என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாரான புதுவை தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகர்-2 அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்ளின் (வயது 59). பொதுப்பணித்துறை கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி குளோதினி. அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்தநிலையில் தற்போது புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு அந்த பகுதியில் பிராங்ளின் மக்கள் பணிகள் செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பிராங்ளின் வீட்டில் இல்லை. அவரது மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மட்டும் இருந்தனர். அப்போது ஒரு ஸ்கூட்டரில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பிராங்ளின் வீடு அருகே சிறிது நேரம் நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்களில் ஒருவர் ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து பிராங்ளின் வீடு மீது அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வீசினார்.

    அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    வீட்டின் முன்பக்கத்தில் கிரில் கேட் மூடி இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. முன்வாசல் பகுதியில் குண்டு வெடித்த சிதறல்கள் கிடந்தன. அந்த இடம் சேதமடைந்து காணப்பட்டது. வெடிமருந்து சிதறல்களும் கிடந்தன. வெடிகுண்டுகள் வீசப்பட்ட தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிராங்ளின் வீடு முன் திரண்டனர்.

    இதுபற்றி அறிந்து போலீஸ் சூப்பிரண்டுகள் சுவேதா, சுபம் கோஷ் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். குண்டு வெடித்த இடத்தில் சிதறி கிடந்த தடயங்களை அவர்கள் சேகரித்தனர்.

    தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோரும் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில் பிராங்ளினை மிரட்டும் வகையில் அவரது வீட்டில் வெடிகுண்டுகளை வீசி சென்றனரா? அல்லது தொழில் போட்டி காரணமாக வீசினார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் உப்பளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் ரூ.60 கோடியில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
    வில்லியனூர்:

    புதுச்சேரி-விழுப்புரம் இடையேயான போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    புதுவையில் இந்த சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் திகழ்கிறது. இந்த பாலத்தில் 24 மணி நேரமும் பஸ்கள், லாரிகள், சரக்குவேன்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது மேம்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மேம்பாலம் குறுகியதாக இருப்பதாலும், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதாலும் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் எம்.என்.குப்பம் முதல் இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரையில் சாலை அகலப்படுத்தப்படவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தது.

    இந்த பணிகளுக்கான தொடக்க விழா நேற்று காலை ஆரியபாளையத்தில் உள்ள ஆற்றுப்பாலம் அருகில் நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, சிவசங்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    புதுவை மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.

    நானும் எந்த விதத்தில் உதவி செய்ய வேண்டுமோ? அதை செய்கிறேன். இந்த அரசு மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது. புதுவைக்கு இன்னும் பல்வேறு திட்டங்கள் வர உள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் உறுதியாக உள்ளனர். புதுவை மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற உள்ளது. அத்தனை திட்டங்களையும் மத்திய அரசின் உதவியோடு நிறைவேற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஆரியபாளையம் விழுப்புரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். முன்பு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப தற்போது இங்கு அகலமான பாலம் நமக்கு தேவை. இதுதொடர்பாக மத்திய அரசை அணுகியபோது, 4 வழிச்சாலையாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இந்த பாலம் தரமானதாக 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

    அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது. அனைத்து சாலைகளும் விரைவில் மேம்படுத்தப்படும். கோர்க்காடு, ஏம்பலம் சாலை மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெறும்.

    புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்கு மத்திய அரசின் நிதியுதவியை கேட்டுள்ளோம். மத்திய அரசும் தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவைக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர கவர்னர் உறுதுணையாக இருந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இந்த திட்டத்தின்படி ரூ.60 கோடி செலவில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 365 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலத்தின் இருபுறமும் 470 மீட்டர் அணுகுசாலை அமைக்கப்படும். எம்.என்.குப்பம் முதல் மூலக்குளம் வரை சாலையின் நடுவில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட உள்ளது. நகரின் இருபுறமும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கப்படுகிறது.

