என் மலர்
வங்காளதேசம்
- முதலில் ஆடிய இங்கிலாந்து 117 ரன்களில் ஆல் அவுட்டானது.
- வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
டாக்கா:
வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சால்ட் 25 ரன்னும், டக்கட் 28 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அந்த அணியின் ஷாண்டோ நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
இறுதியில், வங்காளதேச அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 156 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேச அணி 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
சட்டோகிராம்:
இங்கிலாந்து அணி வங்காளதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இந்நிலையில் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லரும் 67 ரன்னும், பில் சால்ட்டு 38 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் ஹசன் மக்முத் 2 விக்கெட்டும், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 30 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் விளாசினார். ரோனி தலுக்தர் 21 ரன்னும், லிட்டன் தாஸ் 12 ரன்னும், தவ்கித் ஹிரிடாய் 24 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாம்பியன் இங்கிலாந்தை வங்காளதேச அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. ஷகிப் அல்-ஹசன் 34 ரன்களுடனும், அபிப் ஹூசைன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
- வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அருகில் உள்ள வங்கியின் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.
டாக்கா:
வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் சானிடரி பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 246 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 196 ரன்களில் ஆல் அவுட்டானது.
சட்டோகிராம்:
வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஒருநாள் தொடரின் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.5 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷகிப் அல் ஹசன் 75 ரன், முஷ்பிகுர் ரஹீம் 70 ரன், ஷாண்டோ 53 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்னும், பிலிப் சால் 35 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் வங்காளதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது.
வங்காளதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம், எபடாட் ஹோசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.
- பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டாக்கா:
வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரவு நிலவரப்படி 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வங்காளதேச தேசியவாத கட்சி, அதிபர் பதவிக்கு கட்சியின் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை.
- ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றினார்.
டாக்கா :
வங்காளதேசத்தின் அதிபராக இருந்து வரும் முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து, நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்த நிலையில் அதிபர் பதவிக்கான ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதி முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.
இதனிடையே வங்காளதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி, அதிபர் பதவிக்கு கட்சியின் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இதன் மூலம் முகமது ஷஹாபுதீன் வங்காளதேசத்தின் 22-வது அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அவர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றினார்.
பின்னர் அரசியலில் குதித்த அவர், அவாமி லீக் கட்சியில் இணைந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினரானார். எனினும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும்போது கட்சி பதவியை துறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் தாக்குதல் நடந்துள்ளன.
- சாமி சிலைகளை பெயர்த்த மர்ம கும்பல் சாலைகளிலும், குளங்களிலும் வீசிச்சென்றன.
டாக்கா:
சமீப காலமாக வெளிநாடுகளில் இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன.
இந்நிலையில், வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்றனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்கள் மீது தாக்குதல்களை நடத்திய மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் இருந்த கோவிலில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் காலேஜ்பாரா பகுதியில் உள்ள கோவிலில் 4 சாமி சிலைகளும் மற்றும் சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோவில்களில் 14 சாமி சிலைகளும் சூறையாடப்பட்டன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.
- சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
- இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.
மிர்பூர்
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
- 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- அஸ்வின் ஆட்ட நாயகனாகவும், புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிப்பு.
மிர்பூர்:
வங்காள தேசம் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி நாளான நேற்று இந்திய அணி 74 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற செய்தனர். அஸ்வின் 42 ரன்களுடனும், ஐயர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றுள்ளது. அஸ்வின் ஆட்ட நாயகன் விருதையும், புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரராக ஸ்ரேயஸ் ஐயர் திகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
நான்காவது நாள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாக இருந்தாலும், ஸ்ரேயஸ் தனது திறமையை வெளிப்படுத்தியதாகவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு அவரது பார்ம் முக்கியமானதாக இருக்கும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் கஃப் குறிப்பிட்டுள்ளார்.
- வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது.
- 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர், அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 87 ரன்களும், 71 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.
வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்னும், ஜாகீர் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 37 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன.
