search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கர்
    X
    கவாஸ்கர்

    வீரர்களை பாதுகாக்க பிசிசிஐ-க்கு உரிமை உள்ளது: பிரிஸ்பேன் டெஸ்ட் குறித்து கவாஸ்கர் கருத்து

    குயின்ஸ்லாந்து மாகாணத்திற்கு அங்குள்ள மக்களை பாதுகாக்க உரிமை உள்ளது போன்று, வீரர்களை பாதுகாக்கும் உரிமை பிசிசிஐ-க்கு உள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பிரிஸ்பேனில் நடக்க இருக்கிறது. பிரிஸ்பேன் மைதானம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைந்துள்ளது.

    சிட்னியில் விளையாடிய பின்னர் பிரிஸ்பேன் செல்லும் இந்திய அணி வீரர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மைதானத்திற்கும் தங்கியிருக்கும் ஓட்டல் ஆகிய இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி. வெளியில் எங்கும் செல்லக்கூடாது. ஓட்டலில் கூட ஒன்றாக இருக்கக் கூடாது குயின்ஸ்லாந்து மாகாணம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடைபிடிக்க முடியாவிடில் இங்கே வராதீர்கள் என சுகாதாரத்துறை மந்திரி காட்டமாக கூறியிருந்தார்.

    இதனால் இந்திய வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அம்மாகாண மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடும்போது எங்களுக்கு மட்டும் கோரன்டைனா?. நாங்கள் ஏற்கனவே 14 நாட்கள் கோரன்டையில் இருந்துள்ளோம். மீண்டும் இருக்க இயலாது வீரர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிசிசிஐ கடிதமும் எழுதியுள்ளது. இதனால் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெறுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்தநிலையில் மக்கள் பாதுகாக்க குயின்ஸ்லாந்து மாகாணத்திற்கு உரிமை உள்ளது போது, கிரிக்கெட் வீரர்களை பாதுகாக்க பிசிசிஐ உரிமை உள்ளது என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×