என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சச்தி சேகர் பேசிய காட்சி.
ஜெயலலிதா சிலை அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்-அ.தி.மு.க. வலியுறுத்தல்
புதுவையில் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல் &அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம் குயவர் பாளையம் லெனின் வீதியில் உள்ள மேற்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
அவைத்தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மேற்கு மாநில செயலாளர் ஒம்சக்தி சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெயலலிதாவின் சிலையை புதுவையில் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும். சிலை தொடர்பாக கவர்னர், முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது.
ஜெயலலிதா பிறந்த நாளை மாதம் முழுவதும் 11 தொகுதிகளில் ஏழை& எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அன்னதானம், ஆடைதானம், மிதிவண்டி, தட்டுவண்டி, பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது.
புதுவையிலும் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஜிப்மர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பாண்லே மூலம் 24 மணி நேரமும் செயல்படும் பாலகம் மற்றும் உணவகம் அமைக்கவும், சுற்றுலா பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் மட்டும் அனைத்து கடைகளும் 24 மணி நேரம் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு வருவாய் கிரா மங்களை பிரிப்பது போல மின்வருவாய் பிரிவுகளையும், போலீஸ் நிலையங்களையும் இப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






