search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக்கேல் வாகன்
    X
    மைக்கேல் வாகன்

    கொரோனா கட்டுப்பாடா? ஆடுகளமா?- மீண்டும் இந்திய அணி விசயத்தில் மூக்கை நுழைக்கும் வாகன்

    இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆடுகளத்திற்கு பயந்தா? என மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார்.
    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி சொந்த நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.

    அப்போது அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தால், விராட் கோலி அல்லாத மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் விமர்சகருமான மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருந்தார்.

    அடிலெய்டு டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததால், மைக்கேல் வாகன் சொன்னது பழித்துவிடுமோ? என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இதனால் மைக்கேல் வாகன் கணிப்பு தவறானது. இந்திய ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டால் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடமாட்டோம் என்று இந்திய அணி தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியை கிண்டல் செய்யும் வகையில் பிரிஸ்பேன் செல்ல மறுப்பது கொரோனா கட்டுப்பாடு காரணமா? ஆடுகளம் காரணமா? என மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளார்.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தில் சுமார் 30 வருடத்திற்கு மேலாக (ஆஷஸ் தவிர்த்து) ஆஸ்திரேலியாவை எதிர்த்து எந்த அணியும் வெற்றி கண்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே ஒருமுறை கணிப்பு பொய்யான நிலையில், பிரிஸ்பேன் சென்று இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் மைக்கேல் வாகன் மீண்டும் ஒருமுறை ட்ரோல் செய்யப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
    Next Story
    ×