search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம் பிரிமீயர் லீக்
    X
    வங்காளதேசம் பிரிமீயர் லீக்

    இந்த வருடம் பிரிமீயர் லீக் கிடையாது: வங்காளதேச கிரிக்கெட் போர்டு தலைவர்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டி20 லீக்கான வங்காளதேச பிரிமீயர் லீக் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வங்காளதேச பிரிமீயர் லீக் 2020 சீசன் நடைபெறாது என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    வங்காளதேச பிரிமீயர் லீக்கை பற்றி நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘இந்த வருடம் வங்காளதேச பிரிமீயர் லீக் நடைபெறாது. அதேவேளையில் மூன்று அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறும். அடுத்த வருடம் டி20 தொடரை பார்க்கலாம். நாங்கள் எந்த போட்டியையும் தவறவிட விரும்பவில்லை. ஆனால், எல்லாமே சூழ்நிலையை சார்ந்தது.

    ஏனென்றால், வெளிநாட்டு வீரர்கள் தேவை. தற்போதைய நேரத்தில் பாதுகாப்பு மிகவும் அவசியம். வங்காளதேசத்தில் நடைபெற இருப்பதால், வங்காளதேச அணி என்றால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கொஞ்சம் அதிகமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால், அதிகமான வீரர்கள் இருப்பார்கள். அணி நிர்வாகம் அதிக ஸ்டாஃப்களை கொண்டது. இதை சமாளிக்க முடியுமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
    Next Story
    ×