என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவுக்கு ஒருவர் பலி
புதுவையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
புதுச்சேரி:
புதுவையில் 10-ந்தேதி 2 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 91, காரைக்காலில் 42, ஏனாமில் 9, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 32, காரைக்காலில் 16, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 56 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 479, காரைக்காலில் 142, ஏனாமில் 37, மாகியில் 3 பேர் என 661 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 121 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் ஆயிரத்து 88, காரைக்காலில் 725, ஏனாமில் 101, மாகியில் 25 பேர் என ஆயிரத்து 937 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை பெரிய காலாப்பட்டை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 52 ஆயிரத்து 190 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






