என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என பாபர் அசாம் கூறியுள்ளார்.
    • அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

    இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இம்ரான்கான் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    உலக கோப்பை டி20 போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர்அசாம் தனது 'டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்' என பதிவு செய்துள்ளார்.

    இதேபோல முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது 'டுவிட்டர் பக்கத்தில், வஜிராபாத்தில் நடந்த நிகழ்வை நினைத்து கவலையடைகிறேன். இம்ரான்பாய் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்று பட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்க கூடாது' என்று கூறியுள்ளார்.

    இதேபோல முஸ்தாக் அகமது, உமர்குல், வகாப் ரியாஸ், சோயப்அக்தர், முகமது ஹபீஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இம்ரான்கான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்-1 பிரிவில் இன்று காலை அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

    இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பால் ஸ்டிரிசிங் (37 ரன்) பால்பிர்னி (30 ரன்) அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது. அயர்லாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டும், சோதி, டிம்சவுத்தி, சான்ட்னெர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அரை இறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அந்த ரன் ரேட் வலுவாக இருப்பதாக அரை இறுதிக்கு செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

    • டி20 போட்டிகள் தொடர்பாக நடிகை சிஹார் ஷின் வாரி வெளியிட்ட பல்வேறு பதிவுகள் பலிக்கவில்லை.
    • விராட் கோலியை விரைவில் அவுட் ஆகும் படி இந்திய வாலிபர் கேட்டுக்கொண்டார்.

    இஸ்லாமாபாத்:

    20 ஓவர்கள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.

    இதில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் நடிகை சிஹார் ஷின்வாரி விபரீத சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

    அதில் என்றும் இல்லாத அதிசயமாக ஜிம்பாப்வே அணி, இந்திய அணியை தோற்கடித்து விட்டால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று கூறியுள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    டி20 போட்டிகள் தொடர்பாக நடிகை சிஹார் ஷின் வாரி வெளியிட்ட பல்வேறு பதிவுகள் பலிக்கவில்லை. இதையடுத்து அவரை பலரும் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் அவரது முந்தைய கணிப்புகள் பொய்யானதை பகிர்ந்து கொண்டனர்.


    இந்நிலையில் இந்திய வாலிபர் ஒருவர் பாகிஸ்தான் நடிகையின் பதிவிற்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார். நானும் ஜிம்பாப்வே காரன் தான். என்று பதிவிட்ட அந்த வாலிபர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி விரைவில் அவுட் ஆகும் படி கேட்டுக்கொண்டார். நீங்கள் சீக்கிரம் அவுட் ஆனால் நான் செட்டில் ஆகி விடுவேன் என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

    • புனேரி அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 32 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    • யு.பி. யோத்தா 8 ஆட்டத்தில் தலா 4 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது.

    பெங்களுரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு மும்பா அணிகள் மோதுகின்றன.

    மும்பா அணி 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தபாங் டெல்லி-பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புனேரி பல்டான்-யு.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.

    புனேரி அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வி, 2 டை பெற்று 32 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. யு.பி. யோத்தா 8 ஆட்டத்தில் தலா 4 வெற்றி, 4 தோல்வி பெற்று உள்ளது.

    • வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
    • அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

    அடிலெய்டு:

    8-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் விளையாடும் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன.

    சூப்பர்-12 சுற்றின் ஆட்டங்கள் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இதுவரை எந்த அணியும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை.

    குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானும், குரூப்-2 பிரிவில் நெதர்லாந்தும் வெளியேற்றப்பட்டுள்ளன. குரூப்-1 பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 5 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியை உறுதி செய்து விடலாம் என்ற சூழலில் களம் இறங்கியது.

    மூன்று புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லை) உள்ள அயர்லாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்து போய்விட்டது.

    டாஸ் ஜெயித்த அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பின் ஆலென், டிவான் கான்வே களம் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 32 ரன்னிலும் கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்னிலும் வில்லியம்சன் 35 பந்தில் 61 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்துவந்த நீசம், சட்னர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிட்செல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் விளாசினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

    அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். 

    • தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
    • நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன்.

    20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னுக்கு யார் செல்வார்கள் என்று யாருக்கு தெரியும்? ஆனால் ஆஸ்திரேலியா தனது பிரிவில் இருந்து அரை இறுதிக்கு செல்லும். தென் ஆப்பிரிக்க அணி ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் என்று நம்புகிறேன்.

    நான் விளையாடும் ஒவ்வொரு பெரிய ஆட்டத்திலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தபோது வீரர்களிடம் அந்த தருணத்தை அனுபவிக்க சொல்வேன். இது ஒரு பெரிய விளையாட்டு என்பதை உணர்ந்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எவ்வளவு அதிகமான திறமையை வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினால் சிறப்பாக விளையாடுவீர்கள் என்றார். 

    • ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    டெக்சாஸ்:

    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் 'நான்சி ரிச்சே' பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை (பெலாரஸ்) தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.

    • முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர்.
    • ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

    அடிலெய்டு:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்யும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் ஆஸ்திரேலியா மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பை தொடரில் அடிலெய்டில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை (குரூப் 1) எதிர்கொள்கிறது.

    2 வெற்றி (இலங்கை, அயர்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வி (நியூசிலாந்துக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இங்கிலாந்துக்கு எதிராக ) என்று 5 புள்ளிகளுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி ரன்-ரேட்டில் வெகுவாக பின்தங்கி இருக்கிறது. இதனால் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. அதனை செய்தாலும் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்குரிய கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும். குறிப்பாக நியூசிலாந்து அணி, அயர்லாந்திடம் வீழ்ந்தால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தீரும்.

