என் மலர்
விளையாட்டு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங், பந்து வீச்சை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்க இருக்கிறது.
ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப்ஸ் என்றாலே அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடமிருக்கும். ஆனால் இந்த முறை அது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை சென்னை அணி முதல் பாதி போட்டிகளில் இப்படி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையை எதிர்கொண்டது கிடையாது.
ஆர்.சி.பி.க்கு எதிரான தோல்விக்குப்பின் பேட்டியளித்த எம்எஸ் டோனி, சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒன்றை சரி செய்தால் மற்றொன்று உருவாகிறது எனக் கூறினார். இதிலிருந்தே டோனிக்கு தன்னம்பிக்கை போய்விட்டது என்பமு சற்று தெரியவந்துள்ளது.
ஹாட்ரிக் தோல்விக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக வெற்றி பெற்றதும், அப்பாடா சென்னை அணி ஃபார்முக்கு வந்து விட்டது என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கொல்கத்தா, ஆர்சிபி-க்கு எதிராக தோல்வியை சந்தித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்ஸ் சுற்றை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில் 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை துபாய் ஆடுகளத்தில் சந்திக்கிறது.
துபாய் ஆடுகளம் சற்று கடினமான (Tricky) ஆடுகளம். முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். முதலில் பந்து வீசினால் 150 முதல் 160 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் வெற்றியை நினைத்து பார்க்க முடியும். இந்த மைதானத்தில் சிஎஸ்கே நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியடைந்த போட்டிகளில் சேஸிங்கின்போது 157 ரன்னைத் தாண்டியது கிடையாது.
ஏற்கனவே நடைபெற்ற சிஎஸ்கே - ஐதராபாத் போட்டியில் சென்னை அணி 165 ரன்னை சேஸிங் செய்ய முடியாமல் 7 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ், மணிஷ் பாண்டே, வில்லியம்சன் ஏமாற்றம் அளித்த நிலையில் பிரியம் கார்க் (26 பந்தில் 51 ரன் நாட்அவுட்), அபிஷேக் ஷர்மா (24 பந்தில் 31 ரன்கள்) சிறப்பாக விளையாடினர்.
சேஸிங் செய்யும்போது டோனி 47 ரன்களும், ஜடேஜா 50 ரன்கள் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதற்கு காரணம் டு பிளிஸ்சிஸ் (22), வாட்சன் (1), ராயுடு (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே காரணம்.
துபாயில் நான்கு ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதற்கு காரணம் டு பிளிஸ்சிஸ், வாட்சன் ஆட்டமிழக்காமல் வெற்றி பெற வைத்ததுதான். 179 இலக்கை விக்கெட் இழக்காமல் அடித்தனர்.
பவர் பிளேயில் ரன்கள் அடிக்கா விட்டாலும் இருவரும் களத்தில் நின்றாலே அது சென்னை அணிக்கு சாதகம்தான். டு பிளிஸ்சிஸ் (17 கேகேஆர், 8 ஆர்சிபி) கடைசி இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. இது சிஎஸ்கே-வுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.
ஆர்.சி.பி.க்கு எதிராக அறிமுகம் ஆன ஜெகதீசன் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 33 ரன்கள் அடித்தார். அவர் இன்னும் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அம்பதி ராயுடு இன்னிங்சை கடைசி வரை கொண்டு செல்வதும் அவசியம்.
டோனியின் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. டெத் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் ஹிட்டர் இல்லாதது அணிக்கு பலவீனமாக இருக்கிறது.
பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர், சாம் கர்ரன் பவர் பிளே-யில் சிறப்பாக பந்து வீசுகின்றனர். ஆனால் சாம் கர்ரன் டெத் ஓவரில் கோட்டை விட்டு விடுகிறார். ஆர்சிபிக்கு எதிராக 18-வது ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தது மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.
தீபக் சாஹரை முழுவதுமாக பவர் பிளேயில் பயன்படுத்தாமல் டெத் ஓவரில் பயன்படுத்தினால் டெத் ஓவர் சற்று பலம் பெறும். சுழற்பந்து வீச்சு பேசும்படி மிகப்பெரிய அளவில் இல்லை. வெயின் பிராவோ மிடில் ஓவரை ஸ்பின்னர்களுடன் சேர்ந்து சமாளிக்கிறார்.
