அவசரமாக தாயகம் திரும்பிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்: ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்உலகக் கோப்பையில் 225 அடித்ததுடன், இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்
அவசரமாக தாயகம் திரும்பிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்: ஆஸ்திரேலிய அணிக்கு இழப்பு
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 121 ரன்கள் அடித்தார். இலங்கைக்கு எதிராக அரைசதம் விளாசினார்.

டிராவிஸ் ஹெட் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் அவசரமாக சொந்த நாடு திரும்ப இருக்கிறார். இதனால் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகும். ஆஸ்திரேலியா வருகிற 4-ந்தேதி இங்கிலாந்தையும், 11-ந்தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்கிறது.

மிட்செல் மார்ஷ் சொந்த காரணத்திற்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com