சுப்மன் கில் 7 ரன்னிலும், புஜாரா 6 ரன்னிலும் , விராட் கோலி ஒரு ரன்னி லும் சுழற்பந்து வீச்சாளர் மெகிதி ஹசன் மிராஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல் 2 ரன்னில் சகீப்-அல்-ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. அக்ஷர் படேல் 26 ரன்னும், ஜெய்தேவ் உனட்கட் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 100 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது.
அதே நேரத்தில் 6 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பந்து வீசியது.
மெகிதி ஹசன் மிராஸ் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி இந்திய வீரர்களை திணறடித்தார்.
ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் 13 ரன்னில் சகீப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ரன்னில் வெளியேறினார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன் எடுத்து இருந்தார். அதை தொடர்ந்து அக்ஷர் படேலும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இருவரையும் மெகிதி ஹசன் மிராஸ் அவுட் செய்தார்.
74 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட் களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
8-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-அஸ்வின் ஜோடி ஆடியது. விக்கெட் இழக்காமல் இருக்கும் வகையில் இரு வரும் நிதானமாக ஆட் டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி தொடக்கத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த நிலையில் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசினர். இருவரின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்திய அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அஸ்வின் 62 பந்தில் 42 ரன்னுடனும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யார் 46 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
- வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 6 விக்கெட்கள் கைவசம் உள்ளன.
- இந்திய வீரர்களில் ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் வெற்றி பெற முடியும்.
டாக்கா:
இந்தியா வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்காளதேசம், முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.
தொடந்து 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தள்ளது.
அக்சர் பட்டேல் 26 ரன்னுடனும், உனத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியிடம் இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்று வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெறுமா? அல்லது இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி வங்காளதேசம் வெற்றி பெறுமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளதாவது: நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதும் பேட்டிங் செய்ய இன்னும் சிலர் இருக்கிறார்கள். அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
அக்சர் ஏற்கனவே செட் ஆகி உள்ளார். அவர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துகிறார். ரிஷப் (பண்ட்) மற்றும் ஐயர் (ஷ்ரேயாஸ் ) இன்னும் இருக்கிறார்கள். நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களில் யாராவது ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் நாம் வெற்றி பெற முடியும். மேலும் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவை வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.
- வங்காளதேச வீரர்கள் ஜாகிர் ஹசன் 51 ரன்கள், லித்தன் தாஸ் 73 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
- 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இந்தியா 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
மிர்பூர்:
இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. இது வங்காளதேசம் ஸ்கோரை விட 87 ரன் கூடுதலாகும். இந்திய அணி ஒரு கட்டத்தில் 94 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான ரிஷப் பண்ட்-ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ரிஷப் பண்ட் 93 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சகீப்-அல்-ஹசன், தஜி ஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே அஸ்வின் வங்காளதேச அணியின் தொடக்க ஜோடியை பிரித்தார். நஜிமுல் உசேன் 5 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது ஸ்கோர் 13 ஆக இருந்தது. 2-வது விக்கெட் டுக்கு ஜாகீர் ஹசனுடன், மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் நிலைத்து நிற்கவிடவில்லை. ஸ்கோர் 26ஆக இருந்தபோது வங்காளதேச அணியின் 2வது விக்கெட் சரிந்தது. மொமினுல்ஹக் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு ஜாகீர்ஹசனுடன் சகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 23.1-வது ஓவரில் 50-வது ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜெயதேவ் உனட்கட் பிரித்தார். சகீப்-அல்-ஹசன் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த முஷ்பிகுர் ரகீம் 9 ரன்னில் அக்ஷர் படேல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். வங்காளதேசம் 70 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து இருந்தது.
நிதானமாக ஆடிய ஜாகிர் ஹசன் 51 ரன்களும், லித்தன் தாஸ் 73 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். நூருல் ஹசன், தஸ்கின் அகமது தலா 31 ரன்கள் சேர்க்க, வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது சிராஜ், அஷ்வின் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன், ஷூப்மான் கில் 7 ரன், புஜாரா 6 ரன், விராட் கோலி ஒரு ரன், என முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. அக்சர் பட்டேல் 26 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.