    மேலும் வடிகால் வசதிகள் தேவைப்படும் இடங்களில் 12 குறுகிய பாலங்கள், நிழற்குடை, போக்குவரத்து அறிவிப்பு பலகை, சாலையில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலை பணி, குறுகிய பாலம், வாய்க்கால் ஆகியவற்றிக்கு ரூ.44 கோடியே 31 லட்சமும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.25 கோடியே 87 லட்சம் என மொத்தம் ரூ.70 கோடியே 18 லட்சத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் குறைந்தபட்ச தொகையாக ரூ.59 கோடியே 49 லட்சம் கோரிய தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள பாலத்துக்கு கிழக்கு பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இருப்பினும் ஏற்கனவே இருந்து வரும் போக்குவரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வழக்கம் போல் அதேவழித்தடத்தில் வாகனங்கள் சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காரைக்காலில் நாயை குளிப்பாட்ட சென்ற பிளஸ் -2 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் வேட்டக்காரன் வீதியைச்சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் காரைக்காலில் மதுபான கடைகளின் பங்குதாரராக இருந்து வருகிறார். அவரது மகன் கவுசிக் (வயது17). இவர் காரைக்கால் தருமபுரம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று காலை கவுசிக், காரைக்கால் கோட்டுச்சேரியை அருகே திருவேட்டக்குடி குளத்து மேடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில், நண்பர்களோடு நாயை குளிப்பாட்ட சென்றார்.

    அப்போது நாயுடன் கவுசிக் குளத்தில் இறங்கியபோது, குளத்தின் உள் பகுதிக்கு நீச்சல் அடித்து சென்றார். அந்த குளம் அண்மையில் மணல் எடுத்த பகுதி என்பதால், சேறுடன் காணப்பட்டது. இதனை அறியாத கவுசிக் சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார். உடனடியாக நண்பர்கள் குளத்தின் பல இடங்களில் தேடியும் கெளசிக் கிடைக்காததால், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

    அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், குளத்தின் பல இடங்களில் தேடி, சேறில் சிக்கி உயிரிழந்த கவுசிக் உடலை கைபற்றி கரைக்கு கொண்டுவந்தனர்.

    பின்னர் கவுசிக் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனை பிரேத பரிசோனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடியில் 4 வழி பாதையுடன் மேம்பாலத்தை கவர்னர், முதல்-அமைச்சர் பணிகளை தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி: 

    புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் சங்கராபரணி ஆற்றை கடக்க மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டதால் சிதில மடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது ஆற்று வெள்ளம் மேம்பாலத்தை தாண்டி ஓடியது. இதனால் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
    மேம்பாலம் குறுகியதாக இருப்பதாலும், போக்கு வரத்து நெரிசல் அதிகரித் துள்ளதாலும் புதிய பாலம் அமைக்க அரசு முடிவு செய்தது. அதோடு தேசிய நெடுஞ்சாலையில் எம்.என்.குப்பம் முதல் இந்திராகாந்தி சிலை வரை சாலையை அகலப்படுத்தவும், பலப்படுத்தவும் திட்டமிடப் பட்டது. 

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ரூ.92 கோடியே 74 லட்சத்தில் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது. இத் திட்டத்தின் கீழ் 11.240 கி.மீ. சாலை அகலப்படுத்தப்பட உள்ளது.  சங்கராபரணி ஆற்றின் மீது 365 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. 

    புதிய மேம்பாலத்தின் இருபுறமும் 470 மீட்டர் அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது. எம்.என்.குப்பம் துதல், மூலக்குளம் வரை சாலையின் மத்தியில் மெல்லிய தடுப்புச்சுவரும் அமைக்கப்பட உள்ளது. நகர்ப்புறத்தில் சாலை யின் இருபுறமும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கப்படுகிறது. 

    மேலும் வடிகால் வசதிக்காக தேவைப்படும் இடங்களில் 12 குறு பாலங்கள், நிழற்குடை, போக்குவரத்து அறிவிப்பு பலகை, சாலை வர்ணம் பூசும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலை பணி, குறு பாலம், வாய்க்கால் ஆகியவற்றுக்கு ரூ.44 கோடியே 31 லட்சமும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.27 கோடியே 85 லட்சம் என மொத்தம் ரூ.70 கோடியே 18 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. 

    ஒப்பந்த அடிப்படையில் குறைந்தபட்ச தொகையாக ரூ.59 கோடியே 43 லட்சம் கோரிய தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை விழா 11--ந்தேதி நடந்தது.

    விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:- 

    புதுவை மாநிலம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
    புதுவை மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். நானும் எந்தவிதத்தில் உதவி செய்ய வேண்டுமோ? அதை செய்கிறேன். மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக உள்ளது. 

