என் மலர்
விளையாட்டு
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
- 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.
156 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகிறார்.
- ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ரன்கள் குவித்தது.
- விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.
காலே:
ஆஸ்திரேலியா-இலங்கை இடையேயான 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 257 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஸ்டீவ் சுமித், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். ஸ்டீவ் சுமித் 131 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 156 ரன்னும்(15 பவுண்டரி, 2 சிக்சர்)) எடுத்தனர்.
156 ரன்கள் குவித்ததன் மூலம் ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ்கேரி முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு இலங்கை, வங்காளதேசத்துக்கு எதிராக கில்கிறிஸ்ட் 144 ரன்கள் எடுத்திருந்ததே ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.
- மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தை குஷ்தில் ஷா ஸ்வீப் ஷாட் அடித்தார்.
- மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. முத்தரப்பு தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டர் வீரரான ரச்சின் ரவீந்திரா காயமுற்றார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்களை குவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து 331 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி 38-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா எதிர்கொண்டார். நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தை குஷ்தில் ஷா ஸ்வீப் ஷாட் அடித்தார்.
இதில் கேட்ச் வாய்ப்பை துரத்தி வந்த ரச்சின் ரவீந்திரா அதனை விக்கெட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பந்து நேரடியாக அவரது முகத்தை தாக்கியது. இதில் பலத்த காயமுற்ற ரச்சின் ரவீந்திரா இரத்த காயத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். காயமுற்ற ரச்சின் ரவீந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
போட்டியில் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
- ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது.
- கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது.
இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இந்தியாவில் வைத்து இந்திய அணியை ஐந்து முறை மட்டுமே வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 31 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
- எஸ்.ஏ.20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோகன்னஸ்பெர்க்:
எஸ்.ஏ.20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்கில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், எம் ஐ கேப் டவுன் அணியும் மோதின.
இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், தனது அணி இறுதிப்போட்டியை எட்டியதால் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பெடிங்ஹாமுக்கு சனிக்கிழமையான நேற்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தனது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, தனது திருமணத்தை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4 என முதல் செட்டை வென்றார். இரண்டாவது செட்டை ஹர்காக்ஸ் 7-6 (7-5) என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அல்காரஸ் 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்தது.
புலவாயோ:
ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.
அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் மீதம் 2 நாள் உள்ள நிலையில் 254 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 7 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் இப்போட்டியின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- முதலில் ஆடிய எம்.ஐ.கேப் டவுன் அணி 181 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 105 ரன்னில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் நடந்தது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது. எலிமின்னேட்டர் 2 சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எஸடரூசியன் 39 ரன்னும், பிரேவிஸ் 38 ரன்னும், ரிக்கல்டன் 33 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ரன்னில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ஏபெல் 30 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
எம்.ஐ.கேப் டவுன் சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலி வீரர் மேட்டி பெல்லூசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டி மினார் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 252 ரன்களில் ஆல் அவுட்டாகி தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. 6-வது வீரராக களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 81 ரன்னும், கேன் வில்லியம்சன் 58 ரன்னும் சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் அதிரடியாக ஆடி 69 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 40 ரன்னும் தயாப் தாஹிர் 30 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கு அளிக்கப்பட்டது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், போலந்து வீரர் ஹ்யூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் ஹர்காக்ஸ் 6-7 (5-7), 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அரையிறுதியில் ஹர்காக்ஸ் ஸ்பெயினின் அல்காரசுடன் மோதுகிறார்.






