என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி வில்லியர்சின் அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.
    ஷார்ஜா:

    ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் அடித்தனர். தேவ்தத் படிக்கல் 32 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி 15 ஓவரில் 111 ரன்களே எடுத்திருந்தது. 16-வது ஓவரில் இருந்து டி வில்லியர்ஸ் வாணவேடிக்கையை தொடங்கினார்.

    கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 33 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 33 பந்தில் 73 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    அந்த அணியின் டாம் பேண்டன், ஷுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஷுப்மான் கில் மட்டும் தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.

    இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பெங்களூர் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர், மாரிஸ் தலா 2 விக்கெட்டும், நவ்தீப் சைனி, மொகமது சிராஜ், சஹல், உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    டி வில்லியர்ஸ்க்கு ஆடுகளம் எளிதானது போன்று தோன்றுகிறது, நான் விரைவாக அவுட்டாகி இருக்கனும் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஷார்ஜாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 47 ரன்கள் அடித்தார்.

    டி வில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். விராட் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தது.

    டி வில்லியர்ஸ் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன ஆரோன் பிஞ்ச் ‘‘ஏபி டி வில்லியர்ஸ் ஸ்பெஷல் பேட்ஸ்மேன். இவரை போன்ற பேட்ஸ்மேன்கள் பந்தை விளாசும்போது எதுவே இல்லாமல் எல்லாவற்றையும் செய்ய முடியும். அவர் விளாசும்போது எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும். இந்த ஆடுகளம் விளையாட எளிதானது என்பதுபோல் மாற்றிவிட்டார். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 ரன்கள் சிறந்த ஸ்கோர் என நினைத்தோம். ஆனால், 194 ரன்கள் குவித்து விட்டோம்’’ என்றார்.
    ஐபிஎல் 2020 சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள், பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் இருவர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று அணிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்கள்.

    அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கேஎல் ராகுல் 1 சதம், 3 அரைசதங்களுடன் 387 ரன்கள் குவித்து முதல் இடம் பிடித்துள்ளார். மயங்க் அகர்வால் 1 சதம், 2 பவுண்டரிகளுடன் 337 ரன்கள் விளாசி 2-வது இடத்தில் உள்ளார்.

    பவுண்டரிகள் அடித்தவர்களில் பட்டியலில் கேஎல் ராகுல் 37 பவுண்டரிகளுடன் முதல இடத்தில் உள்ளார். மயங்க் அகர்வால் 34 பவுண்டரிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 33 பவுண்டரிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிஸ்சிஸ் 29 பவுண்டரிகளுடன் 4-வது இடத்தையும், தேவ்தத் படிக்கல் 25 பவுண்டரிகளுடன் 5-வது இடத்தையும், வாட்சன் 23 பவுண்டரிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 16 சிக்ஸ் உடன் சஞ்சு சாம்சன் முதல் இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 16 சிக்ஸ் உடன் 2-வது இடத்திலும், மும்பை அணிகளைச் சேர்ந்த இஷான் கிஷன், ரோகித் சர்மா ஆகியோர் தலா 14 சிக்சர்களுடன் 4-வது மற்றும் 5-வது இடங்களை பிடித்துள்ளனர். பொல்லார்டு 13 சிக்சர்களுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
    டி வில்லியர்ஸ் 33 பந்தில் 63 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
    ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் அடித்தனர். இதனால் ஓவருக்கு 9 என்ற விகிதத்தில் ரன்கள் வந்து கொண்டிருந்தது. அணியின் ஸ்கோர் 7.4 ஓவரில் 67 ரன்னாக இருக்கும்போது தேவ்தத் படிக்கல் 23 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்று சிறப்பாக விளையாடிய ஆரோன் பிஞ்ச் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 12.2 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர்.

    ஆர்சிபி 15 ஓவரில் 111 ரன்களே எடுத்திருந்தது. அப்போது டி வில்லியர்ஸ் 9 பந்தில் 8 ரன்களே எடுத்திருந்தார். 16-வது ஓவரில் இருந்து டி வில்லியர்ஸ் வாணவேடிக்கை நிகழ்ச்சியை தொடங்கினார். 16-வது ஓவரில் டி வில்லியர்ஸ் இரண் சிக்ஸ், ஒரு பவுண்டரி விரட்டினார்.

    17-வது ஓவரில் அதேபோல் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 18-வது ஓவரை அந்த்ரே ரஸல் வீசினார். இந்த ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்தார். முதல் பந்தில் பவுண்டரி, 2-வது பந்தில் சிக்ஸ் அடித்து 23 பந்தில் அரைசதம் அடித்தார்.

