search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்டன் சாப்மேன்
    X
    கால்டன் சாப்மேன்

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கால்டன் மரணம்

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், நடுகள வீரருமான கால்டன் சாப்மேன் மரணம் அடைந்தார்.
    பெங்களூரு:

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், நடுகள வீரருமான கால்டன் சாப்மேன் பெங்களூருவில் வசித்து வந்தார். 49 வயதான கால்டனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். 1995 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கால்டன் இந்திய அணிக்காக விளையாடினார். அவரது தலைமையில் 1997-ம் ஆண்டில் தெற்காசிய கால்பந்து சம்மேளன கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஜே.சி.டி. மில்ஸ் (பஞ்சாப்) அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடிய அவர் 2001-ம் ஆண்டில் தொழில்முறையிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். டாடா கால்பந்து அகாடமி வீரரான அவர் ஓய்வுக்கு பிறகு கிளப் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். கால்டன் மறைவுக்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×