என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை தொடர்ந்து பறிகொடுத்தனர்.
    • ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தாலும் லோர்க்கன் டக்கர் மட்டும் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பிரிஸ்பேன்:

    டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி நடைபெற்றது. அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி இன்று களமிறங்கியது.

    பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபின்ச் பொறுப்புடன் நிலைத்து ஆட, மிட்செல் மார்ஷ் 22 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

    அதன்பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஆரோன் ஃபின்ச், ௪௪ பந்தில் 63 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்தில் 35 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 10 பந்தில் 15 ரன்களும், மேத்யூ வேட் 3 பந்தில் 7 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.

    இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை தொடர்ந்து பறிகொடுத்தனர். தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் (11 ரன்கள்), கேப்டன் பால்பிர்னி (6 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தாலும் லோர்க்கன் டக்கர் மட்டும் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அந்த அணியின் நடுவரிசை வீரர் டெக்டர் 6 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கேம்பர் மற்றும் டாக்ரேல், ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினர். சிறப்பாக ஆடிய லோர்க்கன் டக்கர் அரைசதம் கடந்தார். இருப்பினும் இவரின் அதிரடி அயர்லாந்து அணியின் வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.

    இறுதியில் அயர்லாந்து 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. லோர்க்கன் டக்கர் 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த அணி குரூப் ஏ புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

    • அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களத்தில் இறங்கியுள்ளது.
    • இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மழையால் போட்டிகள் நிற்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகளும் வலுவான அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடி வருவதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியல் சிக்கலில் உள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

    இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களத்தில் இறங்கியுள்ளது.

    இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • தனியுரிமை மீறப்பட்ட இந்த விசயத்தை என்னால் ஒருபோம் ஏற்றுக் கொள்ள முடியாது.
    • விராட் கோலியின் அறையில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை அந்த ஊழியர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டு, தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ரசிகர்கள் அவர்களுடைய பிடித்தமான வீரர்களை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எப்போதுமே அதை பாராட்டக் கூறியவன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் உணர வைத்துள்ளது.

    தன்னுடைய சொந்த அறையில் கூட தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்?. தனியுரிமை மீறப்பட்ட இந்த விசயத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தயது செய்து மக்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுங்கள். அவர்களை பொழுது போக்கிற்கான பொருளாக கருத வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கூறுகையில் '' இந்த விஷயம் மிகவும் கேலிக்கூத்தானது. முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது'' என தெரிவித்துள்ளார்.

    விராட் கோலியின் அறையில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை அந்த ஊழியர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது.
    • இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த்தில் நடைபெற்றது. அதிவேக பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாதல் திணறினர். சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி 40 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கும். ஆனால், தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் தென்ஆப்பிரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.

    சூப்பர் 12 குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடிவிட்டன.

    பாகிஸ்தான் 3-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய மங்கி விட்டது. பாகிஸ்தான் அடுத்து தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். ஒன்றில் தோல்வியடைந்தால் கூட வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததன் மூலம், பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பை அழித்து விட்டது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ''தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை இந்தியா அழித்து விட்டது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடினார்கள். நாம் இதை அடுத்தவர்கள் மீது விட்டுவிட்டோம். இந்தியா மீண்டும் வலுவாக திரும்பும் என்றும் நம்புகிறோம். இந்தியா விளையாடிய விதம், தரமான பந்து வீச்சுக்கு எதிராக ஆசிய அணிகளின் நிலை, வெளிப்படையாக வெளிப்படும் என்பதை காட்டுகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஆட்டம் அம்பலமாகியுள்ளது. இருந்தாலும் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. அவர்களுக்கு இன்னும் எளிதான ஆட்டங்கள் உள்ளன. ஆனால், பாகிஸ்தான் கடினமான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது பார்க்கும் வகையில் அது கடினமாகவும், சாத்தியமற்றதாகவும் உள்ளது. இருந்தாலும், எனது அணிக்குதான் ஆதரவு. என்னதான் நடக்கும் என்றும் பார்ப்போம்.

    இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடுவது எளிதானது அல்ல. இந்தியா எங்களை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்தது. இந்திய வீரர்கள் சற்று சுதாரித்துக் கொண்டு, 150 ரன்கள் எடுத்திருந்தால், அது வெற்றிக்கான ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், எங்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது.

    தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வங்காளதேசம் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜிம்பாப்வே 3 இடத்திலும் உள்ளன.