    19-வது ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 17 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 28 பந்தில் 33 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 33 பந்தில் 73 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டி20 லீக்கான வங்காளதேச பிரிமீயர் லீக் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வங்காளதேச பிரிமீயர் லீக் 2020 சீசன் நடைபெறாது என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    வங்காளதேச பிரிமீயர் லீக்கை பற்றி நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘இந்த வருடம் வங்காளதேச பிரிமீயர் லீக் நடைபெறாது. அதேவேளையில் மூன்று அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறும். அடுத்த வருடம் டி20 தொடரை பார்க்கலாம். நாங்கள் எந்த போட்டியையும் தவறவிட விரும்பவில்லை. ஆனால், எல்லாமே சூழ்நிலையை சார்ந்தது.

    ஏனென்றால், வெளிநாட்டு வீரர்கள் தேவை. தற்போதைய நேரத்தில் பாதுகாப்பு மிகவும் அவசியம். வங்காளதேசத்தில் நடைபெற இருப்பதால், வங்காளதேச அணி என்றால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கொஞ்சம் அதிகமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால், அதிகமான வீரர்கள் இருப்பார்கள். அணி நிர்வாகம் அதிக ஸ்டாஃப்களை கொண்டது. இதை சமாளிக்க முடியுமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷாந்த் சர்மா காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் இசாந்த் சர்மா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே காயத்தால் அவதிப்பட்டதால் டெல்லி அணிக்காக தொடர்ந்து விளையடவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மட்டுமே விளையாடினார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி பயிற்சி செசன் போது இசாந்த் ஷர்மாவின் இடது பக்கம் விலா எலும்பில் வலி ஏற்பட்டதாக டெல்லி அணி தெரிவித்துள்ளது. ஏற்கனவே தசை நார் கிழிந்து அவதிப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறார். ஒருவேளை காயம் சரியாகவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும்.
    ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

    1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. இசுரு உடானா, 9. நவ்தீப் சைனி, 10, முகமது சிராஜ், 11. சாஹல்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. டாம் பாண்டன், 4. நிதிஷ் ராணா, 5. மோர்கன், 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோட்டி, 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயத்தில் சுமார் ஒரு வாரம் விளையாடமாட்டார் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்ததால் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.

    ரிஷப் பண்ட் இல்லாததால் அணியின் காம்பினேசனில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் தள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் ஹெட்மையர், ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு பவர் ஹிட்டரை டெல்லி இழந்தது. மும்பை அணிக்கெதிராக டெல்லி அணி கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும. இதற்கு இவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் குணமடைவதற்கு ஒருவார காலம் ஆகும் என டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் காயம் குறித்த எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. நான் டாக்டரிடம் பேசினேன். அவர் ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் எனக் கூறினார். அவர் விரைவில் வலுவான வகையில் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

    மும்பை தோல்வி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்துள்ளோம். 170 முதல் 175 ரன்கள் அடித்திருந்தால் முற்றிலும் போட்டி மாறியிருக்கும்’’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது. இதில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் ஐந்து வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் அசத்தி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் சில பகுதியில் முன்னேற்றம் தேவை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘தற்போது நாங்கள் விளையாடி வரும் கிரிக்கெட் அதிகமான உறுதியை கொடுத்துள்ளது. எங்களுடைய உத்வேகம் முக்கியமானது. முக்கியமான இரண்டு புள்ளிகள் கிடைத்தது எங்களுக்கு சரியான நாள். நாங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்துள்ளோம். இருந்தாலும் முன்னேற்றம் அடைய சில விசயங்கள் உள்ளன’’ என்றார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக இருந்த ஷஷாங்க் மனோகர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இன்னும் புதிய சேர்மன் நியமிக்கப்படவில்லை.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக இருந்தவர் ஷஷாங்க் மனோகர். இவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அந்த இடம் நிரப்பப்படாமல் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதற்கான நடவடிக்கை செயல்படாமல் இருந்தது.

    பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி ஐசிசி சேர்மனாக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. அதற்கு ஏற்ப கங்குலி தயாராகி வந்தார். ஆனால் பிசிசிஐ-யில் அவரது பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில் சேர்மன் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் வரும் 18-ந்தேதி விண்ணப்பம் செய்வதற்கான கடைசிக்காலம் எனத் தெரிவித்துள்ளது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்க இருக்கிறது.
    ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப்ஸ் என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடமிருக்கும். ஆனால் இந்த முறை அது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை சென்னை அணி முதல் பாதி போட்டிகளில் இப்படி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையை எதிர்கொண்டது கிடையாது.

    ஆர்.சி.பி.க்கு எதிரான தோல்விக்குப்பின் பேட்டியளித்த எம்எஸ் டோனி, சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒன்றை சரி செய்தால் மற்றொன்று உருவாகிறது எனக் கூறினார். இதிலிருந்தே டோனிக்கு தன்னம்பிக்கை போய்விட்டது என்பமு சற்று தெரியவந்துள்ளது.

    ஹாட்ரிக் தோல்விக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக வெற்றி பெற்றதும், அப்பாடா சென்னை அணி ஃபார்முக்கு வந்து விட்டது என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கொல்கத்தா, ஆர்சிபி-க்கு எதிராக தோல்வியை சந்தித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அடுத்த ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்ஸ் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை துபாய் ஆடுகளத்தில் சந்திக்கிறது.

