search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தொடர்ந்து 7-வது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் இந்தியா: இலங்கையுடன் இன்று மோதல்
    X

    தொடர்ந்து 7-வது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் இந்தியா: இலங்கையுடன் இன்று மோதல்

    • இந்தியா வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறும்
    • இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும்

    இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி அடையாத அணியாக வீறுநடை போட்டு வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி ஈடுகொடுக்குமா என்பது சந்தேகம்தான். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறும்.

    இந்தியா கடந்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் ஐந்து போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியால் 229 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்குமா? என்பது மட்டுமே இந்திய அணியிடம் ஒரு கேள்வி. இதை இந்தியா சரியாக செய்தால், தோற்கடிக்க முடியாத அணியாக செல்லும் என்பதில் ஐயமில்லை.

    இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவிற்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் சுழற்பந்து, பேட்டிங் துறையில் எதிர்பார்த்த வகையில் ஜொலிக்கவில்லை. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறும். இதனால் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும். இதனால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் முழுத்திறனையும் வெளிப்படுத்தும். ஆகையால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

    Next Story
    ×