search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட்
    X
    ரிஷப் பண்ட்

    காம்பினேசன் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டிய நேற்றைய டெல்லி போட்டி

    மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததே ரிஷப் பண்ட், ஹெட் மையர் இல்லாததுதான்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இரண்டு அணிகளும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியை ருசித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் லெவன் அணி சரியாக அமைந்துள்ளதால் மாற்றத்தை விரும்பவில்லை. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அதே நிலையில்தான் இருந்தது. அந்த அணி சரியான பேலன்ஸ், காம்பினேசன் கொண்ட அணியாக திகழ்கிறது.

    அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. விக்கெட் கீப்பராக வெளிநாட்டு வீரர் அலேக்ஸ் கேரியை தேர்வு செய்தது. இவரைத் தேர்வு செய்ததால் ஹெட்மையரை நீக்க வேண்டியதாயிற்று. வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேரைத்தான் களம் இறக்க முடியும். ரபடா, நோர்ஜே, மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஏற்கனவே அணியில் இருப்பதால் ஹெட்மையர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ரிஷப் பண்டும் இல்லை. ஹெட்மையரும் இல்லை. அலேக்ஸ் கேரியுடன் ரகானே அணியில் சேர்க்கப்பட்டார்.

    இதற்கு முந்தைய போட்டியில் 24 பந்தில் 45 ரன்கள் விளாசினார். ஒரு சின்ன விஷயத்தால் இரண்டு ஹிட்டர்களை இழந்ததால் டெல்லி அணியால் ரன்கள் குவிக்க இயலாமல் போனது.

    இதனால் ஒரு அணிக்கு காம்பினேசன், பேலன்ஸ் அணி எவ்வளவு முக்கியம் என்பதை டெல்லி அணி உணர்த்தியுள்ளது,
    Next Story
    ×