    துபாய் ஆடுகளம் சற்று கடினமான (Tricky) ஆடுகளம். முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். முதலில் பந்து வீசினால் 150 முதல் 160 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி  என்றால்தான் வெற்றியை நினைத்து பார்க்க முடியும். இந்த மைதானத்தில் சிஎஸ்கே நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியடைந்த போட்டிகளில் சேஸிங்கின்போது 157 ரன்னைத் தாண்டியது கிடையாது.

    ஏற்கனவே நடைபெற்ற சிஎஸ்கே - ஐதராபாத் போட்டியில் சென்னை அணி 165 ரன்னை சேஸிங் செய்ய முடியாமல் 7 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இந்த போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ், மணிஷ் பாண்டே, வில்லியம்சன் ஏமாற்றம் அளித்த நிலையில் பிரியம் கார்க் (26 பந்தில் 51 ரன் நாட்அவுட்), அபிஷேக் ஷர்மா (24 பந்தில் 31 ரன்கள்) சிறப்பாக விளையாடினர்.

    சேஸிங் செய்யும்போது டோனி 47 ரன்களும், ஜடேஜா 50 ரன்கள் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதற்கு காரணம் டு பிளிஸ்சிஸ் (22), வாட்சன் (1), ராயுடு (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே காரணம்.

    துபாயில் நான்கு ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதற்கு காரணம் டு பிளிஸ்சிஸ், வாட்சன் ஆட்டமிழக்காமல் வெற்றி பெற வைத்ததுதான். 179 இலக்கை விக்கெட் இழக்காமல் அடித்தனர்.

    பவர் பிளேயில் ரன்கள் அடிக்கா விட்டாலும் இருவரும் களத்தில் நின்றாலே அது சென்னை அணிக்கு சாதகம்தான். டு பிளிஸ்சிஸ் (17 கேகேஆர், 8 ஆர்சிபி) கடைசி இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. இது சிஎஸ்கே-வுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

    ஆர்.சி.பி.க்கு எதிராக அறிமுகம் ஆன ஜெகதீசன் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 33 ரன்கள் அடித்தார். அவர் இன்னும் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அம்பதி ராயுடு இன்னிங்சை கடைசி வரை கொண்டு செல்வதும் அவசியம்.

    டோனியின் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் ஹிட்டர் இல்லாதது அணிக்கு பலவீனமாக இருக்கிறது.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர், சாம் கர்ரன் பவர் பிளே-யில் சிறப்பாக பந்து வீசுகின்றனர். ஆனால் சாம் கர்ரன் டெத் ஓவரில் கோட்டை விட்டு விடுகிறார். ஆர்சிபிக்கு எதிராக 18-வது ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தது மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

    தீபக் சாஹரை முழுவதுமாக பவர் பிளேயில் பயன்படுத்தாமல் டெத் ஓவரில் பயன்படுத்தினால் டெத் ஓவர் சற்று பலம் பெறும். சுழற்பந்து வீச்சு பேசும்படி மிகப்பெரிய அளவில் இல்லை. வெயின் பிராவோ மிடில் ஓவரை ஸ்பின்னர்களுடன் சேர்ந்து சமாளிக்கிறார்.

    அவர் விக்கெட் வீழ்த்தினால் மிடில் ஓவர் ஸ்ட்ராங் ஆகும். மொத்தத்தில் டெத் ஓவரில் ரன்னை கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் அசத்தினால் மட்டுமே சென்னை அணி வெற்றியை ருசிக்க முடியும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 3-ல் வெற்றி 4-ல் தோல்வியோடு 5-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் அந்த அணிக்கு முதுகெலும்பே வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர்தான். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தால் மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க் உள்ளனர்.

    கேன் வில்லியம்சனுக்கு அதிக பந்துகள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதிக்க வேண்டும் என்றால் இவரது பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

    பந்து வீச்சில் ரஷித் கான், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் ஆகியோர் மட்டுமே அந்த அணிக்கு பலம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் ரஷித் கான் பந்து வீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. புவி காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மிப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. கலீல் அகமது, சந்தீப் சர்மா நேர்த்தியாக பந்து வீசுவது கடினம்.

    வார்னர் முதலில் பேட்டிங் எடுத்து 170 முதல் 180 ரன்கள் அடித்து, அதற்குள் சிஎஸ்கே-வை கட்டுப்படுத்த முயற்சிப்பார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் 100-வது தோல்வியை சந்தித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது போட்டி நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 162 ரன்கள் அடித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில், இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தத் தோல்வி டெல்லி அணிக்கு 100-வது தோல்வியாகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 தோல்விகளை சந்தித்த 2-வது அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 100 தோல்விகளை சந்தித்துள்ளது.
    ×