search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மான்  கில்
    X
    ஷுப்மான் கில்

    இளம் வயதில் அரைசதம் விளாசி ஷுப்மான் கில் அசத்தல்

    சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மான் கில் அரைசதம் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டதால் படுதோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா சரியாக விளையாடவில்லை. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன பிரித்வி ஷா 2-வது இன்னிங்சில் 4 ரன்னில் வெளியேறினார். இதனால் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2-வது பிரித்வி ஷா நீக்கப்பட்டு ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டார்.

    மெல்போர்ன் டெஸ்டில் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 45 ரன்கள் அடித்தார். ஐந்து ரன்னில் அரைசதம் வாய்ப்பை இழந்தார். 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் அடித்தார். மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் அதிவேக பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்.

    இதனால் சிட்னி போட்டியிலும் இடம்பிடித்தார். முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 50 ரன்னிலேயே வெளியேறினார்.

    இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஆசிய கண்டத்திற்கு வெளியில் இளம் வயதில் அரைசதம் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    1982-ம் ஆண்டு ரவிசாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராகவும், மாதவ் ஆப்தே 1952-53-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும், பிரித்வி ஷா 2019-20-ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் அரைசதம் அடித்திருந்தனர். தற்போது  ஷுப்மான் கில் அரைசதம் அடித்துள்ளார்.
    Next Story
    ×