search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாகீர் கான்
    X
    ஜாகீர் கான்

    வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது: ஜாகீர் கான்

    பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இசாந்த் சர்மா காயம் அடைந்தார். முதல் போட்டியில் முகமது ஷமி காயம் அடைந்தார். 2-வது போட்டியில் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார்.

    என்றாலும் பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகின்றனர். இன்னும் நடராஜன், ஷர்துல் தாகூர் ஆகியோர் தயார் நிலையில் உள்ளன.

    இதுவரை பும்ரா தலைமையிலான வேகபந்து வீச்சுக்குழு 23 விக்கெட் வீழ்த்தியுள்ளது. இந்த பந்து வீச்சாளர்கள் செயல்பாட்டை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகீர் கான் கூறுகையில் ‘‘இந்தத் தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களின் பெர்ஃபார்மன்ஸை பார்க்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இசாந்த் சர்மா, முகமது ஷமி இல்லாமலேயே பும்ரா தலைமையிலான குழுவின் பந்து வீச்சு தாக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது.

    முகமது சிராஜ் சர்வதேச அளவிற்கு அவரை அட்ஜஸ்ட் செய்து கொண்டார். இது ஒரு வகையான திறமையைக் காட்டுகிறது. மேலும் மூத்த வீரர்களை சிறப்பாக செயல்பட வைப்பதை காட்டுகிறது.

    ஒட்டுமொத்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் செயல்பாடு மற்றும் பல ஆண்டுகளாக அது எவ்வாறு உருவாகியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் கிரிக்கெட் சிஸ்டத்திற்கு இந்த பெருமை. பந்து வீச்சாளர்கள் சரியான நேரம் கிடைக்கம்போது சிறப்பாக செயல்பட தயாராக உள்ளனர்.

    பந்து வீச்சாளர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகமிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுடன் இணைந்து வளர்ச்சியடைய சிறந்த வாய்ப்பு’’ என்றார்.
    Next Story
    ×