என் மலர்
விளையாட்டு
டுனிடின்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது.
முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சால் 41.5 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. மகமதுல்லா அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். போல்ட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் நீசம், சாண்ட்னெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 21.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் 49 ரன்னும் (அவுட் இல்லை), மார்ட்டின் கத்தில் 19 பந்தில் 38 ரன்னும் (3 பவுன்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் வருகிற 23-ம் தேதி கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது.
சென்னை:
பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும திருச்சியை சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துக்கள். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அகமதாபாத்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.
இரவு 7 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்தியா 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 8 ரன்னிலும் வெற்றிபெற்றது.முதல் மற்றும் 3-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் 20 ஓவர் உலக கோப்பைக்கான முன்னோட்டமாக இருக்கும்.
இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் இந்த தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டால், இஷான் கிஷன் இடம்பெறுவார். ராகுல் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.
கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தால் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் கழற்றி விடப்படலாம்.
கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் ஆர்வத்தில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இருக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்ததால் 20 ஓவர் தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நிலையில் அந்த அணி உள்ளது. இங்கிலாந்து அணியில் 20 ஓவர் போட்டிக்கேற்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் இன்று மோதுவது 19-வது போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றிபெற்றுள்ளன.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் (5 ஆட்டம்) நாளையுடன் முடிகிறது.
அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாடுகின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கின்றன. முதல் போட்டி வருகிற 23-ந்தேதியும், 2-வது போட்டி 26-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் புதுமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆல்-ரவுண்டர் குர்ணல் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சூர்யகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் உள்ளனர். இருவரும் இதுவரை ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.
2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் சுந்தர் இலங்கைக்கு எதிராகவும், 2020-ம் ஆண்டு டிசம்பரில் டி.நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அறிமுகமானார்கள்.
திருமணத்துக்காக விடுமுறையில் சென்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் காயத்தால் விலகிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணி வருமாறு:- விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா (துணை கேப்டன்) ஷிகர் தவான், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்ட்யா, ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், சாகல், குல்தீப் யாதவ், குர்ணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நேற்று நடந்த நான்காவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது.
சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 57 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இது அவருக்கு 2-வது போட்டி ஆகும். அறிமுக போட்டியில் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் 3-வது வீரராக களம் இறக்கப்பட்ட அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் 14 ரன் எடுக்கப்பட்டது. ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது.
இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. ஆனால் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாகர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-
ஒரு சிறந்த அணிக்கு எதிராக கடினமான ஆட்டமாக இருந்தது. பனிப்பொழிவு மிகப்பெரிய அளவில் இருந்தது. 180 ரன்னுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம்.
சூர்யகுமார் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். 3-வது வீரராக களம் வந்து விளையாடுவது எளிதானதல்ல. அதேபோல் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தொடங்கியதை கண்டு நாங்கள் திகைத்து போனோம். அவர் தனது அதிகாரத்தை முத்திரையாக குத்தினார்.
இந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்து தங்களது வாய்ப்புகளை பற்றிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்களின் தரத்தை உயர்வாக அமைத்து உள்ளீர்கள். ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு (2022) ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்று அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் பக்ரைன், குவைத், மாலத்தீவு, கத்தார், சவுதி அரேபியா ஆகிய அணிகள் பங்கேற்க இருந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தகுதி சுற்று அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. இதே போல் ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திபோடப்பட்டுள்ளது.
இதன்படி நிர்ணயித்த 20 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதிகப்படியாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜோசன் ராய் 40 ரன்னிலும் பட்லர் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர் மலான் 17 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஜோடி ஆட்டத்தை மாற்றினர். அந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். பேர்ஸ்டோ 25 ரன்னிலும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ்சும் இரண்டாவது பந்தில் இயான் மோர்கனும் வெளியேற இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். முதல் பந்தில் ஜோர்டன் 1 ரன்னும் 2-வது பந்தில் ஆர்ச்சர் பவுண்டரியும் 3-வது பந்தில் சிக்சர் அடிக்க ஆட்டம் பரப்பரப்பானது. 4-வது பந்தில் 2 உதிரிகளை விட்டு கொடுத்தாலும் அடுத்த பந்தில் ஒரு ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.