    • இளம்பரிதி சமீபத்தில் ருமேனியாவில் நடந்த உலக இளைஞர் செஸ் போட்டியில் (14 வயதுக் குட்பட்டோர்) வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஹரிகிருஷ்ணா 2-வது இடத்தையும், குகன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    சென்னை:

    மீனா நினைவு முதலாவது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2 தினங்களாக நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 360 பேர் பங்கேற்றனர்.

    9 சுற்றுகளை கொண்ட சுவிஸ் முறையில் நடந்த இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயதான இளம்பரிதி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 8 புள்ளிகள் பெற்றார். இளம்பரிதி சமீபத்தில் ருமேனியாவில் நடந்த உலக இளைஞர் செஸ் போட்டியில் (14 வயதுக் குட்பட்டோர்) வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹரிகிருஷ்ணா 2-வது இடத்தையும், குகன் 3-வது இடத்தையும் பிடித்தனர். 3 வீரர்கள் தலா 8 புள்ளி பெற்றனர். டை பிரேக்கர் முறையில் இளம்பரிதி முதல் இடத்தை பிடித்தார். ஹரி மாதவன், அர்ஜூன், கிருஷ்ண மாச்சாரி, ஸ்ரீஹரி ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 4 முதல் 7-வது இடங்களை பிடித்தனர்.

    முன்னாள் தேசிய செஸ் வீரரும், ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவன நிர்வாக இயக்குனருமான டி.வி. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் பெற்ற இளம் பரிதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் கிடைத்தது. ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ரமேஷ், உயர்கல்வி இயக்குனர் பி.நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • இறுதி போட்டியில் தைபே வீரரிடம், தமிழக வீரர் தோல்வி.
    • இந்த தொடரில் இதுவரை வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது வீரர் சங்கர் முத்துசாமி.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியின் 21-14, 22-20 என்ற கணக்கில் சங்கர் தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் அவரது கனவு தகர்ந்தது. இந்த தொடரில் வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 


    இதற்கு முன்னர் இந்தியா சார்பில் அபர்ணா போபட் (1996), சாய்னா நேவால் (2006) மற்றும் சிரில் வர்மா (2015) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். எனினும் சாய்னா மட்டுமே கடந்த 2008 ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் ஸ்பெயின் அணிக்காக கொலம்பிய வீராங்கனை கோல் அடித்தார்.

    நவி மும்பை,

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் கொலம்பியா அணி வீராங்கனை அனா மரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

    இதையடுத்து அதை சரி செய்ய கொலம்பியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • கிடைத்த வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
    • கேட்சுகளை தவற விட்டதற்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்தியாவை தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது:

    ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். அதனால் தான் 134 என்ற எளிதான இலக்கை கூட எட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர்.  


    நாங்கள் ஃபீல்டிங்கில் கடுமையாக சொதப்பினோம். கடும் குளிரால்தான் கேட்ச்களை நழுவ விட்டோம் என்று காரணம் சொல்ல நான் விரும்பவில்லை. இதற்கு முன் இது போன்ற சூழலில் விளையாடி இருக்கிறோம்.

    எனினும் நேற்றைய போட்டியில் எங்களது ஃபீல்டிங் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்தோம். ஆனால் நேற்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 


    எங்களால் சில ரன் அவுட்டுகளை செய்ய முடியவில்லை. நானும் ரன் அவுட்டை மிஸ் செய்தேன் இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
    • 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

    புனே:

    9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 37-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 


    இந்த நிலையில் இரவு  8.30 மணிக்கு நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.
    • இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் 68, ரோஹித் சர்மா 15, விராட் கோலி 12 ரன்கள் எடுத்தனர்.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில், சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென் ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடின.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை. மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    இதை தொடர்ந்து தீபக் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் 68, ரோஹித் சர்மா 15, விராட் கோலி 12 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்நிலையில், சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

    அதன்படி தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை.
    • 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில், சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது . பெர்த்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா- தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ரோகித் சர்மா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அந்த ஓவரில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பவர்பிளேவில் இந்திய அணியால் அதிரடி காட்ட முடியவில்லை.

    மாறாக நிகிடி வீசிய 5-வது ஓவரில் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ராகுல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து இருந்தது. இதை தொடர்ந்து நிகிடி வீசிய 7வது ஓவரில் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    இதை தொடர்ந்து தீபக் டக் அவுட்டாகியும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன் எடுத்தார்.

    தொடர்ந்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    • ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
    • டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில், இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சற்று நேரத்திற்கு முன்பு போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    ×