 தொகுதிகளில் லிபரல் கட்சி முன்னிலையில் இருந்தது. கன்சர் வேட்டிவ் கட்சி 150 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றன.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, லிபரல் கட்சி 167 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங்கின் தேசிய ஜன நாயக கட்சி இந்த தேர்தலில் 343 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் பெற்றது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி 24 இடங்களை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கனடாவில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சி இடையே வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது.
ஒட்டாவா:
கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கனடாவாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி சாலையோரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். 30 வயதுடைய அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்று ஆராய்ந்து வருகின்றனர்.
கனடாவின் வென்கவுர் நகரில் இன்று பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி சாலையோரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 30 வயதுடைய அந்த அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்பது குறித்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர்.

- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கான பயண ஆலோசனையை கனடா புதுப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது.
- அர்த்தமற்றதும் அதிர்ச்சியூட்டும்துமான வன்முறைச் செயலாகும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவை உள்ளடக்கிய G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது. கனடாவின் மௌனம் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் தாக்குதல் நடந்து 30 மணி நேரம் கழித்து அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மார்க் கார்னி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன். அப்பாவி பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கொன்று காயப்படுத்தியது அர்த்தமற்றதும் அதிர்ச்சியூட்டும்துமான வன்முறைச் செயலாகும்.
கனடா இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலியேவ் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்திருந்தார். கனடாவுடன் இந்தியாவின் உறவு சமீப காலங்களாக நன்முறையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
- கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
- காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவில் சமீபகாலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வான்கூவரில் உள்ள ஒரு குருத்வாரா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
குருத்வாரா சுவர்களில் பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வான்கூவர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்ரே என்ற பகுதியில் லட்சுமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்கள். கோவிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு எம்.பி. சந்திரஆர்ய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட கண்டன பதிவில் கூறி இருப்பதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து கோவில் மீதான தாக்குதல் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக அவர் காத்திருந்தார்.
- இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்சிம்ரத் ராதாவா (21 வயது) என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.
உள்ளூர் நேரப்படி கடந்த புதன்கிழமை இரவு 7:30 மணியளவில், சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக அவர் காத்திருந்தார். அப்போது, அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஹர்சிம்ரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
கனடாவின் ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்ட் பகுதியில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த மேல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், கத்தியால் குத்தப்பட்டு இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.