அவர் விக்கெட் வீழ்த்தினால் மிடில் ஓவர் ஸ்ட்ராங் ஆகும். மொத்தத்தில் டெத் ஓவரில் ரன்னை கட்டுப்படுத்தி, பேட்டிங்கில் அசத்தினால் மட்டுமே சென்னை அணி வெற்றியை ருசிக்க முடியும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 3-ல் வெற்றி 4-ல் தோல்வியோடு 5-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் அந்த அணிக்கு முதுகெலும்பே வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர்தான். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தால் மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க் உள்ளனர்.
கேன் வில்லியம்சனுக்கு அதிக பந்துகள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதிக்க வேண்டும் என்றால் இவரது பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
பந்து வீச்சில் ரஷித் கான், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் ஆகியோர் மட்டுமே அந்த அணிக்கு பலம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக கடைசி கட்டத்தில் ரஷித் கான் பந்து வீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. புவி காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு மிப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது. கலீல் அகமது, சந்தீப் சர்மா நேர்த்தியாக பந்து வீசுவது கடினம்.
வார்னர் முதலில் பேட்டிங் எடுத்து 170 முதல் 180 ரன்கள் அடித்து, அதற்குள் சிஎஸ்கே-வை கட்டுப்படுத்த முயற்சிப்பார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் 100-வது தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது போட்டி நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 162 ரன்கள் அடித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில், இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வி டெல்லி அணிக்கு 100-வது தோல்வியாகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 தோல்விகளை சந்தித்த 2-வது அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 100 தோல்விகளை சந்தித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததே ரிஷப் பண்ட், ஹெட் மையர் இல்லாததுதான்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரண்டு அணிகளும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியை ருசித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் லெவன் அணி சரியாக அமைந்துள்ளதால் மாற்றத்தை விரும்பவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அதே நிலையில்தான் இருந்தது. அந்த அணி சரியான பேலன்ஸ், காம்பினேசன் கொண்ட அணியாக திகழ்கிறது.
அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. விக்கெட் கீப்பராக வெளிநாட்டு வீரர் அலேக்ஸ் கேரியை தேர்வு செய்தது. இவரைத் தேர்வு செய்ததால் ஹெட்மையரை நீக்க வேண்டியதாயிற்று. வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேரைத்தான் களம் இறக்க முடியும். ரபடா, நோர்ஜே, மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஏற்கனவே அணியில் இருப்பதால் ஹெட்மையர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ரிஷப் பண்டும் இல்லை. ஹெட்மையரும் இல்லை. அலேக்ஸ் கேரியுடன் ரகானே அணியில் சேர்க்கப்பட்டார்.
இதற்கு முந்தைய போட்டியில் 24 பந்தில் 45 ரன்கள் விளாசினார். ஒரு சின்ன விஷயத்தால் இரண்டு ஹிட்டர்களை இழந்ததால் டெல்லி அணியால் ரன்கள் குவிக்க இயலாமல் போனது.
இதனால் ஒரு அணிக்கு காம்பினேசன், பேலன்ஸ் அணி எவ்வளவு முக்கியம் என்பதை டெல்லி அணி உணர்த்தியுள்ளது,
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதில், இந்தூர் ராஜேந்திர நகரில் உள்ள சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜேந்திரா நகருக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 18 செல்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.
நுர்பர்க்:
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்று போட்டி இபெல் கிராண்ட்பிரி என்ற பெயரில் ஜெர்மனியில் நேற்று நடந்தது. இதில் 308.617 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 49.641 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் இது அவரது 91-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் (91 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.
நடப்பு தொடரில் ஹாமில்டன் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 161 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்று போட்டி இபெல் கிராண்ட்பிரி என்ற பெயரில் ஜெர்மனியில் நேற்று நடந்தது. இதில் 308.617 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 49.641 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் இது அவரது 91-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் (91 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.
நடப்பு தொடரில் ஹாமில்டன் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 161 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
டி காக் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
அபுதாபி:
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா 4 ரன்னிலும், ரகானே 15 ரன்னிலும் அவுட்டாகினர். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் விகிதத்தை கூட்டியது.
ஷ்ரேயஸ் அய்யர் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 69 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டி காக்கும், சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். இருவரும் 53 ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 166 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 12 ரன்னும், பொல்லார்டு 11ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
பிரெஞ்ச் ஓபனை வென்றதன் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ரோஜர் பெடரர் சாதனையை சமன் செய்துள்ளார் நடால்.
