என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டுமான பணியை தொடங்கி  அமைச்சர் லட்சுமிநாராயணன்  தொடங்கி வைத்தார்.
    X
    கட்டுமான பணியை தொடங்கி அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்.

    பாகூரில் ரூ.1கோடியில் புதிய பஸ் நிலையம்- அமைச்சர் லட்சுமி நாராயணன் பணிகளை தொடங்கி வைத்தார்

    15 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பாகூரில் ரூ.1 கோடியில் புதிய பஸ் நிலையத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை பாகூர், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பஸ்நிலையம் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மக்கள் எளிதில் சென்றுவரலாம் என அரசியல்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

    பாகூரில் பஸ் நிலையம் இல்லாததால் காத்திருக்கும் மக்கள் போதிய இடவசதியின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மழைகாலத்தில் பொதுமக்கள் பஸ்களில் ஏற, இறங்க அவதிக்குள்ளாகினர். 

    இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. சட்டமன்றத்திலும் அப்பகுதி எம்.எல்.ஏ.க்கள் பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தி வந்தனர். பலமுறை சட்டமன்றத்தில் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. 

    இந்த நிலையில் பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. பாகூர் மூலநாதர் சாமி கோவில் அருகே 511 சதுர மீட்டர் பரப்பளவில் 4 பஸ்கள் நிற்கும் வசதியுடன் ரூ.ஒரு கோடியே 69 லட்சம் செலவில் பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் பூமி பூஜை விழா நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பணிகளை தொடங்கி வைத்தார். 

    இந்த பஸ் நிலையம் மூலம் அரங்கனூர், பின்னாசிக்குப்பம், கீழ்பரிக்கல்பட்டு, மேல்பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், இருளன்சந்தை, கடுவனூர், கரையாம்புத்தூர், மணப்பேட், குருவிநத்தம், மடுகரை, பனையடிக்குப்பம், மணமேடு ஆகிய பாகூரை சுற்றியுள்ள 15 கிராம மக்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைவர்.
    Next Story
    ×