என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக்கோப்பை- அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
    X

    டி20 உலகக்கோப்பை- அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    • அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களத்தில் இறங்கியுள்ளது.
    • இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மழையால் போட்டிகள் நிற்பது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற அணிகளும் வலுவான அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் விளையாடி வருவதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான புள்ளிப்பட்டியல் சிக்கலில் உள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் ஒன் பிரிவு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

    இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

    இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டு களத்தில் இறங்கியுள்ளது.

    இரு அணிகளும் இரண்டு புள்ளிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×