என் மலர்tooltip icon

    விளையாட்டு

    போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    லிஸ்பன்:

    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், உலகின் சிறந்த வீரர் விருதை 5 முறை வென்றவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ நேஷன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் 35 வயதான ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் ரொனால்டோ தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். ரொனால்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்து இருக்கும் போர்ச்சுக்கல் கால்பந்து சங்கம் இன்று நடைபெறும் சுவீடனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என்று கூறியுள்ளது. யுவென்டஸ் கிளப் (இத்தாலி) அணிக்காகவும் விளையாடி வரும் ரொனால்டோ அடுத்து வரும் அந்த அணியின் லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
    ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
    துபாய்:

    ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

    டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வாட்சன் களமிறங்கினார்.  அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடு வாட்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    14வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வாட்சனும் 42 ரன்னில் வெளியேறினார்..

    எம்எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடினர். டோனி 13 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். பிராவோ டக் அவுட்டானார்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. 10 பந்தை சந்தித்த ஜடேஜா 25 ரன்னிலும், 2 பந்தை சந்தித்த சாஹர் 2 ரன்னையும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பிரிஸ்டோ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 13 பந்துகளை சந்தித்த வார்னர் 9 ரன்களை எடுத்து சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினார்.

    அடுத்து வந்த மணீஷ் பாண்டே 4 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் தொடக்க வீரர் பிரிஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    24 பந்துகளை சந்தித்த பிரிஸ்டோவ் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிரியம் கர்ருடன், வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பிரியம் கர் 16 ரன்னிலும், அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார். ஒற்றை வீரராக போராடிய வில்லியம்சன் 39 பந்தில் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து கரன் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    சென்னை அணியின் கரன் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சென்னை அணி.
    துபாய்:

    ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

    3வது ஓவரில் டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வாட்சன் களமிறங்கினார்.

    சாம் கர்ரன் அதிரடியாக ஆடினார். அவர் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து அம்பதி ராயுடு இறங்கினார். 

    வாட்சன், ராயுடு ஜோடி நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சருமாக விளாசினர். 

    14வது ஓவரில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. பொறுப்புடன் ஆடிய ராயுடு 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    அவரை தொடர்ந்து வாட்சனும் 42 ரன்னில் அவுட்டானார்.

    எம்எஸ் டோனியும், ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடினர். டோனி 13 பந்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். பிராவோ டக் அவுட்டானார்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 25 ரன்னும் சாஹர் 2 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    ஐதராபாத் சார்பில் சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    துபாய்:

    ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
     
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:

    வாட்சன், டு பிளிஸ்சிஸ், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, சாம் கர்ரன், ஜடேஜா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாகூர், வெயின் பிராவோ, கரன் சர்மா

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

    டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, விஜய்சங்கர், ஷாபாஸ் நதீம், பிரியம் கார்க், ரஷித் கான், சந்தீப் சர்மா, கலீல் அகமது, டி. நடராஜன்.
    மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறிய நிலையில், ருத்ர தாண்டவம் ஆடிய டி வில்லியர்ஸ் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

    விராட் கோலி 28 பந்தில் 33 ரன்களே அடித்த நிலையில், டி வில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார்.

    இந்நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறிய நிலையில், டி வில்லியர்ஸ் மட்டும் அபாரமாக விளையாடினார். அவர் மனித சக்திக்க அப்பாற்பட்டவர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த ஆடுகளம் டிரையராக இருந்தது. 2-வது பந்து வீசும்போது பனி இருக்காது என்று நினைத்தோம். மனித சக்திற்கு அப்பாற்பட்ட டி வில்லியர்ஸைத் தவிர மற்ற பேட்ஸ்மேனகள் போராடினர். 165 ரன்கள் வருமா? என்று பேசிக் கொண்டிருக்கும்போது, 194 ரன்கள் வந்ததற்கு காரணம் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது ஆட்டம் நம்ப முடியாதது’’ என்றார்.
    கிறிஸ் கெய்ல் வயிற்று கோளாறில் இருந்து மீண்டு வந்துள்ளதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரும் பெரிதாக அமையவில்லை. 7 போட்டிகளிலும் ஆறில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    நாளைமறுநாள் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்தால் அந்த அணிக்கு பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் முதல் பாதியில் பட்டி அடிக்கு பதிலடி கொடுக்க விரும்பும்.

    பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் உள்ளார். அவர் இதுவரை களம் இறங்கவில்லை. வயிற்று கோளாறு காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது அதில் இருந்து குணமடைந்து விட்டார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் எங்கள் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பவர் என்று கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    எம்எஸ் டோனி மீதான மோகத்தால் தனது வீட்டையே மஞ்சள் கலராக மாற்றி, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார் அரங்கூர் கிராம ரசிகர்.
    கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள், நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பொறித்த சட்டைகள், டீ-சர்ட்டுகள் அணிந்து வலம் வருவதை பார்த்திருப்பீர்கள்.

    சிலர் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்தியிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் தீட்டி மாற்றியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா?, 
    ஆம் அது போன்ற ஒரு ருசிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-



    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி- விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். டோனியின் தீவிர ரசிகரான இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார்.

    வெளிநாடு சென்றாலும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் துளிக்கூட குறையவில்லை.

     கோபிகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், டோனிக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தார். அதன்படி தனது வீட்டை டோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணியும் ஆடை நிறத்திலும், அதில் டோனியின் படத்தையும் வரைய முடிவு செய்தார். இதையடுத்து கோபிகிருஷ்ணன், ரூ.1½ லட்சம் செலவில் தனது வீடு முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் டோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார்.

