என் மலர்
விளையாட்டு
- உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
- இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இன்று இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் முகமது சமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது சமி பெற்று இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
அந்த வகையில், இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.
- இலங்கை அணியின் மேத்யூஸ் மட்டும் 12 ரன்களை எடுத்தார்.
- இந்திய வீரர் முகமது சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார்.

கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் பும்ரா வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். இதே போன்று சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய வீரர்களால் இலங்கை அணி 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் பொறுமையாக ஆடினார். இவரும் 12 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 19.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களை விட்டுக் கொடுத்து இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.
போட்டி முடிவில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 92 ரன்களை குவித்தார்.
- இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. பேட்டிங்கில் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 82 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். கே.எல். ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை சார்பில் தில்ஷான் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், துஷமந்தா சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- ஆட்டத்தின் முதல் ஓவரில் ரோகித் சர்மா 4 ரன்னில் அவுட்டானார்.
மும்பை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய விராட் கோலி, சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
இந்திய அணி 22 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
- 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.
- எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ்:
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.
மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.
இந்நிலையில், பாரிசில் உள்ள ஈபிள் டவரில் லியோனல் மெஸ்சியின் சாதனையை கவுரவிக்கும் வகையில், அவரது புகைப்படம் லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது.
- 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
மும்பை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
- இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடும்போது நெருக்கடி இருக்கும்
- உலகக் கோப்பையாக இருந்தாலும், எங்களது அணுகுமுறையில் வேறுபாடு இருக்காது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியா தோல்வியை சந்திக்காமல் உள்ளது. தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆனால், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளை பந்தாடியது.
இந்தியாவை வருகிற 5-ந்தேதி தென்ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும். மேலும், இந்த உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய போட்டியாக அமையும் என்றால் அது மிகையாகாது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கிற்கு வான் டெர் டுசன் முக்கிய பங்காற்றி வருகிறார். நேற்று நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து வான் டெர் டுசன் கூறியதாவது:-
உண்மையிலேயே, இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்கள் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அணியாக திகழ்கின்றனர். சூப்பர் பவுலிங். அதுபோல் உண்மையிலேயே பேட்டிங் சூப்பர்.
ஆனால் நாம் செய்ய விரும்பும் விசயங்களைச் சிறப்பாகச் செய்தால், மிகவும் வலுவான நிலையில் இருப்போம் என்பதை அறிந்து அந்த விளையாட்டிற்குச் செல்வோம். நெருக்கடியின் கீழ் விளையாடுவது சவாலானது. அதைத்தான் செய்ய போகிறோம். ஆனால், இதற்கு முன் இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடியுள்ளோம். அப்போது அவர்களை தோற்கடித்துள்ளோம்.
இதனடிப்படையில் இது உலகக் கோப்பையாக இருந்தாலும் கூட, மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. நாங்கள் மிகப்பெரிய அளவில் இதை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம், அதை எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு வான் டெர் டுசன் தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்
- உலகக் கோப்பையில் 225 அடித்ததுடன், இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்
உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். இலங்கைக்கு எதிராக அரைசதம் விளாசினார்.
டிராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் அவசரமாக சொந்த நாடு திரும்ப இருக்கிறார். இதனால் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகும். ஆஸ்திரேலியா வருகிற 4-ந்தேதி இங்கிலாந்தையும், 11-ந்தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.
மிட்செல் மார்ஷ் சொந்த காரணத்திற்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
- இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா என முக்கிய அணிகளிடம் தொடர் தோல்வி
- பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயம்
இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை நியூசிலாந்து வீழ்த்தியது. அதன்பின் தொடரந்து நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது.
இதனால் நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்தது. சிறப்பாக விளையாடும் நியூசிலாந்து அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்பின்தான் அந்த அணிக்கு சோதனை காத்திருந்தது. 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும், 6-வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது. அத்துடன் நேற்று தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 190 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனால் 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த போட்டிகளில் தோல்வியடைந்தால் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும்.
தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று, அதன்பின் ஹாட்ரிக் தோல்வியால் நியூசிலாந்து அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறும்
- இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும்
இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி அடையாத அணியாக வீறுநடை போட்டு வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி ஈடுகொடுக்குமா என்பது சந்தேகம்தான். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறும்.
இந்தியா கடந்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் ஐந்து போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியால் 229 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்குமா? என்பது மட்டுமே இந்திய அணியிடம் ஒரு கேள்வி. இதை இந்தியா சரியாக செய்தால், தோற்கடிக்க முடியாத அணியாக செல்லும் என்பதில் ஐயமில்லை.
இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவிற்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் சுழற்பந்து, பேட்டிங் துறையில் எதிர்பார்த்த வகையில் ஜொலிக்கவில்லை. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறும். இதனால் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும். இதனால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் முழுத்திறனையும் வெளிப்படுத்தும். ஆகையால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.
- டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து டி காக்- வான் டெர் டுசென் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான் டெர் டுசென் 133 ரன்களும் டி காக் 114 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரரான டெவான் கான்வே 2 ரன்னில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய வில் யங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 9 ரன்களையும், டேரில் மிட்செல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, மிட்செல் சந்த்னர் மற்றும் திம் சவுதீ தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேம்ஸ் நீஷன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை, டிரென்ட் பவுல்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக களத்தில், கிளெம் பிலிப்ஸ் மற்றும் மேட் ஹென்றி இருந்தனர்.
இதில், கிளென் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேட் ஹென்றி ரன்கள் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபாரமாக வென்றது.
- வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
- சிலை திறப்பு விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர். மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
The Good of Cricket ♥️ Sachin Tendulkar.#SachinTendulkarpic.twitter.com/YYa9rNDgFB
— BharatCricket (@BharatEcricket) November 1, 2023
இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






