என் மலர்

  செய்திகள்

  சோயிப் அக்தர்
  X
  சோயிப் அக்தர்

  பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு இப்படி நடக்கக்கூடுமோ?: பயப்படும் சோயிப் அக்தர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெஸ்ட் போட்டியில் விளையாட அழைப்பதை உலக அணிகள் நிறுத்தக்கூடும் என அஞ்சுவதாக சோயிப் அக்தர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
  ஆசிய அணிகளில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி மிகவும் வலுவாக இருந்தது. வெளிநாட்டு மண்ணில் அந்நாட்டு பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்து வீச அசத்தக் கூடியவர்கள். இம்ரான் கான், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்ற அதிகவேக பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்து விடுவார்கள்.

  இவர்கள் அணியை விட்டு சென்றபின், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களை அந்த அணி உருவாக்க தவறிவிட்டது. அதேபோல் அன்வர், இன்சமாம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான் போன்ற பேட்ஸ்மேன்கள் சென்ற பிறகு தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை.

  சமீபத்தில் நியூசிலாந்து சென்றிருந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணி 0-2 என படுதோல்வியடைந்தது. 2-வது டெஸ்டில் 600 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து, இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

  இந்த நிலையில் உலக அணிகள் பாகிதான் அணியை அழைப்பதை நிறுத்தக்கூடும் என பயப்படுகிறேன் என்று சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

  பாகிஸ்தான் அணி குறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள். தரவரிசையில் நாம் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், பேரழிவு சூழ்நிலையை நோக்கி செல்கிறோம்.

  டெஸ்ட் போட்டிகளில் விளையாட உலக அணிகள் பாகிஸ்தானை அழைப்பதை நிறுத்தக்கூடும் எனப் பயப்படுகிறேன். உங்களுடைய (பாகிஸ்தான்) தரம் சிறப்பாக இல்லை எனச் சொல்வார்கள். இது ஐசி்சி-யின் சட்ட வழிமுறையாகும்.

  நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடியது மிகவும் மோசம். ஏற்கனவே வெளிநாடு செல்லும்போது மோசமாக விளையாடுவார்கள்.

  போகிஸ்தான் அணி தோல்விக்கு மீடியாக்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளுமா? அல்லது நம்புடைய செலக்சனா? அல்லது 2005-க்குப் பிறகு பாதுகாப்பானதே ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனிநிலையா? என்பதே கேள்வி. ’’ என்றார்.
  Next Story
  ×