என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஸ்டூடியோவை உடைத்து கொள்ளை
வில்லியனூரில் ஸ்டூடியோவை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த சிவரந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). இவர் வில்லியனூர் மேற்கு மாடவீதியில் சிறுவர்கள் விளையாடும் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
ராஜ்குமார் வழக்கம் போல் (12--ந் தேதி) ஸ்டூடியோவை மூடிவிட்டு சென்றார். காலை வந்து பார்த்த போது ஸ்டூடியோ ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே இருந்த 2 பெரிய டி.வி., 5 வீடியோ பிளேயர், கேம் சிடி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது கொள்ளை போன ஸ்டுடியோவில் மங்கி குல்லா அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் சுமார் அரை மணி நேரத்திற்குள் விலை உயர்ந்த டிவிக்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது பதிவாகியிருந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 பேரில் ஒருவர் கடையின் உள்ளே பொருட்களை திருடுவதும், மற்றொருவர் கடையின் வெளியே யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட்டவாறு இருந்துள்ளார்.
ஸ்டுடியோவுக்கு இருந்த அனைத்து பொருட்களையும் ஒரு கோணிப்பையில் கட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்து சென்றுள்ளனர்.
சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ஏற்கனவே வில்லியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் நகை&பணம் திருடுவதும் நகை பறிப்பில் ஈடுபடுவது தொடர்கதையாகி உள்ள நிலையில், தற்போது வில்லியனூரில் எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிலேயே கடையை உடைத்து கொள்ளையர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






