என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கட்டிட தொழிலாளிகளை தாக்கி கொலை மிரட்டல்
அரியாங்குப்பம் அருகே கட்டிட தொழிலாளிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டு கார்கில்நகரை சேர்ந்தவர் எட்வர்ட் எடிசன்(வயது43). கட்டிட தொழிலாளி. இவரும் அதேபகுதியை சேர்ந்த போஸ்கோ(30) ஆகிய இருவரும் கடந்த 4 நாட்களாக சின்னவீராம்பட்டினத்தில் ஒரு தனியார் தென்னந் தோப்பில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இருவரும் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ், சாரதி, இக்பாஸ், கலைமாறன் ஆகிய 4 பேர் குடிபோதையில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து எட்வர்ட் எடிசன் மற்றும் போஸ்கோவிடம் தண்ணீர் கேட்டனர். அதற்கு அவர்கள் தண்ணீர் இல்லை என்று கூறி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் தண்ணீர் இல்லாத இடத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என கேட்டு தகராறு செய்து அங்கிருந்த மண்வெட்டி மற்றும் பூசு வேலைக்கு பயன்படுத்தும் மரக்கட்டையால் எட்வர்ட் எடிசனையும், போஸ்கோவையும் சரமாரியாக தாக்கினார்.
மேலும் 2 பேரையும் மண் வெட்டியால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன எட்வர்ட் எடிசனும், போஸ்கோவும் அலறல் சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரும் தப்பியோடி விட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த எட்வர்ட் எடிசன், போஸ்கோ 2பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து எட்வர்ட் எடிசன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூத்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
Next Story






