என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    15 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பாகூரில் ரூ.1 கோடியில் புதிய பஸ் நிலையத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை பாகூர், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பஸ்நிலையம் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மக்கள் எளிதில் சென்றுவரலாம் என அரசியல்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

    பாகூரில் பஸ் நிலையம் இல்லாததால் காத்திருக்கும் மக்கள் போதிய இடவசதியின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மழைகாலத்தில் பொதுமக்கள் பஸ்களில் ஏற, இறங்க அவதிக்குள்ளாகினர். 

    இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. சட்டமன்றத்திலும் அப்பகுதி எம்.எல்.ஏ.க்கள் பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தி வந்தனர். பலமுறை சட்டமன்றத்தில் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. 

    இந்த நிலையில் பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. பாகூர் மூலநாதர் சாமி கோவில் அருகே 511 சதுர மீட்டர் பரப்பளவில் 4 பஸ்கள் நிற்கும் வசதியுடன் ரூ.ஒரு கோடியே 69 லட்சம் செலவில் பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் பூமி பூஜை விழா நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பணிகளை தொடங்கி வைத்தார். 

    இந்த பஸ் நிலையம் மூலம் அரங்கனூர், பின்னாசிக்குப்பம், கீழ்பரிக்கல்பட்டு, மேல்பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், இருளன்சந்தை, கடுவனூர், கரையாம்புத்தூர், மணப்பேட், குருவிநத்தம், மடுகரை, பனையடிக்குப்பம், மணமேடு ஆகிய பாகூரை சுற்றியுள்ள 15 கிராம மக்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவர்.
    91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 12-ந் தேதி 1758 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 91 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 52 பேருக்கும்,  காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும் மாகியில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேரும், கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 6 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மருத்துவமனையில் 42 பேரும், வீட்டு தனிமையில் 1255 பேரும் என ஒட்டு மொத்தமாக 1295 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 375 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 

    இதில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 989 பேர் குணமடைந்துள்ளனர். 1957 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

    இத்தகவல்களை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
    புதுவையில் வேட்டையாடப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பறவை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    விழுப்புரம் வனப்பிரிவு மற்றும் தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பில் ஆசிய நீர் பறவைகள் கணக் கெடுப்பு பணி ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் நடத்தப்பட்டது. 

    அப்போது வில்லியனூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு புகார் வந்தது. 

    இதனையடுத்து  அவர்கள் இரு பிரிவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பத்துத்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக்காக பறவைகள் வேட்டையாடி விற்கப்பட்டது தெரியவந்தது.

    விற்பனை செய்தவர்கள் பறவைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 53 இறந்த பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ25 ஆயிரம் ஆகும். 

    இதில் நத்தை குத்தி நாரை 6, ஆள்காட்டி குருவி 1, சிறிய கொக்கு 2, உன்னி கொக்கு7, குருட்டு கொக்கு 11, வெள்ளை அறிவால் மூக்கன், 13, ஜொலி ஜொலிக்கும் அரிவாள் மூக்கன் 5,  லக்கா 3, ஆகியவை இறைச்சியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் 13 கிளிகள் உயிருடன் பிடி பட்டது.

    இதனிடையே வீட்டில் கிளிகள் வைத்திருப்பவர்கள் அதனை தாமாக முன்வந்து புதுவை வனம் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    வில்லியனூரில் ஸ்டூடியோவை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த சிவரந்தகம் பகுதியைச் சேர்ந்தவர்  ராஜ்குமார் (வயது 31).  இவர் வில்லியனூர் மேற்கு மாடவீதியில் சிறுவர்கள் விளையாடும்  ஸ்டூடியோ நடத்தி வருகிறார். 

    ராஜ்குமார் வழக்கம் போல் (12--ந் தேதி) ஸ்டூடியோவை மூடிவிட்டு சென்றார். காலை வந்து பார்த்த போது ஸ்டூடியோ ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    உள்ளே இருந்த 2 பெரிய டி.வி., 5 வீடியோ பிளேயர், கேம் சிடி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது  இதுகுறித்து வில்லியனூர் போலீஸ்  நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது கொள்ளை போன ஸ்டுடியோவில் மங்கி குல்லா அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் சுமார் அரை மணி நேரத்திற்குள் விலை உயர்ந்த டிவிக்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது பதிவாகியிருந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 பேரில் ஒருவர் கடையின் உள்ளே பொருட்களை திருடுவதும், மற்றொருவர் கடையின் வெளியே யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட்டவாறு இருந்துள்ளார். 

    ஸ்டுடியோவுக்கு இருந்த அனைத்து பொருட்களையும் ஒரு கோணிப்பையில் கட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்து  எடுத்து சென்றுள்ளனர். 

    சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

    ஏற்கனவே வில்லியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் நகை&பணம் திருடுவதும் நகை பறிப்பில் ஈடுபடுவது தொடர்கதையாகி உள்ள நிலையில், தற்போது வில்லியனூரில் எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிலேயே  கடையை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    தி.மு.க.பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் குற்றவாளியை நெருங்கி விட்டனர் தனிப்படை போலீசார்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் 2-வது நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்ளின் (59). பொதுப்பணித்துறை காண்டிராக்டர். தி.மு.க. பிரமுகர்.

    பிராங்ளின் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது மனைவி குளோதினி, பேரன், பேத்திகள் மட்டும் இருந்தனர்.அப்போது  மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடி குண்டுகளை பிராங்ளின் வீடு மீது அடுத்தடுத்து வீசியதில்பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

    சம்பவ இடத்தை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில்  ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ்,  சப்&இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

    குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது,அதன் அடிப்படையில்  அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற சதிஷ் (வயது23) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் விக்னேஷ் குடும்பத்துக்கு பிராங்ளின் சில உதவிகளை செய்து வந்துள்ளார். விக்னேஷ் சமையல்  தொடர்பாக  படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்துள்ளார். இந்தநிலையில் மறுபடியும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக பிராங்ளினிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பிராங்ளினால் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் நாட்டு வெடிகுண்டை பிராங்ளின் வீடு மீது வீசி சென்றதாக  தெரியவந்தது.

    தலைமறைவாக   உள்ள விக்னேசை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுவை மட்டுமின்றி தமிழகத்திலும் விக்னேசை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.இந்தநிலையில் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை அறிந்த  தனிப்படை போலீசார் அந்த இடத்திற்கு செல்லும் போது அவர் தனது இருப்பிடத்தை மாற்றி, மாற்றி தலைமறைவாகி வருகிறார். 

    இதற்கிடையை இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்காக பிடித்து வைத்துள்ள நபரில் ஒருவர் முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்தில் வேறொரு வழக்கில் விக்னேசுடன் சம்பந்தப்பட்டவர் என கூறப்படுகிறது.ஓரிரு நாளில் வெடிகுண்டு வீசிய விக்னேசை தனிப்படை கைது செய்து விடுவார்கள் என தெரிகிறது.
    ஜவுளிக்கடையில் பணத்தை திருடி விட்டு டிப்-டாப் உடையுடன் நடந்து செல்லும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் பிரபலமான ஜவுளிக்கடை உள்ளது.

    இந்த கடையில் கடந்த சில நாட்களுக்க முன் ரூ. 1.70 லட்சம் திருட்டு போனது. இது குறித்து ஜவுளிக்கடை மேலாளர் செந்தில்குமார் பெரிய கடை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜவுளிக்கடையில் சோதனை செய்த போது மொட்டை மாடி வழியாக  கடையின் லிப்ட் கதவை கொள்ளையன் விலக்கி அதன் வழியாக உள்ளே புகுந்து இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்போது ஜவுளிக்கடையில் பணத்தை திருடிய மர்ம நபர் டிப்-டாப் உடையுடன் கல்லூரி மாணவர் போல்  சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    அந்த புகைப்படத்தை சேகரித்த போலீசார் புதுவை மற்றும் தமிழக போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து குற்றவாளி குறித்து அடையாளம் தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.

    இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    அரியாங்குப்பம் அருகே கட்டிட தொழிலாளிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு கார்கில்நகரை சேர்ந்தவர் எட்வர்ட் எடிசன்(வயது43). கட்டிட தொழிலாளி. இவரும் அதேபகுதியை சேர்ந்த போஸ்கோ(30) ஆகிய இருவரும் கடந்த 4 நாட்களாக சின்னவீராம்பட்டினத்தில் ஒரு தனியார் தென்னந் தோப்பில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

    இருவரும் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ், சாரதி, இக்பாஸ், கலைமாறன் ஆகிய 4 பேர் குடிபோதையில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து  எட்வர்ட் எடிசன் மற்றும்  போஸ்கோவிடம் தண்ணீர் கேட்டனர். அதற்கு அவர்கள் தண்ணீர் இல்லை என்று கூறி விட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தண்ணீர் இல்லாத இடத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என கேட்டு தகராறு செய்து அங்கிருந்த மண்வெட்டி மற்றும் பூசு வேலைக்கு பயன்படுத்தும் மரக்கட்டையால் எட்வர்ட் எடிசனையும், போஸ்கோவையும் சரமாரியாக தாக்கினார்.

