என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியாங்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தபோது எடுத்த படம்.
அரியாங்குப்பம் பகுதியில் வரி பாக்கி செலுத்தாத திருமண மண்டபத்துக்கு சீல்
அரியாங்குப்பம் பகுதியில் வரி பாக்கி செலுத்தாத கடை மற்றும் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர், வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உடனடியாக செலுத்தவும் புதுப்பித்துக்கொள்ளவும் ஆணையர் ரமேஷ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத் திருந்தார்.
இதில் சிலர் மட்டுமே வரி பாக்கி செலுத்தினர் மற்றவர்கள் வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிரடியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.2 லட்சம் வரை வரி பாக்கி செலுத்தாதவர்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நவீன வசதியுடன் கூடிய திருமண மண்டபமும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருந்ததால் அந்த மண்டபம் ஆனையர் ரமேஷ், மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், பில் கலெக்டர் கந்தவேல், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள் தொடங்க ஏதுவாக வரிபாக்கியை செலுத்த ஆணையர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story






