search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் திருவிழாவை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
    X
    நீர் திருவிழாவை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    நீர் திருவிழா-செந்தில்குமார் எம்.எல்.ஏ.பங்கேற்பு

    பாகூரில் நடந்த நீர் திருவிழாவை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நீர்நிலைகளை பாதுகாக்கவும்,  நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் நீர் திருவிழா மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூரில்   நீர் திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். செயலர் முனியன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பாகூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு நீர் குட ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நீர் குட விழிப்புணர்வு பேரணி பாகூர் மாடவீதிகள் வழியாக நடைபெற்றது.

    பாகூர் பிள்ளையார் கோவில், சிவன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் வழிபாட்டிற்கு பின்னர் நீர்க்குடம்   குருவிநத்தம் குழுவிடம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தி.மு.க. செயலாளர் அரிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தயாளன், மணிவண்ணன், கிரி, கோபு, கலியமூர்த்தி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×