என் மலர்
விளையாட்டு
தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில், அதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜனவரி 26-ந்தேதி கராச்சியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இதற்கான 21 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டி காக் (கேப்டன்), 2. டெம்பா பவுமா, 3. எய்டன் மார்கிராம், 4. டு பிளிஸ்சிஸ், 5. டீன் எல்கர், 6. ரபடா, 7. வெயின் பிரிட்டோரியஸ், 8. கேஷவ் மகாராஜ், 9. லுங்கி நிகிடி, 10. வான் டெர் டுஸ்சென், 11. அன்ரிச் நோர்ஜே, 12. வியான் முல்டர், 13. லுதோ சிபம்லா, 14. ஹென்றிக்ஸ், 15. கைல் வெரைன், 16. எர்வீ, 17. கீகன் பீட்டர்சன், 18. ஷாம்சி, 19. ஜார்ஜ் லிண்டே, 20. டேரின் டுபாவில்லோன், 21. பார்ட்மேன்
இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆடுகளத்திற்கு பயந்தா? என மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி சொந்த நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.
அப்போது அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தால், விராட் கோலி அல்லாத மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் விமர்சகருமான மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருந்தார்.
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததால், மைக்கேல் வாகன் சொன்னது பழித்துவிடுமோ? என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனால் மைக்கேல் வாகன் கணிப்பு தவறானது. இந்திய ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டால் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடமாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியை கிண்டல் செய்யும் வகையில் பிரிஸ்பேன் செல்ல மறுப்பது கொரோனா கட்டுப்பாடு காரணமா? ஆடுகளம் காரணமா? என மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார்.
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் சுமார் 30 வருடத்திற்கு மேலாக (ஆஷஸ் தவிர்த்து) ஆஸ்திரேலியாவை எதிர்த்து எந்த அணியும் வெற்றி கண்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒருமுறை கணிப்பு பொய்யான நிலையில், பிரிஸ்பேன் சென்று இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் மைக்கேல் வாகன் மீண்டும் ஒருமுறை ட்ரோல் செய்யப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
சிட்னி டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 55-45 என நிலையில் முன்னிலை வகிக்கிறது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.
2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரஹானே, புஜாரா களத்தில் உள்ளனர்.
நாளைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். யார் நாளைக்கு சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்ளே ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
நாளைய ஆட்டம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘எல்லாமே 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா எப்படி பேட்டிங் செய்கிறது என்பதை பொறுத்துதான் இருக்கிறது. முதல் இன்னிங்சில் பின்தங்கினால் கூட, 2-வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்தால், கடினமான குறைவான இலக்கை இந்தியாவுக்கு கொடுத்தாலும், போட்டியின் இறுதியில் பந்து விச்சாளர்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
நாளை ஆட்டம்தான் இந்த போட்டியின் மிகப்பெரிய கதையை சொல்லப்போகிறது. ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். இந்தியாவுக்கு சிறந்த நாளாக அமைந்தால், அதன்பின் ஆஸ்திரேலியா வெற்றி பெற கடினமான போட்டியாக இருக்கும்.
இந்தியா 2-வது இன்னிங்சில் சிறிய அளவிலான ரன்கள் முன்னிலையுடன் செல்ல முடியும். அப்படி என்றால் அவர்கள் முன்னிலை வகிக்க முடியும். ஆனால், ஆஸ்திரேலியா 350 ரன்னுக்குள் சுட்டிவிட்டால், ஆஸ்திரேலியா வெற்றிக்கான இடத்தை பிடிக்கும்’’ என்றார்.
பிக் பாஷ் லீக் டி20-யில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை மெல்போர்ன் ரெனேகட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பிக் பாஷ் லீக் டி20-யில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின.
அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிலிப் சால்ட் 59 ரன்களும், அலேக்ஸ் கேரி 42 ரன்களும் அடிக்க 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் பேட்டிங் செய்தது. முகமது நபி ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 71 ரன்கள் விளாச 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபு தாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரக அணி.
ஐக்கிய அரபு அமீரகம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாயில் நடைபெற்றது.
அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஸ்டிர்லிங் ஆட்டமிழக்காமல் 131 ரன்களும், கேப்டன் பால்பிரைன் 53 ரன்களும் அடிக்க அயர்லாந்து 269 ரன்கள் குவித்தது.
பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஜவார் ஃபரித் 15 ரன்களிலும், விரித்யா அரவிந்த் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் முகமது உஸ்மான் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். ரிஸ்வான் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது உஸ்மன் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் அடிக்க ஐக்கிய அரபு அமீரகம் 49 ஓவரில் 270 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் போட்டியில் விளையாட அழைப்பதை உலக அணிகள் நிறுத்தக்கூடும் என அஞ்சுவதாக சோயிப் அக்தர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஆசிய அணிகளில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி மிகவும் வலுவாக இருந்தது. வெளிநாட்டு மண்ணில் அந்நாட்டு பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்து வீச அசத்தக் கூடியவர்கள். இம்ரான் கான், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்ற அதிகவேக பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்து விடுவார்கள்.
இவர்கள் அணியை விட்டு சென்றபின், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களை அந்த அணி உருவாக்க தவறிவிட்டது. அதேபோல் அன்வர், இன்சமாம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான் போன்ற பேட்ஸ்மேன்கள் சென்ற பிறகு தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை.
சமீபத்தில் நியூசிலாந்து சென்றிருந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணி 0-2 என படுதோல்வியடைந்தது. 2-வது டெஸ்டில் 600 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து, இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் உலக அணிகள் பாகிதான் அணியை அழைப்பதை நிறுத்தக்கூடும் என பயப்படுகிறேன் என்று சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள். தரவரிசையில் நாம் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், பேரழிவு சூழ்நிலையை நோக்கி செல்கிறோம்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாட உலக அணிகள் பாகிஸ்தானை அழைப்பதை நிறுத்தக்கூடும் எனப் பயப்படுகிறேன். உங்களுடைய (பாகிஸ்தான்) தரம் சிறப்பாக இல்லை எனச் சொல்வார்கள். இது ஐசி்சி-யின் சட்ட வழிமுறையாகும்.
நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடியது மிகவும் மோசம். ஏற்கனவே வெளிநாடு செல்லும்போது மோசமாக விளையாடுவார்கள்.
போகிஸ்தான் அணி தோல்விக்கு மீடியாக்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளுமா? அல்லது நம்புடைய செலக்சனா? அல்லது 2005-க்குப் பிறகு பாதுகாப்பானதே ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனிநிலையா? என்பதே கேள்வி. ’’ என்றார்.
குயின்ஸ்லாந்து மாகாணத்திற்கு அங்குள்ள மக்களை பாதுகாக்க உரிமை உள்ளது போன்று, வீரர்களை பாதுகாக்கும் உரிமை பிசிசிஐ-க்கு உள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பிரிஸ்பேனில் நடக்க இருக்கிறது. பிரிஸ்பேன் மைதானம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைந்துள்ளது.
சிட்னியில் விளையாடிய பின்னர் பிரிஸ்பேன் செல்லும் இந்திய அணி வீரர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மைதானத்திற்கும் தங்கியிருக்கும் ஓட்டல் ஆகிய இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி. வெளியில் எங்கும் செல்லக்கூடாது. ஓட்டலில் கூட ஒன்றாக இருக்கக் கூடாது குயின்ஸ்லாந்து மாகாணம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடைபிடிக்க முடியாவிடில் இங்கே வராதீர்கள் என சுகாதாரத்துறை மந்திரி காட்டமாக கூறியிருந்தார்.
இதனால் இந்திய வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அம்மாகாண மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடும்போது எங்களுக்கு மட்டும் கோரன்டைனா?. நாங்கள் ஏற்கனவே 14 நாட்கள் கோரன்டையில் இருந்துள்ளோம். மீண்டும் இருக்க இயலாது வீரர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ கடிதமும் எழுதியுள்ளது. இதனால் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெறுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தநிலையில் மக்கள் பாதுகாக்க குயின்ஸ்லாந்து மாகாணத்திற்கு உரிமை உள்ளது போது, கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க பிசிசிஐ உரிமை உள்ளது என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித் சிட்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியின் ஸ்கோர் 338-ஐ எட்ட உதவியாக இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 1, 1*, 0, 8 ரன்களே அடித்தார். இதற்கு முந்தைய நியூசிலாந்து தொடரிலும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இதனால் அவுட் ஆஃப் ஃபார்மில் உள்ளார் என கருதப்பட்டது.
இந்த நிலையில்தான் சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். 131 ரன்கள் எடுத்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார். அவுட் ஆஃப் ஃபார்ம் இல்லை என்பதை நிரூபித்தார்.
இந்த நிலையில் அவுட் ஆஃப் ஃபார்ம் - அவுட் ஆஃப் ரன்ஸ் இடையே வித்தியாசம் உள்ளது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஸ்டீவ் ஸமித் கூறுகையில் ‘‘நான் அவுட் ஆஃப் பார்மில் இருப்பதாக பலர் கூறியதை கேட்டேன். ஆனால், அவுட் ஆஃ.ப் பார்முக்கும் அவுட் ஆஃப் ரன்ஸ்க்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
சிட்னி டெஸ்டின் நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ஒன்றிணைந்து அபாரமாக விளையாடினால்தான் சிறந்த ஸ்கோரை எட்ட முடியும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது.