    முதல்-அமைச்சர் தன் பொறுப்போடு செயல்படுகிறார். அவருக்கு ஒரு சகோதரியாக என் பணிகளை மேற்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள உரிமை எவ்விதத்திலும் மறுக்கப்படாது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் நோக்கமும் புதுவையை மேம்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் உள்ளது. இன்னும் பல திட்டங்கள் புதுவைக்கு வர உள்ளது. 

    மத்திய  மந்திரிகள் மிகுந்த உறுதுணையாக உள்ளார்கள். சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி புதுவை  வளர்ச்சி பெற வேண்டும் என விரும்புகிறார். தெலுங்கானாவுக்கு வந்த பிரதமர் மோடியும் புதுவை மக்களின் மீது மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். மக்கள் நலனில்தான் அனைவரின் அக்கறையும் உள்ளது. 

    புதுவை மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற உள்ளது. இன்னும் பல திட்டங்கள் புதுவைக்கு வர உள்ளது. அமைதியாக புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்படுகிறது. அத்தனை திட்டங்களுக்கும் மத்திய அரசிடம் உதவி பெற்று வருகிறோம். அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    இது மிகவும் அவசியமான பாலம். முன்பு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. இப்போது   விழுப்புரம் செல்லும் மிக முக்கியமான சாலையாக உள்ளது. இங்கு பெரிய பாலம் தேவை. மத்திய அரசை அணுகிய போது 4 வழி சாலையாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இந்த கட்டு மானப்பணியை விரைவில் தொடங்கி 2 ஆண்டில் ஒப்பந்ததாரர் முடிக்க வேண்டும். 

    இந்த பாலம் தரமானதாக இருக்க வேண்டும். புதுவையில் அனைத்து சாலைகளையும் மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெறும். கோர்க்காடு, ஏம்பலம் சாலை மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்கு மத்திய அரசின் நிதியுதவி கேட்டுள்ளோம். மத்திய அரசும் தேவையான நிதியை ஒதுக்கி தந்து வருகிறது. புதுவைக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர கவர்னர் பெரும் உறுதுணையாக இருந்து வருகிறார். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்கட்சித்தலைவர் சிவா, சிவசங்கரன், எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 10-ந்தேதி 2 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 91, காரைக்காலில் 42, ஏனாமில் 9, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 32, காரைக்காலில் 16, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 56 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 479, காரைக்காலில் 142, ஏனாமில் 37, மாகியில் 3 பேர் என 661 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 71 பேர் கொரோனா தொற்றால்   பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 121 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் ஆயிரத்து 88, காரைக்காலில் 725, ஏனாமில் 101, மாகியில் 25 பேர் என ஆயிரத்து 937 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.  புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 993  பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை பெரிய காலாப்பட்டை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால்  மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 52 ஆயிரத்து 190 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    நினைவு தினத்தையொட்டி சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்தார்.
    புதுச்சேரி: 

    புதுவை அரசு சார்பில் தியாகி சிங்காரவேலர் நினைவு நாள் 11-ந்தேதி அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி புதுவை - கடலூர் சாலையில் உள்ள அவரது  சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம்,  அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    தி.மு.க. சார்பில் எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எம்.எல்.ஏ. சம்பத், இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், சேதுசெல்வம், கீதநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி: 

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் அண்ணா சிலை அருகே மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர்முருகன், தமிழ் மாநிலக்குழு பெருமாள், மத்தியக்குழு சுதாசுந்தர்ராமன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், சத்யா, தமிழ்செல்வன், கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆனந்து, சங்கர், இளவரசி, மதிவாணன், ராம்ஜி, சஞ்சைசேகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் மக்களிடையே பிளவு வாதத்தை   ஏற்படுத்தும் மத்திய பா.ஜனதா  அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
    அரியாங்குப்பம் பகுதியில் வரி பாக்கி செலுத்தாத கடை மற்றும் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர், வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உடனடியாக செலுத்தவும் புதுப்பித்துக்கொள்ளவும் ஆணையர் ரமேஷ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத் திருந்தார்.

    இதில் சிலர் மட்டுமே வரி பாக்கி செலுத்தினர் மற்றவர்கள் வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிரடியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.2 லட்சம் வரை வரி பாக்கி செலுத்தாதவர்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து நவீன வசதியுடன் கூடிய திருமண மண்டபமும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருந்ததால் அந்த மண்டபம் ஆனையர் ரமேஷ், மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், பில் கலெக்டர் கந்தவேல், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. 