    மேலும் 2 பேரையும் மண் வெட்டியால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன எட்வர்ட் எடிசனும், போஸ்கோவும் அலறல் சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரும் தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் படுகாயமடைந்த எட்வர்ட் எடிசன், போஸ்கோ 2பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
     
    இதுகுறித்து எட்வர்ட் எடிசன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூத்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
    காதலர் தின கொண்டாட்டத்துக்கு புதுவை அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.  இந்து மக்கள் கட்சியின் புதுவை மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-

    புதுவை மாநிலத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியின் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் என்ற போர்வையில் புதுவை மாநிலம் முழுவதும் கலாச்சாரத்தை   சீரழித்து வரும் காதலர் தினத்தை உடனடியாக புதுவை அரசு தடை விதிக்க வேண்டும்.

    இது மட்டுமின்றி  புனிதம் கெட்டுப்போகும் வகையில் புதுவையை நோக்கி வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள் மது குடித்து விட்டு அரைகுறை ஆடைகளால் இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் உள்ளது. 

    இதனை கருத்தில் கொண்டு புதுவை அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மாபெரும் வெற்றியடையும்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கும்பகோணத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்து கொண்டு நேற்று இரவு புதுவை சன்வே ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அவர் புறப்பட்டார்.

    முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நிற்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. உள்ளது

    இத்தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மாபெரும் வெற்றியடையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுவையிலிருந்து புறப்பட்ட அவரை கடலூர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி புதுவை எல்லையில் மது விற்பனை அதிகரித்து உள்ளது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    புதுவையை ஒட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு மது சப்ளை செய்ய புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்பதை பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதுவையில் இருந்து கடத்தி சென்ற மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    புதுவையில் முன்பு தமிழகத்தை விட மதுவின் விலை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கொரோனா வரி உள்ளிட்டவைகளால் புதுவையில் மது விலை அதிகரித்து உள்ளது.

    ஆனால் ஒரு சில ரக மது தமிழகத்தை விட மிக குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதனால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மது பிரியர்கள் புதுவை வந்து மது அருந்தி செல்கின்றனர்.

    தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி புதுவை எல்லையில் மது விற்பனை அதிகரித்து உள்ளது.

    கடலூர் மாவட்ட எல்லை பகுதியான கன்னியக்கோவில், விழுப்புரம் மாவட்ட எல்லையான மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மது, சாராயம், கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. சில மது பிரியர்கள் போலீசாருக்கு தெரியாமல் அதிக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தமிழகத்தை விட புதுவையில் மது விலை சற்றுதான் குறைவாக உள்ளது. இதனால் விற்பனை ஓரளவுதான் இருக்கிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சமயத்தில் புதுவையில் மது விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.


    புதுவையில் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல் &அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்  குயவர் பாளையம் லெனின் வீதியில்  உள்ள மேற்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அவைத்தலைவர் பேராசிரியர்  ராமதாஸ் தலைமை தாங்கினார். மேற்கு மாநில செயலாளர் ஒம்சக்தி சேகர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஜெயலலிதாவின் சிலையை புதுவையில் அமைப்பதற்கான அறிவிப்பை  முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும். சிலை தொடர்பாக கவர்னர், முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது.

    ஜெயலலிதா பிறந்த நாளை  மாதம் முழுவதும்  11 தொகுதிகளில்  ஏழை& எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம், ஆடைதானம், மிதிவண்டி, தட்டுவண்டி, பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது.

    புதுவையிலும் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத  ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 

    ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பாண்லே மூலம் 24 மணி நேரமும் செயல்படும் பாலகம் மற்றும் உணவகம் அமைக்கவும், சுற்றுலா பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் மட்டும் அனைத்து கடைகளும் 24 மணி நேரம் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு வருவாய் கிரா மங்களை பிரிப்பது போல மின்வருவாய் பிரிவுகளையும், போலீஸ் நிலையங்களையும் இப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
    பாகூரில் நடந்த நீர் திருவிழாவை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நீர்நிலைகளை பாதுகாக்கவும்,  நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நீர் திருவிழா மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூரில்   நீர் திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். செயலர் முனியன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பாகூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு நீர் குட ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நீர் குட விழிப்புணர்வு பேரணி பாகூர் மாடவீதிகள் வழியாக நடைபெற்றது.

    பாகூர் பிள்ளையார் கோவில், சிவன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் வழிபாட்டிற்கு பின்னர் நீர்க்குடம்   குருவிநத்தம் குழுவிடம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தி.மு.க. செயலாளர் அரிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தயாளன், மணிவண்ணன், கிரி, கோபு, கலியமூர்த்தி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×