என் மலர்
செய்திகள்

தனலட்சுமி - முக ஸ்டாலின்
திருச்சி வீராங்கனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
சென்னை:
பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி 2 பதக்கம் பெற்று சாதனை புரிந்தார். இதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும திருச்சியை சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துக்கள். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story