என் மலர்
செய்திகள்

ரோஜர் பெடரர்
20 கிராண்ட்ஸ்லாம் கிளப்பிற்கு வரவேற்கிறேன்: நடாலுக்கு பெடரர் வாழ்த்து
பிரெஞ்ச் ஓபனை வென்றதன் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ரோஜர் பெடரர் சாதனையை சமன் செய்துள்ளார் நடால்.
பிரெஞ்ச் ஒபன் ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் ஜோகோவிச் - நம்பர் 2 ரபேல் நடால் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 6-0, 6-2, 7-5 என நடால் எளிதாக வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 13-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் இது அவரின் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக முறை வென்றுள்ள ரோஜர் பெடரர் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
தனது சாதனையை சமன் செய்திருக்கும் நடாலுக்கு ரோஜர் பெடரர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘20 கிராண்ட்ஸ்லாம் வென்றதற்காக நடாலை வாழ்த்துவது எனக்கு உண்மையிலேயே பெருமை. அவர் 13 முறை பிரெஞ்ச் ஓபனை வென்றது நம்ப முடியாத வகையிலான சாதனை’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story