    அயர்லாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டிம் டேவிட் ஆகியோர் தசைப்பிடிப்பு காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் களம் காணுவார்களா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. 'உடல் தகுதி சோதனையின் போது ஒரு சதவீதம் திருப்தியில்லை என்றால் கூட விளையாடமாட்டேன். இருப்பினும் நான் விளையாடுவதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்' என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். பிஞ்ச் ஆடாவிட்டால் மேத்யூ வேட் கேப்டன் பணியை கவனிப்பார்.

    முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 2 தோல்வி (இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக), 2 முடிவில்லையுடன் (நியூசிலாந்து, அயர்லாந்துக்கு எதிராக) 2 புள்ளி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. சூப்பர்12 சுற்றில் வெற்றி பெறாத ஒரே அணியான ஆப்கானிஸ்தான், ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப தீவிரமாக முயற்சிக்கும்.

    ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் மோதி இருக்கின்றன. மூன்றிலும் ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கும் சுழற்பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) அல்லது கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட் அல்லது ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

    ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி, இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், குல்படின் நைப், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முஜூப் ரகுமான், பரீத் அகமது, பாசல்ஹக் பரூக்கி.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதல் முறையாக ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
    • சிறந்த வீராங்கனை விருதுக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோருடன் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பெண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் நிடா டாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளரை ஐசிசி விரைவில் அறிவிக்க உள்ளது.

    • குரூப் பி பிரிவில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
    • இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி வெளியேறும்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்று லீக் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்று முடிவுக்கு வர போகும் நிலையில் தற்போது வரை ஒரு அணி கூட அதிகாரபூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே உள்ளது.

    குரூப் பி பிரிவில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்றைய வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் குரூப் பி பிரிவில் ஒரே நாளில் இதற்கு முடிவு கிடைக்கவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்காளதேச அணியையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் வரும் 6-ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

    ஒருவேளை அன்று நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் (7 புள்ளிகள்) நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அன்றைய நாளின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தினாலும் (6 புள்ளிகள்), இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றால் (8 புள்ளிகள்) பாகிஸ்தான் அணி வெளியேறும். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டு பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தினால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சம நிலையில் இருக்கும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.

    ஒருவேளை பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி, எதிர்பாராத விதமாக ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் புள்ளிகள் சமமாகும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும். இந்த அனைத்து சாத்தியங்களிலும் பாகிஸ்தான் அணி முதலில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- வங்காளதேச அணிகள் விளையாடிய போட்டி மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • மழைக்கு முன் வங்காளதேச அணியின் ஆட்டம் வெற்றி பெறுவதுபோல் இருந்தது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.

    அப்போது, வங்காளதேசம் 49 ரன்கள் எடுத்திருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவை விட 17 ரன்கள் அதிகமாக இருந்தது. மழை தொடர்ந்து பெய்ய வேண்டும். போட்டி அத்துடன் நிற்க வேண்டும் என வங்காள தேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஓவர்கள் குறைக்கப்பட்டது. 16 ஓவரில் 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்காளதேசம் அணியால் 145 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்னில் வெற்றி பெற்றது.

    மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கு முன் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நடுவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    போட்டி முடிந்த பின்னர் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் ஷாகிப் அல் ஹசன் ஷாக் ஆகிவிட்டார்.

    ஷாகிப் அல் ஹசனுக்கும், பத்திரிகையாளருக்கும் இடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் பின்வருமாறு:-

    பத்திரிகையாளர்: மழைக்குப்பின் நீங்கள் உண்மையிலேயே விளையாடாமல் இருக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: எங்களுக்கு ஏதாவது ஆப்சன் இருக்கிறதா?

    பத்திரிகையாளர்: இல்லை. அது ஒரு காரணம்தான். இருந்தாலும், அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: யாரை சம்மதிக்க வைப்பது?

    பத்திரிகையாளர்: நடுவர்கள் மற்றும் ரோகித் சர்மா

    ஷாகிப்: நடுவரை சம்மதிக்க வைக்கும் திறன் என்னிடம் உள்ளதா?

    பத்திரிகையாளர்: அது சரிதான்... அப்படியென்றால் நீங்கள் வங்காளதேச ஆறுகளைப் பற்றியா விவாதித்துக் கொண்டிருந்தீர்கள்?

    ஷாகிப்: .... (பதில் அளிக்க முடியாமல் திகைத்து அப்படியே இருந்தார்.)

    பத்திரிகையாளர்: நீங்கள் வங்காளதேச ஆறுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு ஏதாவது பற்றி விவாதித்தீர்களா? என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்? அதை வெளிப்படுத்த முடியுமா?

    ஷாகிப்: தற்போது நீங்கள் சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். நடுவர் இரு நாட்டு கேப்டன்களையும் அழைத்து டார்கெட், இன்னும் எத்தனை ஓவர் வீச வேண்டும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து பேசினார்.

    பத்திரிகையாளர்: அவ்வளவுதான்... நீங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டீர்களா?

    ஷாகிப்: ஆமாம்.

    பத்திரிகையாளர்: அற்புதம்... நன்றி...

    • தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது
    • டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பையில் இன்று தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென் ஆப்பிரிக்கா 15 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த இலக்கை நோக்கி பயணித்த தென் ஆப்பிரிக்கா, 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்2 புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது. அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது.

    ×