என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக்கி பாண்டிங்
    X
    ரிக்கி பாண்டிங்

    சிட்னி டெஸ்டின் மிகப்பெரிய கதையை நாளைய ஆட்டம் சொல்லும்: ரிக்கி பாண்டிங்

    சிட்னி டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 55-45 என நிலையில் முன்னிலை வகிக்கிறது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ரஹானே, புஜாரா களத்தில் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். யார் நாளைக்கு சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்ளே ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    நாளைய ஆட்டம் குறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘எல்லாமே 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா எப்படி பேட்டிங் செய்கிறது என்பதை பொறுத்துதான் இருக்கிறது. முதல் இன்னிங்சில் பின்தங்கினால் கூட, 2-வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்தால், கடினமான குறைவான இலக்கை இந்தியாவுக்கு கொடுத்தாலும், போட்டியின் இறுதியில் பந்து விச்சாளர்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

    நாளை ஆட்டம்தான் இந்த போட்டியின் மிகப்பெரிய கதையை சொல்லப்போகிறது. ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். இந்தியாவுக்கு சிறந்த நாளாக அமைந்தால், அதன்பின் ஆஸ்திரேலியா வெற்றி பெற கடினமான போட்டியாக இருக்கும்.

    இந்தியா 2-வது இன்னிங்சில் சிறிய அளவிலான ரன்கள் முன்னிலையுடன் செல்ல முடியும். அப்படி என்றால் அவர்கள் முன்னிலை வகிக்க முடியும். ஆனால், ஆஸ்திரேலியா 350 ரன்னுக்குள் சுட்டிவிட்டால், ஆஸ்திரேலியா வெற்றிக்கான இடத்தை பிடிக்கும்’’ என்றார்.
    Next Story
    ×