பிரெஞ்ச் ஒபன் ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் ஜோகோவிச் - நம்பர் 2 ரபேல் நடால் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 6-0, 6-2, 7-5 என நடால் எளிதாக வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 13-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் இது அவரின் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை வென்றுள்ள ரோஜர் பெடரர் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
தனது சாதனையை சமன் செய்திருக்கும் நடாலுக்கு ரோஜர் பெடரர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘20 கிராண்ட்ஸ்லாம் வென்றதற்காக நடாலை வாழ்த்துவது எனக்கு உண்மையிலேயே பெருமை. அவர் 13 முறை பிரெஞ்ச் ஓபனை வென்றது நம்ப முடியாத வகையிலான சாதனை’’ என்று தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி ஐபிஎல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவரது மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா கிரிக்கெட் மீது அதிக பேரார்வம் கொண்ட நாடு. இங்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். ஒருவரை பிடித்த வீரராக ரசிர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அதேபோல் அந்த வீரர் சரியாக விளையாடவில்லை என்றாலும் கடுமையாக விமர்சிப்பார்கள்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக மோசமாக விளையாடியது. அதன்பின் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக எம்.எஸ். டோனியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த ரசிகர்களில் பலர் எல்லைத் தாண்டியுள்ளனர். டோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஸ்கீரின்சாட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளனர். அதற்கு வரும் கருத்துகள் மிகவும் மோசமாகவும், கொடூரமாகவும் உள்ளன. அதில் இரண்டு பேர் எல்லையை மீறி கருத்து தெரிவித்துள்ளனர்.
யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு டோனி மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ராஞ்சி போலீசில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் சமூக இணைய தளத்தில் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலம் குச் பகுதியில் உள்ள நாம்னா கபாயா கிராமத்தைச்சேர்ந்த 16 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜிவாவுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து ராஞ்சி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதினார்.
நடால் வேகத்திற்கு ஜோகோவிச்சால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் முதல் செட்டை நடால் 6-0 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஜோகோவிச் துவண்டு போனார். கண் மூடி திறப்பதற்குள் 6-2 என நடால் 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் ஜோகோவிச் சற்று நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் நடால் விடவில்லை. இருவரும் மாறிமாறி கேம்-ஸை வென்றனர். இறுதியில் நடால் 7-5 என 3-வது செட்டை தனதாக்கினார். இதன் மூலம் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கண்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் நடால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் 7 முறை இருவரும் மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.
தவான் ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 69 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது.
பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 15 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் விகிதத்தை கூட்டியது. 42 ரன்கள் எடுத்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 14.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 69 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி வருகிற 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.
ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 30-ந்தேதி ராவல் பிண்டியில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி 20-ந்தேதி பாகிஸ்தான் சென்றடைகிறது.
21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்கிறது. அதன்பின் 28 மற்றும் 29-ந்தேதிகளில் பயிற்சி மேற்கொள்கிறது.
ஒருநாள் தொடர் அக்டோபர் 30-ந்தேதி, நவம்பர் 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 தொடர் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதி நடக்கிறது.
டி20 கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 7-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. தொடர் முடிந்ததும் 12-ந்தேதி ஜிம்பாப்வே புறப்படுகிறது.
முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரியான் பராக் - டெவாட்டியா அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி மணிஷ் பாண்டே (54), டேவிட் வார்னர் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (16), ஸ்டீவ் ஸ்மித் (5) அடுத்தடுத்து ஆட்டமிழக்க 26 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 26 ரன்களும், ராபின் உத்தப்பா 18 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 8 ஓவரில் 81 ரன்கள் தேவை என்ற நிலையில் ரியான் பராக் உடன் டெவாட்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 15-வது ஓவர் வரை நிதானமாக விளையாடியது. இதனால் 105 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 30 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் அடித்தது ராஜஸ்தான். இதனால் கடைசி 3 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரை ரஷத் கான் வீசினார். இந்த ஓவரில் டெவாட்டியா 3 பவுண்டரிகள் விளாசினார். இதனால் கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் டெவாட்டியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
முதல் நான்கு பந்துகளில் 6 ரன்கள் அடித்த ராஜஸ்தான், 5-வது பந்தில் சிக்ஸ் அடித்து ஒரு பந்து மீதமுள்ள நிலையில் அபார வெற்றி பெற்றது. ரியான் பராக் - ராகுல் டெவாட்டியா ஜோடி 85 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். பராக் 26 பந்தில் 42 ரன்களும், டெவாட்டியா 28 பந்தில் 45 ரன்களும் அடித்தனர்.
4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விக்கு இந்த வெற்றி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.






