என் மலர்
விளையாட்டு
- பாபர் மிடில் ஆர்டரில் இறக்க வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வற்புறுத்தல்.
- நீங்கள் கேப்டனாக இருந்தால், உங்கள் அணியை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.
உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது
அதன் தொடக்க வீரராக களம் இறங்கும் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் பெரிதாக தெரியவில்லை.
ஆனால், தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக பாபர் ஆசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கில் நீடிக்கிறது.
கடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் உடன் பகர் ஜமான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பாபர் ஆசம்தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். பின்னர் களம் இறங்கிய பகர் ஜமான் 16 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.
பாகிஸ்தான் 13.5 ஓவரில் 92 ரன் இலக்கை எட்டிப்பிடித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் பாபர் ஐந்து பந்தில் நான்கு ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வரும் வியாழன் அன்று நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த போட்டியில் பாபர் ஆசம் 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்த போட்டிகளில் பாபர் ஆசம் மிடில்-ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்றவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், உங்களுக்குப் பதிலாக உங்கள் அணியைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் பகர் ஜமானை தொடக்க வீரராக களம் இறக்கி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அது சுயநலம் என்று அழைக்கப்படுகிறது; ஒரு கேப்டனாக, சுயநலமாக இருப்பது எளிது. பாபர்,ரிஸ்வானும் பாகிஸ்தானுக்கு பல சாதனைகளை படைப்பது எளிது. நீங்கள் ஒரு தலைவராக இருக்க விரும்பினால், உங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் பட்லர் 73 ரன்கள் குவித்தார்.
- நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் 62 ரன்கள் அடித்தார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியாக விளையாடினார். அரை சதம் அடித்த அலெக்ஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அந்த அணியி மொயீன் அலி 5 ரன்னும் , லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்னும் ,ஹார்ரி புரூக் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் பின் ஆலன் 16 ரன்னும், கான்வே 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் வில்லிம்சன் 40 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 16 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள்அடித்தது. இதையடுத்த 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
- உலக கோப்பை முடிந்த உடன் இந்தியா நியூசிலாந்து சென்று டி20 தொடரில் விளையாடுகிறது.
- ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியில் ஷுப்மான் கில்லுக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதியில் பஞ்சாப்- கர்நாடகா அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் விளையாடி வரும் ஷுப்மான் கில் அபாரமாக விளையாடி 55 பந்தில் 11 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 126 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 43 பந்தில் 59 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.
தற்போது உலகக் கோப்பையில் விளையாடி வரும் இந்தியா, அதன்பிறகு நியூசிலாந்து சென்று 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஷுப்மான் கில் இடம் பிடித்துள்ளார்.
இந்த அணியில் சதம் பிடித்ததை சதம் விளாசி ஷுப்மான் கில் கொண்டாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கில் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
- கே.எல். ராகுல் 4,9 மற்றும் 9 என மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடியுள்ளார்.
- தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார்.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் அவர் 4, 9 மற்றும் 9 ரன்கள் என மோசமான ஃபார்மில் உள்ளார்.
பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசியிருந்தால், ஆஸ்திரேலியாவில் பேக்-ஃபுட் வீரர்கள் சிறப்பாக விளையாட முடியும். கே.எல். ராகுல் பேக்-ஃபுட் வீரர் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
இருந்தாலும், மோசமாக விளையாடி வருவதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடவில்லை. அவருக்கு போதுமான பந்துகள் கிடைக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிராக இக்கட்டான நிலையில் ஆட்டம் இழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதற்கிடையே, அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய அணி நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இன்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? கே.எல். ராகுல் நீக்கப்படுவாரா? என்பது குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.
