என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜவுளிக்கடையில் திருடிய டிப்-டாப் வாலிபர் சாலையில் நடந்து செல்லும் காட்சி.
ஜவுளிக்கடையில் பணம் திருடி விட்டு ரோட்டில் நடந்து செல்லும் வாலிபர்
ஜவுளிக்கடையில் பணத்தை திருடி விட்டு டிப்-டாப் உடையுடன் நடந்து செல்லும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில் பிரபலமான ஜவுளிக்கடை உள்ளது.
இந்த கடையில் கடந்த சில நாட்களுக்க முன் ரூ. 1.70 லட்சம் திருட்டு போனது. இது குறித்து ஜவுளிக்கடை மேலாளர் செந்தில்குமார் பெரிய கடை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜவுளிக்கடையில் சோதனை செய்த போது மொட்டை மாடி வழியாக கடையின் லிப்ட் கதவை கொள்ளையன் விலக்கி அதன் வழியாக உள்ளே புகுந்து இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஜவுளிக்கடையில் பணத்தை திருடிய மர்ம நபர் டிப்-டாப் உடையுடன் கல்லூரி மாணவர் போல் சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
அந்த புகைப்படத்தை சேகரித்த போலீசார் புதுவை மற்றும் தமிழக போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து குற்றவாளி குறித்து அடையாளம் தெரிந்தால் உடனே தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story