தற்போது வரை இந்தியா 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரோகித் சர்மா (26), ஷுப்மான் கில் (50) ஆட்டமிழந்த நிலையில், நாளைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி முன்னிலைப் பெற்றால்தான் வெற்றி பெற முடியும்.
புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஸ்மித்தை ரன்அவுட்டும் செய்தார்.
இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நாளைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த ஸ்கோரை எதிர்பார்க்க வேண்டுமென்றால், அனைத்து பேட்ஸ்மேன்களும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் ரன்கள் அடிக்க வேண்டும்.
இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி போட்டியை மேலும் எடுத்துச் செல்வதற்கு ஒரு பேட்ஸ்மேன் அல்ல, ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் பங்களிப்பை கொடுக்க வேண்டும். பொறுப்புடன் விளையாடினால், ஸ்கோர் போர்டில் எளிதாக ரன்கள் உயரும்.
சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து அதிகமான டாட் பால்ஸ் கிடைக்க திட்டம் தீட்டினோம். இதனால் அவர்களை எளிதில் பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது என்ற திட்டத்துடன் விளையாடினோம்’’ என்றார்.
பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இசாந்த் சர்மா காயம் அடைந்தார். முதல் போட்டியில் முகமது ஷமி காயம் அடைந்தார். 2-வது போட்டியில் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார்.
என்றாலும் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகின்றனர். இன்னும் நடராஜன், ஷர்துல் தாகூர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை பும்ரா தலைமையிலான வேகபந்து வீச்சுக்குழு 23 விக்கெட் வீழ்த்தியுள்ளது. இந்த பந்து வீச்சாளர்கள் செயல்பாட்டை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜாகீர் கான் கூறுகையில் ‘‘இந்தத் தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களின் பெர்ஃபார்மன்ஸை பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இசாந்த் சர்மா, முகமது ஷமி இல்லாமலேயே பும்ரா தலைமையிலான குழுவின் பந்து வீச்சு தாக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது.
முகமது சிராஜ் சர்வதேச அளவிற்கு அவரை அட்ஜஸ்ட் செய்து கொண்டார். இது ஒரு வகையான திறமையைக் காட்டுகிறது. மேலும் மூத்த வீரர்களை சிறப்பாக செயல்பட வைப்பதை காட்டுகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் செயல்பாடு மற்றும் பல ஆண்டுகளாக அது எவ்வாறு உருவாகியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் கிரிக்கெட் சிஸ்டத்திற்கு இந்த பெருமை. பந்து வீச்சாளர்கள் சரியான நேரம் கிடைக்கம்போது சிறப்பாக செயல்பட தயாராக உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகமிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுடன் இணைந்து வளர்ச்சியடைய சிறந்த வாய்ப்பு’’ என்றார்.
சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மான் கில் அரைசதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டதால் படுதோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா சரியாக விளையாடவில்லை. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன பிரித்வி ஷா 2-வது இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறினார். இதனால் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2-வது பிரித்வி ஷா நீக்கப்பட்டு ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டார்.
மெல்போர்ன் டெஸ்டில் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 45 ரன்கள் அடித்தார். ஐந்து ரன்னில் அரைசதம் வாய்ப்பை இழந்தார். 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் அடித்தார். மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் அதிவேக பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்.
இதனால் சிட்னி போட்டியிலும் இடம்பிடித்தார். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 ரன்னிலேயே வெளியேறினார்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஆசிய கண்டத்திற்கு வெளியில் இளம் வயதில் அரைசதம் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
1982-ம் ஆண்டு ரவிசாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராகவும், மாதவ் ஆப்தே 1952-53-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும், பிரித்வி ஷா 2019-20-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் அரைசதம் அடித்திருந்தனர். தற்போது ஷுப்மான் கில் அரைசதம் அடித்துள்ளார்.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் கடைசி 10 ஆண்டுகளில் நீண்ட நேரம் களத்தில் நின்ற தொடக்க ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 338 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.
ஷுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சை திறமையாக இந்த ஜோடி எதிர்கொண்டது.
27 ஓவர்கள் வரை இந்த ஜோடி களத்தில் நின்றது. 27-வது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
27 ஓவர்கள் களத்தில் நின்றதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வெளிநாட்டில் விளையாடும்போது, 2010-ம் ஆண்டுக்குப்பின் அதிக நேரம் தாக்குப்பிடித்த ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர்.
மேலும் 14 இன்னிங்சில் முதல் அரைசதம் அடித்த ஜோடியும் இதுவாகும்.