ராகுல் டிராவிட் அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:-
கே.எல். ராகுல் தலைசிறந்த வீரர். ஆடுகளத்தில் சாதனைகள் மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் எளிதானதாக அமையவில்லை. இதுபோன்ற விஷயம் டி20-யில் நிகழும். இந்த தொடர் மிகவும் சவாலானது. பயிற்சி ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த சில போட்டிகளில் எல்லா துறைகளிலும் சரியான வகையில் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
அவருடைய திறமை மற்றும் தரம் எங்களுக்கு தெரியும். இந்த கண்டிசனுக்கு அவர் மிகவும் பொறுத்தமானவர். சிறந்த ஆல்-ரவுண்ட் விளையாட்டை பெற்றுள்ளார். சிறந்த பேக்-ஃபுட் வீரர். இந்த கண்டிசனுக்கு இதுபோன்ற வீரர்தான் தேவை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்.
வீரர்களுடன் நாங்கள் ஏராளமான பேசியுள்ளோம். சரியான தகவலை இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். ஆனால் வார்த்தை மற்றும் செயல் மூலமாக அவருக்கு நாங்கள் கடந்த ஓராண்டாக ஆதரவாக இருக்கிறோம் என்பதை உறுதியாக கூற இயலும். இந்த தொடரில் இந்திய அணி செல்லும் பாதை குறித்து தெளிவாக உள்ளோம். அவற்றில் இருந்து பின் வாங்கவில்லை. நாங்கள் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளோம்.
தினேஷ் கார்த்தில் இன்று நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக, பந்தை துள்ளி பிடிக்கும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு நல்ல நிலையில் உள்ளார். பயிற்சி மேற்கொண்டார். நாளைய போட்டிக்கு முன் அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் பழைய உடல் தகுதியை பெற, சிறந்த பயிற்சி அளித்துள்ளோம். நாளை காலை அவர் எவ்வாறு உள்ளார் என்பதை பார்த்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்.
தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் எப்படி விளையாடினார் என்பதை மதிப்பீடுவது மிகவும் கடினம். ஏனென்றால், அவருக்கு விளையாடும் வகையில் போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பந்துதான் கிடைத்தது. நெதர்லாந்துக்கு எதிராக விளையாடவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார் என நாங்கள் நினைத்தோம். இதுதான் எங்களுக்கு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.
- தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர்.தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்.குறிப்பாக அலெக்ஸ் ஹாலெஸ் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.
சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் சான்ட்னெர் பந்துவீச்சில் 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.
மறுபுறம் மொயீன் அலி (5) ரன்கள் , லியாம் லிவிங்ஸ்டன் (20) ,ஹார்ரி புரூக்( 7 ) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
- வங்காள தேசம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் மோத உள்ளது.
- இந்தியா, வங்காள தேசம் தலா 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பிரிவில் இரண்டு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் சிறந்த அணிகள் கூட வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் 2-ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் உள்ளது.
இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியதன் காரணமாக வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு சற்று மங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது.
நாளை வங்காள தேசத்துடன் மோதுகிறது. 6-ந்தேதி ஜிம்பாப்வே உடன் மோதுகிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
வங்காள தேசம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் மோத உள்ளது. நாளை இந்தியாவுடன் மோதுகிறது. இரண்டில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி வாய்ப்பு கிடைக்கும். ஆனால் வங்காள தேச அணி விளையாட இருக்கும் எதிரணிகள் பலம் வாய்ந்தவை. மேலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி எனக் கணிக்கப்பட்டவை. ஆகவே, வங்காளதேசத்திடம் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தோல்வியடைந்தால், அது இரண்டு அணிகளுக்கும் மிகப்பெரிய தடையை உருவாக்கும்.
