என் மலர்
நீங்கள் தேடியது "Hindu Temple Damaged"
- கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
- காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவில் சமீபகாலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வான்கூவரில் உள்ள ஒரு குருத்வாரா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
குருத்வாரா சுவர்களில் பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வான்கூவர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்ரே என்ற பகுதியில் லட்சுமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்கள். கோவிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு எம்.பி. சந்திரஆர்ய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட கண்டன பதிவில் கூறி இருப்பதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து கோவில் மீதான தாக்குதல் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது.
- கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் மிசிகாகா மாகாணத்தில் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுவரில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம நபர்கள் எழுதி இருந்தனர்.
இச்சம்பவத்துக்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தூதரகம் டுவிட்டரில் கூறும்போது, மிசிகாகாவில் உள்ள ராமர் கோவில் இந்தியாவுக்கு எதிரானவர்களால் சிதைக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.






