என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி: 

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் அண்ணா சிலை அருகே மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர்முருகன், தமிழ் மாநிலக்குழு பெருமாள், மத்தியக்குழு சுதாசுந்தர்ராமன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், சத்யா, தமிழ்செல்வன், கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ஆனந்து, சங்கர், இளவரசி, மதிவாணன், ராம்ஜி, சஞ்சைசேகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் மக்களிடையே பிளவு வாதத்தை   ஏற்படுத்தும் மத்திய பா.ஜனதா  அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
    Next Story
    ×