    மேலும் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள் தொடங்க ஏதுவாக வரிபாக்கியை செலுத்த  ஆணையர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    விவசாயிகளின் பயிர்காப்பீடு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் மத்திய மந்திரியிடம் செல்வகணபதி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து புதுவை பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பயிர்களுக்கான தேசிய காப்பீட்டு திட்டம், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜான திட்டத்தை  புதுவை வேளாண் துறை செயல்படுத்த தீவிரம் காட்டியுள்ளது. இதற்கான இ-டெண்டர் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. புதுவை விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டும் பலன்களை பெற  முடியவில்லை. புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் ராபி 2019--20 தொடர்பாக தீர்வு மற்றும் தீர்க்கப்படாத நிலுவை தொகை விவரங்களை  வழங்காமல் உள்ளது. 

    2019--20, 2020--21-ம் ஆண்டில் மானிய கோரிக்கையுடன் இறுதி வணிக புள்ளி விவரங்களை வழங்கவில்லை. புதுவையில் 2019--20 ஆண்டின் ராபி--2 வாழை பயிரில் 74 விவசாயிகளை உள்ளடங்கிய 19.49 லட்சத்திற்கு தீர்வு காணப்படவில்லை. 

    புதுவை,  காரைக்கால், ஏனாம் பகுதிகளில் காரீப் 2020--21, ராபி 2020--21 நிலுவையில் உள்ள மதீப்பிட்டை வழங்கவில்லை. மத்திய வேளாண் மந்திரி இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி புதுவையில் உள்ள விவசாயிகளின் பயிர் காப்பீடு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    காரைக்கால் அருகே நாயை குளிப்பாட்ட சென்ற பிளஸ்-2 மாணவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் வேட்டக்காரன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மதுபான கடைகளின் பங்குதாரராக இருந்து வருகிறார். இவரது மனைவி கவுரி மனோகரி. நெடுங்காடு பால்பவன் இசை ஆசிரியை. இவர்களது மகன் கவுசிக் (வயது 17). காரைக்கால் தருமபுரம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி குளத்துமேடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் தனது நாயை குளிப்பாட்ட நண்பர்களுடன் கவுசிக் சென்றார்.

    பின்னர் நாயை குளிப்பாட்ட குளத்தில் கவுசிக் இறங்கினார். அப்போது நாய் திடீரென நீச்சல் அடித்தபடி குளத்தின் உள் பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசிக், நாயை பிடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

    இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டார். உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    பிணமாக மீட்பு

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய கவுசிக்கை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரை பிணமாக மீட்டனர். அண்மையில் குளம் தூர் வாரப்பட்டதால் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி கவுசிக் இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படை யினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாயை குளிப்பாட்ட சென்ற இடத்தில் பிளஸ்-2 மாணவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    தனக்கு உணவு அளித்த தெருவாசிகளுக்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டையில் பாரதிதாசன் நகர் உள்ளது. அங்குள்ள 3-வது குறுக்கு தெருவில் இன்று அதிகாலை 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சாலையிலிருந்து வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது.

    அப்போது அங்குள்ள தெருநாய் குரைத்து பாம்பை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்தது. பாம்பை கடிக்க நாய் முயற்சித்தது. ஆனால் பாம்பு நாயை கடித்தது. ஒன்றைறொன்று கடித்து கொன்றதால் பாம்பு, நாய் இரண்டும் சாலையில் இறந்து கிடந்தது.

    பாம்புடன் நாய் சண்டையிட்ட போது அப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இந்த காட்சியை கண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தனர். தனக்கு உணவு அளித்த தெருவாசிகளுக்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




    பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கருப்பட்டி, வேர்க்கடலை, நவதானியம், வாழைப்பழம் வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மேம்படுத்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மதிய உணவு திட்டத்தில் நவ தானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை சேர்ப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை செய்து கொடுத்து ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதலும் வழங்கினேன்.

    புதிய கல்விக்கொள்கைகளின்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவதோடு அதை கண்காணிப்பதும் வலியுறுத்தப்படுகிறது.

    வருகிற 2023-ம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு விவசாய அமைப்பு உலக நாடுகளுடன் கொண்டாட இருக்கின்றது. அதை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×