    கிரிக்கெட் வீரருக்காக தனது வீட்டையே மாற்றியுள்ள ரசிகரையும், அவர் வரைந்துள்ள தோனி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து பார்த்து விட்டு, கோபிகிருஷ்ணனை பாராட்டி செல்கின்றனர்.
    மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் இன்று முதல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஒடென்ஸ்:

    மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த மார்ச் 15-ந் தேதிக்கு பிறகு நடைபெறும் முதலாவது சர்வதேச பேட்மிண்டன் போட்டியான இது கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறுகிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் வீரர் காஷ்யப் மற்றும் நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோட்டா உள்ளிட்ட ஜப்பான் வீரர்கள் பலரும் கொரோனா அச்சம் காரணமாக விலகி உள்ளனர்.

    இதனால் 2017-ம் ஆண்டு சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மீண்டும் பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை சந்திக்கிறார். முதல் தடையை ஸ்ரீகாந்த் கடந்தால் 2-வது சுற்றில் சக நாட்டு வீரர் சுபாங்கர் தேவ்வை சந்திக்க நேரிடும். அதிலும் முன்னேறினால் கால்இறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோ டின் சென்னுடன் மோத வேண்டியது வரும். மற்றொரு இந்திய வீரரான அஜய் ஜெயராம் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஆன்டர் ஆன்டென்சனை எதிர்கொள்கிறார். 19 வயது இந்திய வீரரான லக் ஷயா சென், பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவை சந்திக்கிறார். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (11,740 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவில் உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (11,740 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,850 புள்ளி) 2-வது இடத்திலும், கால்இறுதியில் தோல்வி அடைந்த ஆஸ்திரியாவின் டொமினிக் திம் (9,125 புள்ளி) 3-வது இடத்திலும், காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காத சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (6,630 புள்ளி) 4-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர். அரைஇறுதிக்கு முன்னேறிய கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், ரஷியாவின் டேனில் மெட்விடேவ் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 2 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 5-வது இடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா 2 இடம் சரிந்து 6-வது இடத்தை பெற்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனை வென்று கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சி முகர்ந்த முதல் போலந்து வீராங்கனை என்ற சாதனையை படைத்த 19 வயதான இகா ஸ்வியாடெக் அதிரடியாக 54-வது இடத்தில் இருந்து 17-வது இடத்துக்கு உயர்ந்து இருக்கிறார்.
    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், நடுகள வீரருமான கால்டன் சாப்மேன் மரணம் அடைந்தார்.
    பெங்களூரு:

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், நடுகள வீரருமான கால்டன் சாப்மேன் பெங்களூருவில் வசித்து வந்தார். 49 வயதான கால்டனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். 1995 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கால்டன் இந்திய அணிக்காக விளையாடினார். அவரது தலைமையில் 1997-ம் ஆண்டில் தெற்காசிய கால்பந்து சம்மேளன கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஜே.சி.டி. மில்ஸ் (பஞ்சாப்) அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடிய அவர் 2001-ம் ஆண்டில் தொழில்முறையிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டாடா கால்பந்து அகாடமி வீரரான அவர் ஓய்வுக்கு பிறகு கிளப் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். கால்டன் மறைவுக்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    கூகுளில் ரஷித் கான் மனைவி என டைப் செய்து தேடும்போது, அனுஷ்கா ஷர்மா விவரத்தை காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரஷித் கான். தனது அபார சுழற்பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரரக திகழ்கிறார். ஐபிஎல், கரீபியன் பிரிமீயர் லீக், பிக் பாஷ் போன்ற தொடர்களில் விளையாடுகிறார்.

    கூகுள் தேடுதலில் ரஷித் கானின் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மவின் விவரங்களை காண்பிக்கிறது. அத்துடன் ரஷித் கான் திருமணம் குறித்த தகவலில் திருமணம் ஆனதாகவும், மனைவி பெயர் அனுஷ்கா ஷர்மா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விராட் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா திருமணம் செய்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் ஆன தேதியை காட்டுகிறது.

    அனுஷ்கா ஷர்மா விராட் கோலியின் மனைவி. 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அடுத்த வருடம் ஜனவரியில் அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

    அப்படி என்றால் ரஷித் கான் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மாவின் பெயர் வரக் காரணம்?.

    ரஷித் கான்

    கடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செசனில் ரசிகர் ஒருவர் ரஷித் கானிடம் பிடித்த பாலிவுட் நடிகை யார்? எனக் கேட்ட கேள்விக்கு ரஷித் கான், அனுஷ்கா சர்மா மற்றும் பிரித்தி ஜிந்தா எனக் கூறியிருந்தார். அதன்பிறகு பத்திரிகைகள் ரஷித் கானுக்கு பிடித்த நடிகை அனுஷ்கா ஷர்மா என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் ரஷித் கான் கடும் கோபம் அடைந்தார்.

    இதுகுறித்து செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால், அனுஷ்கா ஷர்மா ரஷித் கானின் மனைவி எனத் வெளிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
    டி வில்லியர்சின் அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.
    ஷார்ஜா:

    ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் அடித்தனர். தேவ்தத் படிக்கல் 32 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி 15 ஓவரில் 111 ரன்களே எடுத்திருந்தது. 16-வது ஓவரில் இருந்து டி வில்லியர்ஸ் வாணவேடிக்கையை தொடங்கினார்.

    கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 33 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 33 பந்தில் 73 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    அந்த அணியின் டாம் பேண்டன், ஷுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஷுப்மான் கில் மட்டும் தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

    இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பெங்களூர் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர், மாரிஸ் தலா 2 விக்கெட்டும், நவ்தீப் சைனி, மொகமது சிராஜ், சஹல், உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    ×