இந்த நிலையில், இந்தியாவை வீழ்த்தினால் அது எங்களக்கு வருத்தமாகத்தான் இருக்கும் என வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
நாளை இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில் அல் ஹசன் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-
ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த அணுகுமுறையுடன் விளையாட விரும்புகிறோம். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் எங்களுடைய திட்டத்தில் உறுதியாக இருக்க விரும்புகிறோம். உலகக்கோப்பையில் எங்களுடைய வீரர்களில் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலைப்படவில்லை. போட்டியில் அனைத்து துறையிலும் ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவனம் வெலுத்துகிறோம்.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களுடன் சிறந்த அணி. நாங்கள் சிறப்பாக விளையாடி, எங்களுடைய நாளாக அமைந்தால், நாங்கள் வெற்றி பெற முடியாததற்கான காரணம் இருக்க முடியாது. அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வீழ்த்தியதை நாம் பார்த்திருக்கிறோம். அதே வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தால், நான் மகிழ்ச்சியடைவேன்.
இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவு கொடுக்கிறார்கள். சிறந்த ஆட்டமாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வந்துள்ளனர். நாங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வரவில்லை.
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால், அது வருத்தமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவர்களுக்கு அப்செட் அடைய செய்ய முயற்சி செய்வோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சாதனையின்படி அனேகமாக, அவர் நம்பர்-1 வீரராக இருப்பார் என நினைக்கிறேன். மேலும், உலகத் தரம் வாய்ந்த வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர். நாங்கள் இன்னும் ஆலோசனை கூட்டம் போடவில்லை. ஆலோசனை செய்த பின், எந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசுவோம். நாங்கள் வெற்றி பெற விரும்பினால், அனைத்து துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
- டி 20 உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
காலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மோதியது.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய தொடங்கியது.
ஆரம்பத்தில், 2.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடியது.
இறுதியில், இலங்கை அணி 18.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
- டி 20 உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மோதியது.
இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியின் அரை இறுதி வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும் என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, இலங்கை அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது 2.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
- தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.
- கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானாக கருதப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெற்றார்.
தற்போது இவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று பொழுதை கழித்து வருகிறார். இந்தநிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.

இதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெலகாவி வழியாக பயணித்துள்ளார். அப்போது அவர் பெலகாவி புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.
மேலும், அவரது ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- சாத்விக், சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-19 என்ற நேர்செட்டில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
- 750 புள்ளிகள் கொண்ட பேட்மிண்டன் போட்டி ஒன்றில் இரட்டையர் பிரிவில் வாகை சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.fr
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீசில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, 25-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் லூ சிங் யாவ்-யாங் போ ஹான் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் சாத்விக்-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இதன் மூலம் 750 தரவரிசை புள்ளிகள் கொண்ட பேட்மிண்டன் போட்டி ஒன்றில் இரட்டையர் பிரிவில் வாகை சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.
சாதனை படைத்த சாத்விக் சாய்ராஜ் -சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஸ்பெயினில் நடந்த உலக ஜூனியர் பேட்மிண்டனில் (19 வயதுக்கு உட்பட்டோர்) வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
- நியூசிலாந்து, வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
- நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.
மும்பை:
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.
நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
அதேபோல் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜடேஜா இந்த தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் , இஷான் கிஷன் , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்
டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ். பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
- என் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்.
- விராட் கோலி அறையின் வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.
பிரிஸ்மேன்:
டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று தென்ஆப்பிரிக்கா அணி உடன் மோதியது. இந்த போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் கிரவுன் பெர்த் ஓட்டல் அறையில் தங்கி உள்ளனர்.
இந்த ஓட்டலில் விராட் கோலியின் அறையில் ரசிகர் ஒருவர் கோலி இல்லாத நேரத்தில் அனுமதியின்றி நுழைந்து அவரின் அறையை வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோவால் ஆத்திரமும், அதிருப்தியும் அடைந்த விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்து வீடியோ எடுத்த நபருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், "ஓட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு சுதந்திரம் கிடைக்கும். என் தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி அறையின் வீடியோ வெளியான விவகாரத்தில் அந்த ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது. மேலும் அந்த வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தான் எங்களின் முதன்மையான முன்னுரிமை. இந்த சம்பவத்தால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். சம்பந்தப்பட்ட விருந்தினரிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.






