என் மலர்
டென்னிஸ்
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 (8-10) எனஇழந்த ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சனை 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனையை ரைபகினா வீழ்த்தினார்.
- அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ - ரைபகினா மோத உள்ளனர்.
டொராண்டோ:
கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) - மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) மோதினர்.
இதில் முதல் செட்டை ரைபகினா எளிதில் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 2-வது செட்டில் கோஸ்ட்யுக் காயமடைந்தார். இதனால் அவரால் மேற்கொண்டு விளையாட முடியவில்லை.
போட்டியை மேற்கொண்டு தொடர முடியாத சூழலில் ரைபகினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா எம்போகோ (கனடா)- ஜெசிகா பௌசாஸ் மனிரோ (ஸ்பானிஷ்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் விக்டோரியா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ - ரைபகினா மோத உள்ளனர்.
- இகா ஸ்வியாடெக் (போலந்து) கிளாரா டௌசன் (டென்மார்க்) ஆகியோர் மோதினர்.
- இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டௌசன் 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) கிளாரா டௌசன் (டென்மார்க்) ஆகியோர் மோதினர்.
இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டௌசன் 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜப்பான் வீராங்கனை ஒசாகா 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா, லாத்வியாவின் செவட்சோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நடந்த 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் 1-0 என ஸ்வரேவ் முன்னிலை பெற்றபோது, அர்ஜெண்டினா வீரர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய விக்டோரியா 6-1,6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரீம்ஸ்கா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ரிபாகினா அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- நார்வே வீரர் காஸ்பர் ரூட் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் கரன் கச்சனாவ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடந்த 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-0,7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தேர்வாகினர்.
பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் கியோ ஹான்யூ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரிவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- லெஹெக்கா 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
- அனிசிமோவா 6-4 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
டொரண்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜிரி லெஹெக்கா (செக்) - மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லெஹெக்கா 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது சுற்றில் ஆர்தர் பில்ஸ் உடன் மோத உள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா) மற்றும் லுலு சன் (நியூசிலாந்து) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் அனிசிமோவா 6-4 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.